Homeநட்சத்திர ரகசியங்கள்பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

இன்றைய கால கட்டத்தில் திருமண பொருத்தம் மிக அவசியமாக இருக்கிறது.பொருத்தம் இல்லாத ஜாதகங்களை இணைப்பதின் மூலமாக திருமண வாழ்வில் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.27 பெண் நட்சத்திரங்களுக்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் எவை என்பதை இந்த பதிவில் கொடுத்துள்ளேன்.

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

பெண் நட்சத்திரம் பொருந்தும் ஆண் நட்சத்திரம்
அசுவினி ரோகிணி ,திருவாதிரை ,பூசம்,சதயம்
பரணி மிருகசீரிடம்,புனர்பூசம் ,மகம் ,ரேவதி
கிருத்திகை திருவாதிரை ,சுவாதி ,சதயம்,பூசம் ,அனுஷம்,உத்திரட்டாதி,மகம் ,பரணி ,பூரம்
ரோகிணி புனர்பூசம் ,கார்த்திகை,உத்திரம் ,மிருகசீரிடம்
மிருகசீரிடம் ரோகிணி ,பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி ,உத்திரம்
திருவாதிரை பூரம் ,பரணி ,மூலம் ,சித்திரை ,ஹஸ்தம் ,ரோகிணி
புனர்பூசம் அசுவினி ,பரணி ,ஹஸ்தம்
பூசம் உத்திரம் ,சித்திரை ,விசாகம்
ஆயில்யம் உத்திரம் ,சித்திரை ,விசாகம்
மகம் பூரம் ,ஹஸ்தம் ,சுவாதி ,திருவாதிரை ,சதயம் ,அவிட்டம்
பூரம் சித்திரை ,விசாகம் ,கேட்டை ,அசுவினி
உத்திரம் சுவாதி ,திருவாதிரை ,அனுஷம் ,பூசம் ,உத்திரட்டாதி
ஹஸ்தம் புனர்பூசம் ,கேட்டை ,பூராடம்
சித்திரை மூலம் ,உத்திராடம் ,உத்திரம் ,மிருகசீரிடம்
சுவாதி கேட்டை ,பூராடம் ,திருவோணம்,ரோகினி மகம்
விசாகம் சித்திரை ,மூலம் ,உத்திராடம்
அனுஷம் பரணி ,பூரம் ,கேட்டை,திருவோணம்
கேட்டை அனுஷம் ,உத்திராடம் ,உத்திரம் ,மிருகசீரிடம்
மூலம் திருவோணம்,ரோகிணி,ஹஸ்தம்,சதயம் ,திருவாதிரை
பூராடம் அவிட்டம் ,மிருகசீரிடம்,பூரட்டாதி ,திருவோணம்
உத்திராடம் சதயம்,திருவாதிரை,உத்திரட்டாதி
திருவோணம் பூராடம் ,பரணி ,ரேவதி ,
அவிட்டம் பூரட்டாதி ,உத்திரட்டாதி,அசுவினி ,மகம் ,
சதயம் அசுவினி ,மகம் ,ரேவதி ,பரணி
பூரட்டாதி அவிட்டம் ,அசுவினி ,மகம் ,உத்திரட்டாதி
உத்திரட்டாதி பரணி ,உத்திராடம் ,உத்திரம்
ரேவதி அசுவினி ,பரணி ,கிருத்திகை ,உத்திராடம்

மேற்கண்டவைகளை உடனுக்குடன் பரிசீலிக்கலாம். பொதுவாக மணப்பெண் மணமகனை விட 6 வயதாவது சிறியவராய் இருத்தல் நலம். பெண் சுவாதி, ஆண் ஹஸ்தம் சேரும். ஆனால் பெண் ஹஸ்தம் ஆண் சுவாதி சுமாராய் சேரும். அதேபோல் மணமகன் பரணி, பெண் ரேவதி சேராது. ஆனால், பெண் பரணி ஆண் ரேவதி என்றால் சேரும்.

சேரும் சேராத நட்சத்திரங்கள் தவிர மற்றவை இரண்டாம் தரம். மீனம் – மிதுனம்- கன்னி – தனுசு இராசிகளில் மணமகள் மணமகன் ஜாதகம் வந்தால் கவனமுடன் பார்ப்பது நல்லது.

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

ஒரு திருமணமே சோதிடரின் கையில் இருப்பதால், வீட்டுக் கவலை, மனஉளைச்சல் இவற்றை மறந்து ஜாதகம் பார்ப்பதைக் கவனமுடன் பார்த்துச் சொல்வது நல்லது.

ஒரு முக்கிய விஷயம்: மணமகள் – மணமகன் முதன் முதலில் சந்திக்கும் இரவில் இருவர் உள்ளமும் ஒருவர் உள்ளமாகும் போது தங்களைச் சேர்த்து வைத்த பெற்றோரையும் சோதிடரையும் வாழ்த்தி நன்றி கூறலாம். சோதிடர்கள் பிறருடைய அன்புக்கும் ஆசிக்கும் ஆளாவார் என்கிறது சாத்திரம்

தொழிலைத் தவறுதலாகச் சொல்லிவிட்டால், தொழிலை மாற்றி விடலாம். ஆனால், பொருத்தங்களைத் தவறுதலாகச் சொல்லி, தாலி கட்டி விட்டால் மாற்ற முடியாது. எனவே, கவனம் தேவை.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!