Homeஅடிப்படை ஜோதிடம்12 ராசிக்கும் செவ்வாய் தரும் பலன்கள்- வராக மிகிரர்

12 ராசிக்கும் செவ்வாய் தரும் பலன்கள்- வராக மிகிரர்

12 ராசிக்கும் செவ்வாய் தரும் பலன்கள்- வராக மிகிரர்

மேஷம் -விருச்சிகத்தில் செவ்வாய்

மேஷம் -விருச்சிகம் ஆகிய சொந்த வீடுகளில் ஆட்சியாக செவ்வாய் இருக்க பிறந்தவன் சஞ்சாரம் செய்வதில் விருப்பம் உள்ளவனாகவும், தனம் உள்ளவனாகவும், சுக-சௌக்கியங்களை அனுபவிப் பவனாகவும், அரசால் மதிக்கப்படுபவனாகவும், வியாபாரியாகவோ, அல்லது சேனாதிபதியவோ இருப்பவனாகவும், உடலில் காயம் பட்ட வடு உடையவனாகவும்,பயிர் தொழில் அல்லது ஆயுதங்கள் விற்பனை செய்பவனாகவும் இருப்பான்.

ரிஷபம் அல்லது துலாம் ஆகியவற்றில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் சினேகிதர்களிம் பற்றி இல்லாதவனாகவும் -அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளாதவனாகவும், பெண்களுக்கு அடங்கி நடப்பவனாகவும், பிறர் மனைவி மேல் ஆசைப்படுபவனாகவும், மந்திரம்- தந்திரம்-மாயாஜாலம் போன்றவற்றை அறிந்தவனாகவும், அலங்காரம் செய்து கொள்வதில் ஆசை உள்ளவனாகவும், பயம் உள்ளவனாகவும் இருப்பான்.

மிதுனம் -கன்னியில் செவ்வாய்

மிதுனம்-கன்னி ஆகியவற்றில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் பயம் அற்றவனாகவும், அழகு உள்ளவனாகவும், பொறுமை இல்லாதவனாகவும், சினேகிதர்களிடம் உண்மையாக இல்லாதவனாகவும், சண்டை செய்வதில் வல்லவனாகவும், கஞ்சத்தனம் உள்ள லோபியாகவும், எவரிடமும் கெஞ்சி கேட்டு உதவிகள் பெறுபவனாகவும், புத்திரர்கள் உள்ளவனாகவும், சங்கீத ஞானம் உடையவனாகவும், செய்நன்றி உள்ளவனாகவும், சமயத்தில் எவருக்கேனும் உபகாரம் செய்பவனாகவும் இருப்பான்.

கடகத்தில் செவ்வாய்

கடகத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் செல்வம் உள்ளவனாகவும், அங்க குறைபாடு உள்ளவனாகவும், ஜலம் என்னும் நீரில் ஓடம், கப்பல் முதலியவற்றை செலுத்தி சம்பாத்தியம் செய்பவனாகவும், புத்திக்கூர்மை, அறிவு உள்ளவனாகவும், வஞ்சக குணம் உள்ளவனாகவும், அரச பதவியில் உள்ளவர்களின் சினேகிதம் உடையவனாகவும் இருப்பான்.

12 ராசிக்கும் செவ்வாய் தரும் பலன்கள்

சிம்மத்தில்-செவ்வாய்

சிம்மத்தில் செவ்வாய் இருக்க பிறந்தவன் தைரியம் உள்ளவனாகவும், கஷ்டங்களை சகித்துக் கொள்பவனாகவும், காடுகளில் சஞ்சரிப்பதில் விருப்பம் உள்ளவனாகவும், தனம் இல்லாதவனாகவும், அற்பமான மனைவி-புத்திரம் உடையவனாகவும் இருப்பான்.

தனுசு -மீனத்தில் செவ்வாய்

தனுசு-மீனம் ஆகியவற்றில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் எதிரிகள் அதிகம் உள்ளவனாகவும், அதிகமான புகழுடையவனாகவும், அரசாங்கப் பதவிகள் உள்ளவனாகவும், பயம் இல்லாதவனாகவும், அதிகமான புத்திரர்கள் இல்லாதவனாகவும், சுக போகங்களை அனுபவிப்பவனாகவும், எதிரிகளை வெல்பவனாகவும் இருப்பான்.

மகரத்தில்-செவ்வாய்

மகரத்தில் செவ்வாய் இருக்க பிறந்தவன் தன வந்தனாகவும், புத்திரர்கள் அதிகம் உள்ளவனாகவும், அரசருக்கு சமமானவனாகவும், ராஜயோகம் உள்ளவனாகவும் இருப்பான்.

கும்பத்தில்- செவ்வாய்

கும்பத்தில் செவ்வாய் இருக்க பிறந்தவன் தரித்திரம், துக்கம் உடையவனாகவும், பொய் சொல்லுபவனாகவும், பாவ காரியங்கள் செய்பவனாகவும், அலைந்து திரியும் சுபாவம் உள்ளவனாகவும், கொடூர குணம் கொண்டவனாக இருப்பான்.

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …

Astrosiva telegram


உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!