லால் கிதாப் பரிகாரங்கள்:
12ராசிகளுக்கும் அதிஷ்டம் அளிக்க கூடிய பண்டையகால லால் கிதாப் மந்திர புத்தகத்தில் உள்ள ரகசியங்கள் /பரிகாரங்கள் :
மேஷம் (Mesham)
- எந்த பொருளையும் இலவசமாக வாங்காதீர்கள் ,ஒரு சிறு தொகையாவது கொடுத்து வாங்குங்கள்
- சிவப்பு நிற கர்ச்சீப் பயன் பயன்படுத்துவது அதிஷ்டமாகும் ,
- பின்னமில்லாத டிசைன் இல்லாத வெள்ளிக்காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்து கொள்ள வாழ்வில் நன்மைகள் பெருகும் ,பெண்கள் வெள்ளியால் செய்த வளையல் அல்லது கங்கணம் அணியலாம் ,
- சுவீட் அல்லது மிட்டாய் செய்பவராக சுவீட் ஸ்டால் அல்லது மிட்டாய் கடையில் வேலை செய்ய கூடாது ,இது அதிஷ்டத்தை கெடுக்கும் ,
- வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்க கூடாது ,
- தாய் ,குரு,மற்றும் ஆன்மிக பெரியவர்கள் ,ஞானிகளுக்கு முடிந்த உதவி ,சேவை செய்தல் வேண்டும் ,
- உறங்கும் பொழுது தலைமாட்டில் ஒரு சோம்பு நீரை நிரப்பி வைத்துக்கொள்ளவும் ,அந்த நீரை காலையில் எழுந்ததும் ஏதேனும் செடிக்கு ஊற்றி வரவும் ,
ரிஷபம் (Rishabam)
- ஆடையில் நல்ல வாசனை திரவியம் தடவிக்கொள்வது அதிஷ்டத்தை பேருக்கும் ,
- சிலருக்கு அதீத காமசிந்தனையால் பிரச்சனைகள் ஏற்படலாம் அவர்கள் ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி வரலாம் ,
- மனைவியை தவிர வேறு பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்தால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் மரியாதையை குறைவு ,மன உளைச்சல் ,பொருளாதார வீழ்சி ஏற்படலாம் ,கவனம் தேவை ,
- மனைவியை வீடு முற்றத்தில் எரியும் நெருப்பில் நீல நிற பூக்களை போட சொல்லலாம் இது தம்பதிகளுக்கு தோஷநிவரணமாகவும்,அன்னோன்யத்தை பெருக்குவதாகவும் அமையும் ,
- பொருளாதார வசதி இருந்தால் ஏதேனும் ஒரு ஏழைக்கு பசுமாட்டை தனமாக கொடுக்கவும் ,
- பட்டு ,லைலான் ,பாலிஸ்டர் ,போன்ற மென்மையான ஆடைகள் அதிஷ்டமானவை ,
- ஜனவரி ,பிப்ரவரி மாதங்களில்புதிதாக செருப்பு ,ஷூ வாங்க வேண்டாம் .இது துரதிஷ்டம் உண்டாக்கும் .
நீடித்த நல்வாழ்விற்கு :உங்கள் பொருளாதார நிலைக்கேற்ப மனைவியை தினமும் ஏதாவது ஏழைக்கு பணம் ,உணவு என்று முடிந்ததை தனமாக வழங்கலாம் ,யாரும் பிச்சை கேட்டல் இல்லை என்று சொல்லாமல் ஒரு ரூபாயாவது போடுங்கள் .இது நிறைந்த செழிப்பான வாழ்வை தரும் ..
மிதுனம் (Mithunam)
- படிகார தூள் கொண்டு அல்லது படிக்காரத்தூள் சேர்த்து பற்பசை கொண்டு பல் துலக்குவது அதிர்ஷ்டம் தரும்,
- முடிந்தபோது மீனுக்கு இரை போடுவது நன்மை பயக்கும் ,
- புனித யாத்திரை ஸ்தலங்களுக்கு பால், அரிசி தானமாக வழங்கலாம்,
- உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு வறுமையில் உள்ள நோயாளிகளுக்கு மருந்து பொருட்கள் வாங்கித் தரலாம்,
- 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை திட்டக்கூடாது அவர்களை புதன்கிழமையன்று வணங்கி ஆசி பெறுவது நன்மை தரும்,
- பச்சை நிற ஆடைகள் அணியகூடாது, துரதிர்ஷ்டம் உண்டாகும்,
- வீட்டில் மணி பிளான்ட் வளர்க்கக்கூடாது,
- பச்சை நிற பாட்டிலில் நீர் நிரப்பி அந்த பாட்டிலை இறுக்கமாக மூடி விடவும் ஒரு வயலில் கொஞ்சம் நெருப்பு மூட்டி அதில் அந்த பாட்டிலை போட்டுவிட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்
கடகம் (Kadagam)
- செம்பு ,நட்டு, போல்டு போடப்பட்ட கட்டிலில் உறங்குவது நல்லது,
- வெள்ளி டம்ளரில் பால் அருந்துவது அதிர்ஷ்டம் கொண்டுவரும்,
- நீங்கள் மருத்துவராகவோ அல்லது ஹீலராகவோ இருந்தால் கஷ்டப்படும் மக்களுக்கு கொஞ்சமாவது அல்லது இலவச சேவை செய்வது நன்மை தரும்,
- எப்பொழுதும் வெறுங்காலுடன் கோயிலுக்கு செல்ல வேண்டும்,
- ஆன்மீக பண்டிகை மற்றும் நிகழ்ச்சிகளில் முடிந்த அளவு தொண்டாற்ற வேண்டும்,
- பவுர்ணமி அன்று தாயிடமிருந்து ஒரு வெள்ளி நாணயம் மற்றும் கொஞ்சம் பச்சரிசி ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து வாங்கி அதை எப்போதும் பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்து இருந்தால் என்றும் வறுமை ஏற்படாது,
- சிறு வெள்ளி துண்டு வ வாங்கி அதை வீட்டின் முன்வாசலில் வைத்து எரித்து விடவும் இதுவும் வறுமை, கடன், ஏற்படாது தடுக்கும்,
சிம்மம் (Simmam)
- முக்கியமான நிகழ்ச்சிகள் இன்டர்வியூ, பிசினஸ் மீட்டிங் கலந்து கொள்ளும் முன் கொஞ்சமாவது உணவு அருந்தி விட்டு செல்வது அதிர்ஷ்டம் தரும்,
- மனைவியின் சகோதரர்கள் மருமகன் தங்கை மற்றும் அக்காள் இவர்களுடன் நல்லுறவைப் பேணுங்கள்
- ஒரு செம்பு நாணயம் அல்லது டாலரை கழுத்தில் ஒரு நூலில் கோர்த்து அணிந்து கொள்வது செல்வ நிலையில் தொழில் மற்றும் வேலையில் உயர்வு தரும்,
- 10 பேருக்கு ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இனிப்பு பண்டம் வாங்கி கொடுத்தால் வாழ்வில் வளம் சேரும்,
- உங்கள் பொருளாதார நிலைக்கேற்ப ஏதேனும் ஒரு சேவை நிலையம் ,அன்னதானம் மன்றத்திற்கு அரிசி, பால் வழங்கலாம்,
- யாரேனும் அன்பளிப்பாக ஏதாவது தந்தா பதிலுக்கு சிறு பொருள் அல்லது ஏதேனும் ஒரு பதில் மரியாதை செய்வது சமூகத்தில் உங்கள் அந்தஸ்து அதிகரிக்கும்,
- மது மாமிசம் உண்பதை அறவே தவிர்ப்பது நல்லது,
- ஏழு வகை தானியங்களை வாங்கி ஒரு சிகப்பு துணியில் முடிந்து தலைக்கு அடியில் வைத்து படுத்து மறுநாள் காலையில் அந்த எறும்புக்கு உணவு கொடுத்தால் பித்ரு தோஷம் தீரும் ,சுபகாரியத் தடைகள் நீங்கும்,
- இதை சனிக்கிழமைகள் தோறும் செய்து வருவது நல்லது,
- உண்மையைப் பேச முயற்சி செய்யுங்கள்,
- நன்கு யோசித்த பின் வாக்குறுதி கொடுங்கள் அப்படி கொடுத்த பின் அதை நிறைவேற்றுங்கள்,
கன்னி(Kanni)
- பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு மூக்குத்தி அணிவிப்பது குடும்பத்திற்கு வளம் சேர்க்கும்,
- மழை பெய்யும்போது மொட்டை மாடியில் அல்லது வீட்டின் மேற்கூரையில் மழைநீர் ஒரு பாத்திரத்தில் விழும் படி வைக்க வீட்டிற்கு அதிர்ஷ்டம் உண்டாகும்,
- வீட்டில் வழிபாடு செய்யும் இடத்தை அடிக்கடி மாற்றக்கூடாது,
- புத்தாடை அணியும் அவற்றில் கொஞ்சம் கங்காஜலம் அல்லது தீர்த்தம் மந்திரம் ஜபிக்கப்பட்ட தண்ணீரை அந்த ஆடையில் சிறுது தெளித்து அணிந்துவர ஆடை அணிகலன்களுக்கு குறை இருக்காது,
- சனி கிரக சாந்தி செய்து கொள்ளவும்,
- மது, புகையிலை, புகை போன்ற போதைப் பழக்கங்களை முற்றிலும் தவிர்ப்பது வாழ்வில் உயர்வு தரும்
- புதன்கிழமை அன்று ஒரு மண் மூடியில் அகல்விளக்கு வைத்து அதை ஓடும் நீரில் அல்லது கடலில் விடவும் ,
- புதன் கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது மேலும் அன்று யாரையும் சபிக்க யாருக்கும் வாக்குறுதி அளிக்க கூடாது
- பச்சைநிறக் கர்சீப் இருப்பது அதிர்ஷ்டம் தரும்,
துலாம்(Thulam)
- இறை நம்பிக்கை கொண்டவராக இருங்கள்,
- கோயில் அல்லது தானங்களுக்கு தயிர், வெண்ணெய்,உருளைக்கிழங்கு தானமாக அளிக்கலாம்,
- வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் கோமியம் தெளித்து வர செல்வம் பெருகும் ,
- மாமியார் வீட்டிலிருந்து வெள்ளி நாணயம் அல்லது வெள்ளிப் பாத்திரம் வாங்கி வைத்திருப்பது வளமான வாழ்வு தரும்,
- மாமியார் வீட்டு சீதனம் வரும் பொழுது ஏதேனும் ஒரு பித்தளை பாத்திரம் சேர்த்து பெற்றுக்கொள்ள அதிர்ஷ்டம் தரும்,
- வீட்டு பெண்கள் வீட்டின் வெளிப்புறம் நடக்கும் பொழுது செருப்பு அணிந்து நடக்க சொல்ல வேண்டும்,
- நீங்கள் ஆண் என்றால் பெண்களை மதிப்பதே பேசுங்கள் அது உங்கள் வாழ்வில் நிம்மதி ஏற்படுத்தும்,
- பெற்றோரை தேர்ந்தெடுத்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது நல்லது,
- வெள்ளித் தட்டில் கொஞ்சம் தேன் விட்டு வீட்டின் தலை வாசலில் எரிக்கவும்
- தானமாக எதையும் பெறாதீர்கள்அது வறுமையை ஏற்படுத்தும்,
விருச்சிகம் (Viruchigam)
- வீட்டில் மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் தேன் அல்லது குங்குமம் வைத்திருப்பது அதிர்ஷ்டம் உண்டாகும்,
- தினமும் காலையில் கொஞ்சம் தேன் சாப்பிடுவது நலம் தரும்,
- அரச மரம் மற்றும் முட்செடிகளை வெட்டக்கூடாது,
- செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது
- சிகப்பு நிற கர்சீப், டை அதிர்ஷ்டம் தரும்,
- பால் காய்ச்சும் பொழுது பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,
- இனிப்பு ரொட்டி செய்து சாதுக்களுக்கும், மகான்களுக்கும் வழங்கலாம்,
- யாரிடமிருந்தும் எந்த பொருளையும் இலவசமாக பெறவேண்டாம் அப்படி பெற்றால் அதற்கு பதில் ஒரு பொருளையும் கொடுத்து விடவும்,
- செவ்வாய்க்கிழமை அன்று தேன் குங்குமம், சிவப்பு, ரோஜா இவற்றை ஓடும் நீர் அல்லது கடலில் விடுங்கள், துர்தஷ்டங்கள் நீங்கும்,
- செவ்வாய்க்கிழமைகளில் இஷ்ட தெய்வத்திற்கு சிகப்பு பூந்தி படைத்து வழிபடுவது வாழ்வில் வளம் சேர்க்கும்,
- சகோதரர்களின் மனைவியுடன் சண்டை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்,
- மூத்த சகோதரரிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்,
- செவ்வாய்க்கிழமைகளில் அனுமனுக்கு செந்தூரம் அல்லது ஆடை சாத்தி வழிபட கடன், நோய்கள் நீங்கி நல்வாழ்வு கிட்டும் ,
தனுசு(Dhanusu)
- தொடர்ந்து 43 நாட்கள் செம்பு நாணயங்களை ஓடும் நீரில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்,
- தந்தையின் படுக்கை, ஆடைகள் ,உடமைகள் அதிர்ஷ்டம் தருபவை
- பிச்சை கேட்பவரிடம் இல்லை என்று சொல்லாமல் இயன்றதை தர்மம் செய்யவும்,
- திங்கள் அல்லது வெள்ளிக் கிழமைகளில் ஆலயத்திற்கு நெய், தயிர், அல்லது கற்பூரம் வாங்கிக் கொடுத்து வருவது நல்வாழ்வு தரும்,
- வீட்டின் முன் பகுதியில் மஞ்சள் நிறப் பூ பூக்கும் செடிகளை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை தரும்,
- வியாழக் கிழமைகளில் ஹரிவம்ச புராணம் படிப்பது நல்லது,
- அரசமர பிரதட்சணம் வழிபாடு நன்மை தரும்,
- யாரையும் ஏமாற்ற பொய்சாட்சி கூறவும் கூடாது,
- வாழ்வில் ஒரு முறையாவது ஹரித்துவார் சென்று கங்கையில் குளித்து தானும் தனது சந்ததிகளும் நல்வாழ்வு வாழ வேண்டிக்கொள்ள அப்படியே நடக்கும் ,
மகரம் (Magaram)
- சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழைகளுக்கு வாழைப்பழம் ,பருப்பு ஸ்வீட் தானம் செய்ய விபத்துக்கள்,எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்து காக்கும்,
- ஆண் பெண் யாராக இருந்தாலும் கணவன் மனைவி தவிர்த்த பிறருடன் தவறான தொடர்பு கொள்ளவோ அதற்காக முயற்சிக்கவே கூடாது இது பிற்கால வாழ்வில் தரிதரத்தை உண்டாக்கும்,
- பாலும் சீனியும் கலந்து ஆலமரத்தின் வேரில் விடவும் அதிலிருந்த மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ள செல்வம் நிறைந்த வாழ்வு கிட்டும்,
- கேது கிரகத்திற்கு சாந்தி செய்து கொள்ளவும் ,
- 48 வயதுக்குப் பின் வீடு கட்டுவது நல்லது அதற்கு முன் வீடு கட்டுவது அதிர்ஷ்டம் அல்ல,
- கருப்பு, நீலம்,ரோஸ் ஆகிய நிற ஆடைகளைத் தவிர்க்கவேண்டும்,
- ஒரு சனிக்கிழமை கொஞ்சம் பால் மற்றும் ஒரு வெள்ளி நாணயத்தை கிணற்றில் போடுவும் இது துரதிஷ்டத்தை நீக்கி வாழ்வில் வளம் சேர்க்கும்
- கிழக்கு நோக்கிய வாசல் உள்ள வீடு அதிர்ஷ்டமானது,
கும்பம் (Kumbam)
- கையிலோ கழுத்திலோ தங்க நாணயம் தங்க நகை அணிவது அதிர்ஷ்டம் தரும்,
- குங்குமப்பூ அரைத்து குழைத்து நெற்றியில் திலகமிட்டு வர நிறைந்த செல்வத்துடன் வாழலாம்,
- மாதம் ஒரு முறை குளிக்கும் நீரில் கொஞ்சம் பால் கலந்து குளித்து வந்தால் பீடைகள் நீங்கும்,
- சதுர வடிவமான வெள்ளிடாலரை நூல் அல்லது செயினில் கோர்த்து கழுத்தில் அணிந்தால் வேலை அல்லது தொழில் உயர்ந்த நிலை கிட்டும்,
- வெள்ளியை உருக்கி 4 சிறு உருண்டைகளாக செய்து அதை ஒரு பேப்பர் அல்லது கவரில் போட்டு சட்டைப்பையில் வைத்து இருந்தால் செல்வம் பெருகும் ,
- ஏழைகள் அல்லது கோவிலுக்கு எண்ணெய் தானம் செய்யலாம்,ஞாயிற்று கிழமை அன்று பைரவருக்கு மது படைக்கலாம் ஆனால் அதை அருந்தக்கூடாது ,
- வீட்டின் மேல் பகுதி அல்லது மொட்டை மாடியில் பெட்ரோல் டீசல் போன்ற எரி பொருட்கள் வைக்க கூடாது,
- விரதம் இருப்பதாக இருந்தால் சனிக்கிழமை இருக்கவும்,
- மது மாமிசம் உண்பதை தவிர்க்கவும்,
மீனம் (Meenam)
- சட்டையின் உள் பாக்கெட்டில் சிகப்பு நிற ஸ்வதிக் படம் வைத்துக்கொள்ளவும்,
- பிறர் முன்னிலையில் குளிக்கக்கூடாது
- மொட்டை போட்டால் முழுக்க மொட்டை அடிக்காமல் கொஞ்சம் பிடரியில் குடுமி வைத்துக் கொள்ளவும் ,
- ஆலயங்களில் உணவு பிரசாதம் அளிப்பதைவிட ஆடைகள் தானமாக அளிப்பது சிறப்பு ,
- வீட்டில் துளசி வளர்க்கக்கூடாது,
- வீட்டின் வழிபாட்டு அறையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்,
- ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் கலந்து கொள்வது நல்லது,
- அரசமர பிரதட்சணம் மற்றும் வழிபாடு நன்மை பயக்கும் ,
- யாரிடமிருந்தும் தானமாக எதையும் பெறக்கூடாது,
- வீட்டின் முன்புறம் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்,
- தொழில் சார்ந்த முடிவுகளில் மனைவியை கலந்தாலோசித்து முடிவு எடுப்பது நல்லது,
- பணப்பெட்டி அல்லது பீரோ வில் தங்கக்கட்டி அல்லது தங்க நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைக்க செல்வம் பெருகும்,
- கோழி குஞ்சுகளுக்கு இரை கூடுதல் நன்மை பயக்கும்,
- குருமார்கள் உடன் தொடர்ந்து தொடர்பில் இருத்தல் நன்று
இவைதாம் லால் கிதாப் பரிகாரங்கள் மேலே சொல்லப்பட்ட அனைத்துமே நமது இந்திய பாரம்பரியத்தில் கலாச்சாரத்தில் பண்பாட்டில் ஓர் இடம்,
எனவே இவற்றில் பெரும்பாலானவற்றை கடைபிடித்தாலே கோள்களினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்க்கையில் வளமும் நலமும் நன்மையும் திகழும் என கூறுகிறது