அடிப்படை ஜோதிடம்-பகுதி-28-2-ம் இடத்ததிபதி பற்றிய குறிப்புகள்-மகரிஷி பராசரர்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

2-ம் இடத்ததிபதி பற்றிய குறிப்புகள்-மகரிஷி பராசரர்

 2-ம் இடத்ததிபதி (2nd house in astrology) இரண்டாம் இடத்தில் இருப்பினும் அவரது செல்வம் அதிகரிக்கும். 6 ,8 ,12 இருப்பில் பொருளாதார நிலை திருப்தி அளிக்காது. இரண்டாமிடத்தில் சுபகிரகங்கள் செல்வத்தை பெருக்கும்,அசுப கிரகம் செல்வத்தையும் அழிக்கும்.

குருவும்,2ம் வீட்டதிபதியும் சேர்ந்து  2ல் இருந்தால் அவருக்கு செல்வம் செழிக்கும். 2ம் வீட்டதிபதி ,செவ்வாயுடன் சேர்ந்து இருந்தால் அவர் மேலும் செல்வந்தர்.

குறிப்பு: விருச்சகம் மற்றும் கும்ப லக்னத்திற்கு இந்த விதி பொருந்தும்

இரண்டாம் இடத்து அதிபதியும்(2nd house in astrology)  லக்னாதிபதியும் பரிவர்த்தனை ஆயின் ஜாதகருக்கு சொத்து சேரும். இந்த இடத்து அதிபதிகள் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருப்பின் சொத்து உள்ளவர்.

இரண்டாமிடத்து அதிபதி கேந்திரங்களிலோ 11ம் இடத்ததிபதி திரிகோணங்களிலோ நிற்ப்பின் குரு மற்றும் சுக்கிரன் பார்வை அல்லது சேர்க்கை இருப்பின் அந்த ஜாதகர் செல்வந்தர்.

இரண்டாமிடத்து அதிபதி(2nd house in astrology)   மற்றும்11ஆம் இடத்து அதிபதி பாவ கிரகங்கள் வீட்டில் இருப்பினும் இரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும் அந்த ஜாதகர் பரம ஏழையாக இருப்பான்

 2-ம் இடத்ததிபதி

2 மற்றும் லக்னாதிபதி இரண்டும் பாவ கிரகங்களுடன் சேர்ந்து இருப்பின் அந்த ஜாதகர் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார் 

இரண்டாம் இடத்து அதிபதி(2nd house in astrology)  மற்றும் பதினொன்றாம் இடத்து அதிபதி 6, 8, 12ல் இருக்க இரண்டில் ராகு,செவ்வாய் 11-ல் இருப்பின் அந்த ஜாதகர் அரசாங்கத்தால் தண்டிக்கப்பட்டு செல்வத்தை இழப்பார்

 குரு 11ல் சுக்கிரன் 2லும் 12-ல் சுபக் கிரகங்களும், இரண்டாமிடத்து அதிபதி சுபக் கிரகங்களுடன் இருப்பின் அந்த ஜாதகர் அறவழி மற்றும் மத ரீதியான செலவுகள் செய்வார்

இரண்டாமிடத்து அதிபதி சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது உச்சமாக இருந்தாலும் அவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். உற்றார் உறவினர்களை நன்கு கவனிப்பார்கள்

இரண்டாமிடத்து அதிபதி சுபக் கிரகங்களுடன் நிற்பின் பர்வதாம்சத்திலும் நல்ல நிலைமை இருப்பின் அந்த ஜாதகர் பெரிய முயற்சி ஏதும் செய்யாமலே செல்வந்தராக இருப்பார்

இரண்டாமிடத்து அதிபதி பலமாக இருப்பின் அந்த ஜாதகர் அழகான கண்களை உடையவர் 6 ,8, 12ல் இருப்பின் கண் நோய், கண்களில் குறைபாடு உள்ளவர்

இரண்டாமிடத்து அதிபதி, இரண்டாம் இடத்திலும் பாவிகள் இருந்தாலும் பாவிகளுடன் சேர்ந்து இருந்தாலும் அந்த ஜாதகர் உண்மையை பேசாதவர்

Leave a Comment

error: Content is protected !!