புதனும்-திருமணமும்
லக்கினத்திற்கு 7 – ல் புதன்
- லக்கினத்திற்கு 7 – ல் புதன் நல்ல மனைவி வாய்ப்பாள்.
- மனைவி வகை சொத்து உண்டு.
- அநேகர் தாய் மாமன் புதல்வியை மணம் புரிவர்.
- குதிரை வாகனம் அமையும்.
- அந்திம காலத்தில் பெயரும் – புகழும் ஏற்படும்.
- எல்லோரிடத்தும் அனுசரணையாக நடக்கக் கூடியவளும் , லக்ஷ்மிகடாட்சம் பொருந்தியவளாகவும் , வீட்டுக்கு வரும் விருந்தினர் அல்லது மற்றவர்களை அன்போடு உபசரித்து போஜனம் தருதல் ,தெய்வ பக்தி உடைய மனைவி அமைவாள்.
- தாயாருக்கும் . கால்நடைகளுக்கும் , உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
- புதன்-சந்திரன் கூடிடில் பெண் பித்தன்.
- ரிஷப ராசியில் புதன் 7 மிடமாக அமைந்தால் முதல் தாரம் நாசம் அடையும்.
- கேது கூடிடில் ஸ்தூல தேகமுள்ள மனவி உத்தியோகமுடையவள் ஆகவும் இருக்கலாம்.
- சந்திரனோ , புதனோ , நீச்சமானாலோ அல்லது சேர்க்கையில் பார்வையில் கெட்டுப்போனாலோ மகன்கோளாறு உள்ள மனைவியும் அமையுைம்.
- சிலருக்கு நரம்புத் தளர்ச்சி உள்ள கணவனோ , மனைவியோ அமையும் .
- இவர்களுக்கு திடீர் கோபம் தோன்றி , செய்யும் காரியத் தைக் கெடுப்பார்.
- தர்ம காரியங்களில் ஆழ்ந்த பற்றுடையவர்.
- தாய் சுகம் அதிகம் உள்ளவர்.
- 70 வயது வரை ஆயுளுண்டு.
- அழகாக அலங்கரித்துக் கொள்ளல் , நடுத்தர வயதில் பெண் நோய் – வீம்பு பேசும் குணம் , தகாத முறையில் உடல் உறவு கொள்ளல் , ஆனால் கல்வியில் சிறந்து விளங்குவார்.
- கை கால் ஊனமாகும் வாய்ப்பு உண்டு .
- இவர் தசா புத்தியில் உடலில் ஹீனமேற்படல் , களத்திர உறவினர் துவேஷம் அரசு வழி கோபம் , திடீர் மரண பயமும் உண்டாகும்.
- தாய்ப்பால் அதிகமுள்ள மனைவி அமைவாள் .
மனைவி வரும் திக்கு-வடக்கு ( தாய்வழியில் ) ஸ்தானாதிபதி கிரகத்தைப் பொறுத்து பலன் மாறும் .
மனைவி நிறம் -மேக வர்ண சரீரம் .
மனைவியின் குணம் – எல்லோரையும் அனுசரிக்கும் குணம் .
மனைவி இருக்கும் தூரம்-சுமார் இருநூறு மைல் தொலைவுக்குள்.
கணவன் அல்லது மனைவி தொழில் – அரசாங்க உத்தியோகம் அல்லது தனியார் துறையில் கணக்கர் அல்லது வியாபாரி .