தோஷ பரிகாரங்கள்
நாக தோஷம் உள்ளவர்கள் புடலங்காய் உண்ணாமல் இருந்தால் தோஷம் நிவர்த்தி ஆகும்.
புத்திர தோஷம் உள்ளவர்கள் வியாழக்கிழமை சம்போகம் செய்யாமல் இருந்தால் தோஷம் விலகும். அதேபோல் புனர்பூசம், விசாகம்,பூரட்டாதி நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மனைவி/ கணவர் உறவு இல்லாதிருப்பது பரிகாரமாகும்.
களத்திர தோஷம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமையில் திருமணம் வைத்தால் நலமுறுவர். தோஷம் நீக்கமாகும்.
பித்ரு தோஷம் உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும், மாத்ரு தோஷம் உள்ளவர்கள் திங்கள்கிழமைகளிலும் இஷ்ட தெய்வ ஆராதனை மற்றும் மூதாதையரை நினைவு கூறலால் தோஷம் விலகும்.
மாங்கல்ய தோஷம்,ராகு தோஷம் உள்ளவர் சனிக்கிழமைகளிலும் ,கேது தோஷம் உள்ளவர்கள் புதன்கிழமைகளிலும் இறைவழிபாடு செய்தாலே மாங்கல்ய தோஷம் விலகும்.