Homeபராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026பராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026:ரிஷப ராசி

பராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026:ரிஷப ராசி

பராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026:ரிஷப ராசி

களத்திரக்காரனாகிய சுக்கிரனை ஆட்சி வீடாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! இவ்வருடம் குரு பகவான் ஜூன் 1ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் இருந்து 3ம் இடம் செல்கிறார். அக்டோபர் 31ம் தேதி முதல் அதிசாரமாக 3ம் இடத்தில் இருந்து 4ம் இடம் செல்கிறார் குரு பகவான். ஜனவரி 24ம் தேதி முதல் வக்ரகதியில் மீண்டும் 3ம் இடத்துக்கு திரும்புகிறார்.

Also Read
Plugin developed by ProSEOBlogger. Get free gpl themes.

டிசம்பர் 5ம் தேதி ராகுபகவான் 10ம் இடத்தில் இருந்து 9ம் இடத்திற்கும்,கேது பகவான் 4ம் இடத்தில் இருந்து 3ம் இடத்திற்கும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

வருடம் முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் (11ம் இடம்) சஞ்சரிக்கிறார்.

இதன் மூலம் தொழில்துறையில் எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். வீன் அலைச்சல் குறையும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவர். படித்த மாணவர்களுக்கு உடனடியாக நல்ல வேலை வாய்ப்பு அமையும்.

உங்கள் தாய் தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆடி, ஆவணி மாதங்களில் மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டு. திருஷ்டி காரணமாக அவ்வப்போது சிறு தடைகள் உண்டாகும். திருமணம் முடிவானால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக திருமணத்தை நடத்தி விடுவது நலம். சகோதர, சகோதரிகளுக்குள் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகளுக்கு நல்ல மருத்துவம் கிடைக்கும்.

தொழில் துறையில் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இடமாற்றம் அமையும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை

பரிகாரம்

வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு நெய் தீபம் வைக்கவும் புரட்டாசி மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை முருகனுக்கு அபிஷேகம் செய்யவும்

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular