12-ம் பாவாதிபதி நின்ற பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

12-ம் பாவாதிபதி நின்ற பலன்கள்

12-ம் பாவாதிபதி லக்னத்தில் இருந்தால் ஜாதகர் வீண் செலவுகள் செய்பவராகவும், நுரையீரல்,கோழை, சளி சம்பந்தமான உடல் கோளாறுகளினால் துன்பபடுவார் சொத்து காலியாய் இருத்தல், கற்றுத் தெரிந்து கொள்ளுதல் போன்றவை இருக்கும்.
 
12-ம் பாவாதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் எப்பொழுதும் நல்ல காரியங்களுக்கு செலவு செய்வார், தெய்வ நம்பிக்கை உடையவராக இருப்பார், இனிமையாக பேசுவார், நல்ல குணம்படைத்தவர், மகிழ்ச்சியாய் இருப்பவர்.
 
12-ம் பாவாதிபதி(12th House in Astrology) மூன்றாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் சகோதர தன்மையுள்ளவர், ஆனந்தம் இல்லாமல் இருப்பவர், மற்றவர்களை வெறுப்பவர் மேலும் சொந்த வேலைகளை மட்டும் செய்து கொள்பவர். சுயநலம் பேணுபவராக இருப்பார்.
 
12th House in Astrology
 
12-ம் பாவாதிபதி நான்காமிடத்தில் இருந்தால் ஜாதகருக்கு தாயின் அன்பு கிடைக்காது. மேலும் இழப்புகள் நாளுக்குநாள் சேரும்; நிலங்கள், வாகனங்கள், வீடுகள் முறையே நாளுக்கு நாள்  இழப்புகளை ஏற்படுத்தும்
 
12-ம் பாவாதிபதி ஐந்தாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார். மகன்களை பறி கொடுப்பார். மகனைப் பெறுவதற்கு அவர்கள் ஆன்மிக ஸ்தலங்களுக்கு, அதுபோன்ற அமைப்புகளுக்கும் செலவு செய்வார்.
 
 
12-ம் பாவாதிபதி(12th House in Astrology) ஆறாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் சொந்த மக்களிடம் பகைமையை பாராட்டுவார். கோபத்தை வெளியிடுவார். பாவச் செயல்கள் இழிவான செயல்களில் ஈடுபாடு உடையவராக இருப்பார். மற்றவர்கள் மனைவிமீது ஆசை போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும்.
 
12-ம் பாவாதிபதி ஏழாமிடத்தில் இருந்தால் ஜாதகர் தன்னுடைய மனைவிக்காக செலவு செய்வார். இருவரும் சேர்ந்து ஆனந்தத்தை அனுபவிக்க மாட்டார்கள் மேலும் கற்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் உடையவர்.வலிமையை பறி கொடுத்தவர் ஆவார்
 
12-ம் பாவாதிபதி எட்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் எப்போதும் நன்மை, சுலபமாக நெருங்க இடம் கொடுக்குமாறு பேசுதல், மத்திய தரமான வாழ்நாள், நல்ல குணங்களும் நல்ல செயல்களும் உள்ளவர் ஆவார்
 
12-ம் பாவாதிபதி(12th House in Astrology) 9-ம் இடத்தில இருப்பின் ஜாதகர் பெரியவர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொள்வார் .நண்பர்களையும் பகையாளியாக நினைப்பர்.எப்போதும் தன்னுடைய காரியங்களில் நோக்கம் கொண்டவராகவும்,அதை அடைவதற்குரிய  முயற்சி செய்து கொண்டு இருப்பர் .
 
12-ம் பாவாதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் உயர்ந்த குடி மக்களுக்கான செலவுகளை ஏற்றுக் கொள்வார். மேலும் பெற்றோரின் அன்பை குறைந்த அளவே பெறுவார்.
 
12-ம் பாவாதிபதி பதினோராம் இடத்தில் இருந்தால் ஜாதகருக்கு இழப்பு,நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் சிலசமயம் இழப்புகளையும் சிலசமயம் நன்மையும் உண்டாகப் பெறுவார்
 
12-ம் பாவாதிபதி(12th House in Astrology) பன்னிரண்டாம் இடத்தில் இருப்பின் ஜாதகர் பெரிய செலவுகள் மட்டுமே எதிர் கொள்வார். வெளிப்படையான சந்தோஷம் கிடைக்காது. அவர் எளிதில் கோபம் கொள்பவராக இருப்பர்

Leave a Comment

error: Content is protected !!