12 ராசிக்கும் புதன் தரும் பலன்கள்
மேஷம் -விருச்சிகத்தில் புதன்
மேஷம்-விருச்சிகத்தில் புதன் இருக்கப் பிறந்தவர்கள் திருடனாகவும், பொய் பேசுபவனாகவும், மதுபானம் அருந்துபவனாகவும், சாஸ்திரங்களுக்கு விரோதமாகவும்-நாத்திகனாகவும், தனம் இல்லாதவனாகவும், கெட்ட பெண்கள் தொடர்பு உள்ளவனாகவும், சூதாடுதல்- கடன் வாங்குதல் ஆகியவற்றை செய்பவனாகவும், கள்ளம்-கபடம்-வஞ்சகம் உள்ளவனாகவும் இருப்பான்.
ரிஷபம் -துலாம் ராசியில் புதன்
ரிஷபம் -துலாம் இவற்றில் புதன் இருக்க பிறந்தவன் தனம் உள்ளவனாகவும், உபதேசம் செய்பவனாகவும்(ஆசிரியர்), ஈகை குணம் உள்ளவனாகவும், பெரியோர்கள்-மகான்கள்-ஞானிகளிடம் பக்தி உடையவனாகவும், தாய்ப்பாசம் உடையவனாகவும், விசுவாசம் உடையவனாகவும், நல்ல மனைவி- புத்திரர்கள் உள்ளவனாகவும், சினேகிதர்கள் மேல் பற்று உடையவனாகவும், சம்பாத்திய முயற்சி உடையவனாகவும் இருப்பான்.
மிதுனத்தில்-புதன்
மிதுனத்தில் புதன் இருக்க பிறந்தவன் சுகமான வாழ்க்கை வாழ்பவனாகவும்,சாஸ்திரங்கள்-சங்கீதம்- வாத்தியங்கள்-நாட்டியம்-ஓவியம் போன்ற கலைகள் அறிந்தவனாகவும்,பிரியமாகவும் நயமாகவும் பேசுபவனாகவும், தற்புகழ்ச்சி உடையவனாகவும் இருப்பான்.
கடகத்தில்-புதன்
கடகத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் பந்துக்கள் எனும் உறவினர்களால் வெறுக்கப்படுபவனாகவும்,நீர் சம்பந்தமான பொருள்களை விற்று ஜீவனம் செய்பவனாகவும் இருப்பான்.
சிம்மத்தில் -புதன்
சிம்மத்தில் புதன் இருக்க பிறந்தவன் அலைந்து திரிபவனாகவும், பெண்களால் வெறுக்கபடுபவனாகவும், அதேசமயம் பெண்ணாசை கொண்டவனாகவும், தனம்-சுகம்-புத்திரம் அற்றவனாகவும், தரித்திரன்-மூடன்-மூர்க்கனகவும், எங்கும் அவமானபடுபவனாகவும் இருப்பான்.
கன்னியில் புதன்
கன்னியில் புதன் இருக்கப் பிறந்தவர் சுகமான நல்வாழ்க்கை உடையவனாகவும், தீரம் உள்ளவனாகவும், எதிலும் பயம் இல்லாதவனாகவும், தர்மம்-ஈகை குணம் உள்ளவனாகவும், புத்திக்கூர்மையும்- நற்குணங்கள் உடையவனாகவும், பொறுமை-சாந்தம் உள்ளவனாகவும், வித்தை-சாஸ்திரம் அறிந்த பண்டிதனாகவும், எக்காரியத்தையும் திறம்பட வெற்றியாக முடிப்பவனாகவும், உலக அனுபவம் உள்ளவனாகவும், செயல்பாட்டு திறன் உடையவனாகவும் இருப்பான்.
தனுசு ராசியில் புதன்
தனுசில் புதன் இருக்க பிறந்தவன் பலவிதமான சாஸ்திரங்களை அறிந்தவனாகவும், அரசனால் பாராட்டப்படுபவனாகவும்,இந்த சாஸ்திரங்களை நன்முறையில் வெளிப்படுத்துபவனாகவும் இருப்பான்.
மகரம் -கும்ப ராசிகளில்-புதன்
கும்பம்-மகரத்தில் புதன் இருக்க பிறந்தவன் அடிமை தொழில் செய்பவனாகவும், தனம் இல்லாதவனாகவும், கடனாளியாகவும், சிற்பத் தொழில் செய்பவனாகவும், பிறர் சொத்தை அபகரிப்பவனாகவும், ஊதியம் கொடுக்காமல் ஏமாற்றி வேலை வாங்குபவனாகவும் இருப்பான்.
மீனத்தில்-புதன்
மீனத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் பிறரை திருப்திப்படுத்தி சினேகம் செய்து கொண்டு அவரின் எண்ணங்களை அறிந்து நடப்பவனாகவும், தாழ்ந்த தொழில்-வியாபாரம் செய்பவனாகவும் இருப்பான்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …