மீனம் மற்றும் கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்
மீன லக்கினம்:
மனைவி உடல் பலகீனப்படும் . அடிக்கடி சிறுசிறு நோய்கள் தோன்றக்கூடும் .
தொழில் முகாந்திரமாக தொழிலை அனுசரித்து திருமணம் ஆகும் .
தம்பதிகள் ஒருவரையொருவர் சதா கேலியும் , கிண்டலும் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வர் .
வடக்கு – தெற்கு திசையில் இருந்து வரும் மனைவி வாழ்வில் வளம் பல சேர்ப்பாள்.
செவ்வாய் , புதன் , சனி , சந்திரன் தசா புத்தி , அந்தர காலங்களில் திருமணம் நடக்கும் .
2,5,11 ல் இருப்பவர் . பார்த்தவர் தசா புக்தி அந்தர காலங் களில் திருமணம் நடக்கும் .
வரும் மனைவி அழகிய தேகமுள்ளவளாகவும் , புத்திர தோஷம் உள்ளவளாகவும் , பிரியமாக பேசுகின்ற நல்ல வளாகவும் , சத்தியத்தை தனமாக கொண்டவளாகவும் இருப்பாள் .
கும்ப லக்கினம்:
வாழ்க்கையில் போதிய திருப்திரை இவர்களிடம் காண முடியாது .
மனைவியின் குணங்கள் நடைமுறை பாவனைகள் இவரை கவரும் .
அதிகார தோற்றம் , அறிவு . விடா முயற்சி இருக்கும் சுய கெளரவத்தை விட்டுக் கொடுக்காத நிலை , சினிமா நாட்டிய கலை ஆர்வம் மிகுந்து காணும் .
கிழக்கு – தெற்கு திசையில் இருந்து வரும் ஜாதகம் மனைவியாவாள்.
குரு – புதன் – சூரிய தசா புத்தி அந்தர காலங்களில் திருமணம் நடக்கும் .
2,5,7,11 -ல் இருப்பவர் . பார்த்தவர் , தசாபுத்தி அபகார காலத்திலும் திருமணம் நடக்கும்.
வரும் மனைவி தீவிர கபாவம் உள்ளவள் . சபலம் உள்ளவளாகவும் . வெகு தைரியம் கொண்டவள் ஆகவும் , தாழ்ந்த அலங்காரம் , பிறர் வீடு செல்வதில் பற்றுள்ளவள்; சொற்பபுத்திரர் – இளைத்த சரீரம்.