2-ம் வீட்டு அதிபதி(2nd house in astrology) லக்னத்தில் இருந்தால் ஜாதகர் குழந்தைகளுடன் சொத்துக்களுடன் குடும்பத்திற்கு பகையாளிகளுடன், சிற்றின்ப ஆசையும், கடினமான இருதயம், அடுத்தவர்களின் வேலைகளையும் செய்தல்.
2-ம் வீட்டு அதிபதி 2-ம் வீட்டில் இருந்தால் ஜாதகர் பணக்காரராகவும், கௌரவமாகவும் இரண்டு மனைவிகளை பெற்றவராகவும், வம்ச விருத்தியை பறிகொடுத்த வராகவும் இருப்பார்.
2-ம் வீட்டு அதிபதி 3-ம் வீட்டில் இருந்தால் ஜாதகர் வீரம் நிறைந்தவராகவும், அறிவு, நல்ல குணம் ,துன்பம் நிறைந்தவராகவும் இருப்பார். இவைகளெல்லாம் சுபர் இருந்தால் அப்படியில்லாமல் அசுபர் இருந்தால் அசுப தன்மையுடைய காரியங்களுக்கு பொறுப்பாவார்
2- ம் வீட்டு அதிபதி(2nd house in astrology) 4-ம் வீட்டில் அமர்ந்து இருப்பின் ஜாதகர் எல்லாவிதமான சொத்துக்களை உடையவராக இருப்பார். அப்படியில்லாமல் இரண்டாம் அதிபதி உச்சம் ஆனாலும், குரு உடன் சேர்ந்து இருந்தாலும் அரசனுக்கு சமமாக இருப்பார்
2- ம் வீட்டு அதிபதி 5-ம் வீட்டில் இருந்தால் ஜாதகர் பெரும் பணக்காரர் ஆகவும், இவர் மட்டுமல்லாது அவருடைய மகன்களும் செல்வம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உடையவர்களாகவும் இருப்பர்.
2-ம் வீட்டு அதிபதி 6-ம் வீட்டில் சுபர்களுடன் சேர்ந்திருந்தால் எதிரிகளிடமிருந்து அவருக்கு சொத்து கிடைக்கும். அப்படி இல்லாமல் அசுபக் கிரகங்களுடன் இருந்தால் அங்கு அவருக்கு எதிரிகள் மூலம் இழப்பும் உடலுறுப்புகளில் பங்கமும் ஏற்படும்.
2-ம் வீட்டு அதிபதி 7 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் மருத்துவராகவும், அடுத்தவர்களின் மனைவியை நேசிக்கும் குணம் அல்லது சுபாவம் அடிமையாய் இருத்தல் நிகழும்.
2-ம் வீட்டு அதிபதி(2nd house in astrology) 8-ம் வீட்டில் இருந்தால் ஜாதகர் அபரிவிதமான நிலங்கள், சொத்துக்களையும் பெற்றிருப்பார். ஆனால் குறைந்த அளவில் வீரமும் மகிழ்ச்சியும் இருக்கும் மூத்த சகோதரர்களிடம் இருந்து மகிழ்ச்சியை பறிகொடுத்தவர்.
2- ம் வீட்டு அதிபதி 9 ஆம் வீட்டில் இருப்பின் ஜாதகர் பணக்காரராகவும். புத்திகூர்மையும், திறமை உடையவராகவும், குழந்தை பருவத்தில் நோயினாலும் இருந்தவர். பின்னர் மகிழ்ச்சியாக இருப்பவர் மத கோட்பாடுகளுக்கும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்லுதல் உண்டாகும்
இரண்டாம் வீட்டு அதிபதி 10 ஆம் வீட்டில் இருப்பின் ஜாதகர் மரியாதையுடனும், அறிவுடனும், அவதூறாக பேசுதல், அதிகமான மனைவிகளையும் பெற்றிருப்பார், மேலும் புதல்வர்களிடமிருந்து மகிழ்ச்சியை பறிகொடுத்தவர்.
இரண்டாம் வீட்டு அதிபதி 11 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் எல்லா விதமான சொத்துகளையும், எப்போதும் கடுமையாக உழைக்கும் குணமும், கௌரவமாகவும்,மரியாதையுடனும் புகழுடனும் இருப்பார்
இரண்டாம் வீட்டு அதிபதி 12 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் வெற்றியாளராகவும், சொத்துக்கள் இல்லாதவராகவும், அடுத்தவரின் சொத்துக்களில் விருப்பம் உள்ளவராகவும், அப்படி இருக்கும் நேரத்தில் மூத்த குழந்தை அவரை மகிழ்ச்சியாக வைக்கும்