பிலவ வருட புத்தாண்டு பலன்கள்-கன்னி ராசி
கலகலப்பாகப் பேசி மற்றவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் கன்னிராசி அன்பர்களே!!!
இசை, வாசனை, தூய்மை ஆகியவற்றை விரும்பும் நீங்கள் மற்றவர்களுக்கு ஆலோசனை அளிப்பதில் வல்லவரான உங்களுக்கு இந்தப் பிளவு வருடம் எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்பதை பார்ப்போம்.
உங்களுக்கு எட்டாவது ராசியில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. எட்டாவது ராசி நஷ்டம், விரயம், அலைச்சல் ஆகியவற்றை தரும் என அஞ்ச வேண்டாம். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.
- வெள்ளை மனசு கொண்ட நீங்கள் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது
- அடுத்தவர்களின் குறைகளைக் தனியாக அழைத்துச் சென்று சுட்டிக்காட்டுங்கள்
- மற்றவர்களின் நல்ல குணங்களையும் திறமைகளையும் பாராட்டுங்கள்
- கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்
- சின்ன சின்னதாக உடல்நலக் குறைவுகள் வந்து போகும்
- மனைவிக்கு சில வருடங்கள் முன்பே செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை உடனே செய்ய வேண்டி வரும் ஆனால் பெரிதாக ஆபத்து வராது கவலைப்படாதீர்கள்
- குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, விட்டுக் கொடுத்துப் போவது நல்லது
- உணவு பழக்க வழக்கங்களை முறைப்படுத்துங்கள்
- கனவுத் தொல்லை, அடி மனதில் பயம் ஆகியன வந்து நீங்கும்
- அவ்வப்போது யோகா, தியானம் செய்யுங்கள்
- பிள்ளைகள் பொறுப்பாக நடப்பர் அவர்களுக்கு உயர்கல்வி அல்லது உத்தியோகம் தொடர்பாக வெளிநாட்டு வாய்ப்புகள் வரும்
- தடைபட்ட திருமணம் நடக்கும் உங்களையும் மகளை பெண் பார்த்துவிட்டு நீண்ட நாள்களாக பதில் தராமல் தயங்கி அவர்கள் இப்போது வலிய வந்து பெண் கேட்டு திருமணம் உடனே முடியும்
- மகனுக்கு நல்ல மணப்பெண் அமையும்
- சகோதரிகளிடம் நிதானமாகவும் அளவாகப் பழகுவது நல்லது
- உடன்பிறந்தவர்களால் அலைச்சலும் செலவும் வந்துபோகும்

செல்ல வேண்டிய ஆலயம்
இந்த புத்தாண்டில் கன்னி ராசி அன்பர்களுக்கு அம்பாள் வழிபாடு அளவற்ற நன்மை அளிப்பதாக அமையும்.
பவுர்ணமி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம் படிப்பதும், வீட்டில் விளக்கேற்றி சர்க்கரைப்பொங்கல் சமர்ப்பித்து காமாட்சி அம்மனை தியானித்து வழிபடுவதும் சிறப்பு.
குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மனை தரிசித்து வழிபட்டு வந்தால் இன்னல்கள் நீங்கும் புது முயற்சிகள் வெற்றி பெறும்.
இயலாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று குங்குமம் வாங்கி அளிக்கலாம் விளக்கு பூஜைகளில் கலந்துகொண்டு வழிபட்டு வரலாம்.
நன்றியுடன்!
சிவா.சி
✆9362555266