எது யோக ஜாதகம்?

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ஜாதகமென்பது ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் வானில் நிலவும் கிரகங்களின் சஞ்சாரத்தை காட்டும் ஒரு குறிப்பு. ஒரு மனிதன் தன் வாழ்வில் அனைத்து விதமான சுப பலன்களையும் அடைய சுயஜாதகத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சில யோகங்கள் இருக்கவேண்டும்.

இதைத்தான் நமது முன்னோர்கள் ‘மலையளவு உழைத்தாலும் கடுகளவு யோகமாவது இருக்கவேண்டும்’ என்றார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தில் யோகமென்றால் கிரக சேர்க்கை என்று பொருள். ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் சம்பந்தமானது சேர்க்கை, பார்வை என எந்த வகையில் இருந்தாலும் யோகம் என்று கூறப்படும். இந்த யோகத்தை சுப யோகம், அசுப யோகமென வகைப்படுத்தலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட சுப கிரகங்களின் சேர்க்கை இருந்தால் அது சுப யோகமாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் சம்பந்தம் இருந்தால் அசுப யோகமாகும்.

சாஸ்திரத்தில் ஆயிரக்கணக்கான யோகங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், நடைமுறையில் சில யோகங்கள் மட்டுமே பல விதமான பலன்களை தந்து கொண்டிருக்கின்றன.

ஓரளவு ஜோதிட ஞானம் உள்ளவர்கள் ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் ஜாதகத்தில் உள்ள சிறப்பான யோகம் பற்றி கூறுவார்கள். ஆனால் ஜாதகர் அனுபவிக்கும் பலன்கள் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். சில ஜாதகங்களில் குறிப்பிட்டு சொல்லும்படி எந்த யோகமும் இருக்காது ஆனால் அனுபவிக்கும் பலன்கள் பிரம்மாண்டமாக இருக்கும். இந்த முரண்பாட்டிற்கு என்ன காரணம்? என்று சற்று உள்ளார்ந்து உற்று நோக்கினால் இந்த புதிருக்கு விடை கிடைக்கும். ஒரு தனிமனித ஜாதகத்திலுள்ள யோகத்தை எவ்வாறு தீர்மானிப்பது என்பதன் ஆய்வே இந்த கட்டுரை.

யோக ஜாதகம்

பொதுவாக ஒரு ஜாதகம் தன் பலத்தை மூன்று நிலைகளில் வெளிப்படுத்துகிறது.

1.கிரகங்களின் பலம்,

2.பாவக பலம்

3.தசா புத்தியும் கோட்சாரமும்

கிரகங்களின் பலம்

ஒருவருடைய ஜாதகத்தில் நவ கிரகங்கள் நின்ற-பார்த்த-சேர்ந்த கிரகங்களின் அடிப்படையில் ஜாதகருக்கு கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகளே கிரகபலமாகும்.

கிரகங்களை சுப கிரகங்கள், அசுப கிரகங்கள் என இரண்டாக வகைப்படுத்தலாம். அதன்படி குரு, சுக்கிரன், தீய கிரகங்களுடன் சேராத புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். சூரியன், செவ்வாய், ராகு, கேது, தீய கிரகங்களுடன் சேர்ந்த புதன், தேய்பிறை சந்திரன் ஆகியவை இயற்கை அசுப கிரகங்கள் ஆகும்.

சுப கிரகங்கள் சுப பலனும் அசுப கிரகங்கள் அசுப பலனுமே தரும் என்ற தவறான கருத்து பலரிடம் நிலவிவருகிறது. ஒவ்வொருவரின் ஜென்ம லக்னத்திற்கு ஏற்ப கிரகங்களின் சுப அசுப தன்மை மாறுபடும்.

உதாரணத்திற்கு இயற்கை சுபரான குரு மிதுன லக்னத்திற்கு பாதகாதிபதி. இயற்கையில் அசுப கிரகமான செவ்வாய் கடக லக்னத்திற்கு யோகாதிபதியாகி சுப தன்மையை தருவார். லக்ன அடிப்படையில் சில கிரகங்கள் மாரகர்களாக மாறுகின்றனர்.மாரகர்கள் லக்னரீதியாக தீமை செய்பவர்கள். அவர்களே ஜாதகரின் மரணத்தை ஜாதக அடிப்படையில் சனி பகவானுடன் இணைந்து தீர்மானிப்பவர்கள். சில மார கர்கள் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை பொறுத்து, மரணத்தை தராமல் மரணத்திற்கு இணையான கண்டத்தைக் கொடுப்பார்கள்.

கிரகங்கள் தமது ஆட்சி வீட்டிலோ, நட்பு வீட்டிலோ, உச்ச வீட்டிலோ நின்று பலம் பெற்றிருந்தாலும், பகை கிரகங்களுடன் இணைந்து நின்றாலும், லக்ன ரீதியான அசுபக் கிரகங்களின் சாரம் பெற்றாலும், அந்த கிரகம் நின்ற வீட்டுக்கு முன், பின்னாக பகை கிரகங்கள் நின்றாலும் அந்த கிரகம் தனது பலத்தை இழந்து விடும். இது பொதுவான அடிப்படை விதிகள்.

யோக ஜாதகம்

ஆனால் கிரகங்களின் பலம் பலவீனத்தை ஆட்சி ,உச்சம் ,நட்பு ,பகை,பாதகம்,மாரகம் என்ற ரீதியில் கணக்கிடாமல், ஷட் பலத்தின் மூலம் கணக்கிட்டால் மிக துல்லியமாக அறிய முடியும்.

கிரகங்களின் வலிமையை ஆறு விதங்களில் கணக்கிட்டு, அவற்றில் அதிக வலிமையான கிரகம் எது, மிகவும் வலிமை குன்றிய கிரகம் எது என்பதைக் கண்டறிவதே ஷட் பலம் ஆகும். ஷட் என்றால் ஆறு; பலம் என்றால் வலிமை; ஷட் பலம் என்றால் ஆறு விதமான வலிமை என பொருள்படும்.

ஷட் பல நிர்ணயம் ராகு கேதுக்களுக்கு கிடையாது .மற்ற ஏழு கிரகங்களுக்கு மட்டுமே உண்டு.

ஸ்தான பலம், திருஷ்டி பலம்,திக் பலம்,ஜே ஷ்டா பலம்,கால பலம்,நைசர்க்ய பலம் ஆகியவை ஷட் பலம் எனப்படுகின்றன.

ஏழு கிரகங்களுக்கு ஷட்பலம் கணக்கிட்டு, கிரகங்களை அவற்றின் வலிமையின் அடிப்படையில் வரிசைப்படுத்த வேண்டும். அதில் அதிக வலிமையுடைய கிரகத்திற்கு முதலிடம் வழங்கப் படும். மிகவும் வலுகுன்றிய கிரகத்திற்கு கடைசி இடமான ஏழாம் இடம் வழங்கப்படும். ஷட் பலத்தில் முதல் இரண்டு இடங்களை பிடித்த கிரகங்கள் ஜாதகத்தில் அதிக வலிமையுடைய கிரகங்களாகும். மூன்று, நான்கு, ஐந்தாம் இடங்களை பிடித்த கிரகங்கள் சராசரி வலிமையுடைய கிரகங்களாகும். 6 ,7-ம் இடங்களைப் பிடித்த கிரகங்கள் மிகவும் வலுகுன்றிய கிரகங்களாகும். ஷட்பலம் செய்வதற்கு அதிக கவனமும் அதிக கால அவகாசம் தேவைப்படும் .தற்போது ஜோதிட சாப்ட்வேர் மூலம் எளிமையாக கணக்கிடப்படுகிறது. ஆக ஒரு ஜாதகத்திற்கு பலன் சொல்ல கிரக பலம் மிக முக்கியம்.

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …

Astrosiva telegram


யோக ஜாதகம் தொடரும்….

Leave a Comment

error: Content is protected !!