பூர்வ புண்ணிய பலத்தை அதிகரிக்கும் அற்புத பரிகராங்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

பூர்வ புண்ணிய பலத்தை அதிகரிக்கும் அற்புத பரிகராங்கள்

மனிதர்கள் இந்தப் பிறவியில் படும் துன்பங்களுக்கு காரணம் நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷமே என்று ஜோதிடம் கூறுகிறது.

நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களைப் போக்க ஐந்தாமதிபதியை வணங்க வேண்டும்.

இனி 12 லக்னத்திற்க்கும் பூர்வ புண்ணியத்தை அதிகரிக்க செய்யும் வழிபாட்டு முறைகளை காணலாம்.

மேஷம்

இவர்களின் ஐந்தாமதிபதி சூரியன் என்பதால் குங்குமப்பூ கலந்த தீர்த்தத்தை தினமும் அருந்த வேண்டும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதுடன், ஆதித்திய ஹ்ருதாயம் கேட்கவேண்டும். மேலும் மலைமேல் அமர்ந்த சிவனை வழிபடுவது நல்லது. குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபட ஆன்ம பலம் அதிகரிக்கும்.

ரிஷபம்

இவர்களின் ஐந்தாமதிபதி புதனால் ஏற்படும் தோஷங்கள் விலக துளசி தீர்த்தத்தை அடிக்கடி பருக வேண்டும். வருடம் ஒருமுறை திருவெண்காடு புதன் ஸ்தலம் சென்று வரவேண்டும். புதன்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் பச்சை பயிறு தானம்தர ஐந்தாமிட குறைபாடுகள் அகலும்.

மிதுனம்

இவர்களின் ஐந்தாம் அதிபதி சுக்கிரன் என்பதால் பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கம் கலந்த தீர்த்தத்தை தினமும் பயன்படுத்தவேண்டும். வருடத்திற்கு இரண்டு முறை திருமயிலை கபாலீஸ்வரர் சமேத கற்பகாம்பாளை வழிபட பூர்வஜென்ம குற்றம் குறையும். வெள்ளிக்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து பஞ்சாட்சர மந்திரம் சொல்ல வேண்டும்.

கடகம்

கடகத்திற்கு ஐந்தாமிடம் விருச்சகம். இதன் அதிபதி செவ்வாய் என்பதால் அடிக்கடி பீட்ரூட் சாறு தேன் கலந்து சாப்பிடவேண்டும். வருடத்திற்கு இரண்டு முறை ராமேஸ்வரம் சென்று ஸ்ரீ இராமநாதசுவாமியை வழிபடவேண்டும். செவ்வாய்க்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

சிம்மம்


சிம்ம லக்னத்திற்கு 5-ம் அதிபதி குரு என்பதால் பச்சைகற்பூரம், கற்கண்டு, ஏலக்காய் கலந்த பாலை தினமும் அருந்த வேண்டும். அமாவாசை, பவுர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் சித்தர்கள் ஜீவ சமாதியில் வழிபாடு நடத்த ஆன்ம பலம் பெருகும். வியாழக்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவனுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

கன்னி

மகர ராசியின் அதிபதி சனியை ஐந்தாம் அதிபதியாகக் கொண்ட கன்னியினர் தினமும் குளிர்ந்த நீரில் ஒரு துளி வில்வ இலை பொடி கலந்து சாப்பிடவேண்டும். சந்தர்ப்பம் சாதகமாக இருக்கும் காலங்களில் திருவிடைமருதூர் மகாங்கேஸ்வரரை வழிபட பல ஜென்ம பாவம் கழியும். சனி பிரதோஷ நாட்களில் சிவனுக்கும் நந்திக்கும் வஸ்திரம் சாற்றி வழிபடவும்.

பூர்வ புண்ணிய பலத்தை அதிகரிக்கும் அற்புத பரிகராங்கள்

துலாம்

துலாம் லக்கினத்தின் ஐந்தாமதிபதி சனி பகவான் என்பதால் சனிக்கிழமை பசுவுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் கொடுக்க வேண்டும். திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் வழிபாடானது மாற்றத்தையும் ஏற்றத்தையும் அதிகரிக்கும். சனி பிரதோஷ நாட்களில் தயிர் சாதம் தானம் தரவேண்டும்.

விருச்சிகம்

குருவை ஐந்தாமதிபதியாக கொண்ட நீங்கள் புனித நதி மற்றும் கடலில் அடிக்கடி நீராடவேண்டும். திருச்செந்தூர் முருகனை சரணடைந்து ஆத்மார்த்த வழிபாடு செய்ய வேண்டும்.வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாட்களில் சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு லக்னத்திற்கு 5-ம் அதிபதி செவ்வாய் என்பதால் அடிக்கடி மாதுளம் பழச்சாறு அருந்த வேண்டும். இயன்றபோது பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணியை ராஜ அலங்காரத்தில் தரிசிக்கவேண்டும். செவ்வாய்க்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவபெருமானுக்கு அரளி மாலை அணிவித்து வழிபட வேண்டும்.

மகரம்

மகரத்தின் ஐந்தாமதிபதி சுக்கிரன் என்பதால் தினமும் பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காய் கலந்த புனித நீரை அருந்த வேண்டும். வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க வேண்டும். பிரதோஷம் வெள்ளிக்கிழமை வரும் பொழுது சிவனுக்கு தாமரை மாலை அணிவித்து வழிபட வேண்டும்.

கும்பம்

உங்கள் ஐந்தாம் அதிபதி புதன் என்பதால் தினமும் நெல்லிக்காய் சாறு அருந்த வேண்டும். மதுரை மீனாட்சியம்மன் மற்றும் சொக்கநாதரை புதன்கிழமை தரிசிக்கவேண்டும். புதன்கிழமையும் பிரதோஷமும் சேர்ந்த நாளில் வெண்பொங்கல் நிவேதித்து தானம் தரவேண்டும்.

மீனம்

சந்திரன் உங்கள் ஐந்தாம் அதிபதி என்பதால் அடிக்கடி புனித நீராடல் செய்ய ஆத்மசுத்தி ஏற்படும் திருப்பதி வெங்கடாசலபதியை வியாழக்கிழமை பகல் 11:00- 12:00 மணிக்குள் நேத்திர தரிசனம் செய்ய வேண்டும். திங்கள்கிழமையும் பிரதோஷம் வரும் பொழுது சிவனுக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்ய பிறவிப்பிணி தீரும்.

அதிர்ஷ்டத்தால் பணக்காரராக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருமே அதிர்ஷ்டசாலியாக அதிக பணம் உடையவர்களாக வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்கிறது. ஏனோ சிலருக்கு பணத்தை சேர்க்கும் தந்திரவித்தை கடைசிவரை தெரியாமலேயே போகிறது.

மேற்கூறிய வழிபாட்டு முறைகளை பயன்படுத்தினால் ஒரு ரூபாய் கூட எதிர்காலத்திற்காக சேமித்து கொள்ளாதவர்கள் கையில் பணம் சேரும், வருமானம் இல்லாதவர்களுக்கு வருமானம் தானாக தேடி வரும்.

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …

Astrosiva telegram


Leave a Comment

error: Content is protected !!