Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம் -பகுதி -44-3-ம் வீட்டு அதிபதி நின்ற பலன்கள்

அடிப்படை ஜோதிடம் -பகுதி -44-3-ம் வீட்டு அதிபதி நின்ற பலன்கள்

3-ம் வீட்டு அதிபதி நின்ற பலன்கள்(3rd house in astrology) 

  • 3-ம் வீட்டு அதிபதி(3rd house in astrology)  லக்னத்தில் இருந்தால் ஜாதகர் தன்னுடைய சொந்த முயற்சியில் உயர்ந்து சொத்துக்கள் சேர்ப்பார். கடவுளை வணங்குதல், தைரியமாய் இருத்தல் போன்ற குணங்களும், புத்தி கூர்மையாகவும் ,கல்வி கற்பதில் விருப்பம் இல்லாத தன்மையும் ஏற்படும்
  • 3-ம் வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் தைரியமற்றவராகவும், அதிக முயற்சிகள் செய்யாதவராகவும், மகிழ்ச்சி இல்லாதவராகவும் இருப்பார்கள். அடுத்தவர்களின் மனைவி மீது ஒரு கண் வைப்பவர் ஆகவும் அடுத்தவரின் சொத்துக்களில் ஆசைப்படுபவர் ஆகவும் உடல் பருத்த மனிதர்களாகவும் காணப்படுவார்கள்
  •  3-ம் வீட்டு அதிபதி(3rd house in astrology)  மூன்றாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் மகிழ்ச்சியாகவும், உடன்பிறந்தவர்களுடனும், சொத்துக்களுடனும், மகன்களுடனும்,சந்தோஷமாகவும் கடைசி வரையில் மகிழ்ச்சியாகவும் இருப்பார்
  • 3-ம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டில் இருந்தால் ஜாதகர் மகிழ்ச்சியுடனும், சொத்துகளுடனும், புத்திசாலியாகவும் இருப்பார். ஆனால் மனைவி துஷ்ட குணம் உடையவராக இருப்பார்.
  • 3-ம் வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு நல்ல மகன்கள் இருப்பார்கள். 3-ம் வீட்டின் அதிபதி அசுபருடன் சேர்ந்து அசுப பார்வையில் இருந்தால் ஜாதகர் எதிர்க்க முடியாத மனைவியை பெறுவார்
  • 3-ம் வீட்டு அதிபதி 6 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு கூட பிறந்தவர்களே விரோதிகளாகவும், தன்னுடைய தாய்மாமன் அல்லது தன்னுடைய தாயின் அத்தைக்கு விரோதியாகவும் இருப்பார்.
  • 3-ம் வீட்டு அதிபதி(3rd house in astrology)  ஏழாம் வீட்டில் இருந்தால் ஜாதகன் அரசு சேவை செய்ய விரும்புவார் சிறுவயதில் மகிழ்ச்சி இல்லாமலும், ஆனால் அரசு சேவையில்  கடைசி வாழ்க்கை இருக்கும்
  • 3-ம் வீட்டு அதிபதி ஏழாம் வீட்டில் இருந்தால் ஜாதகன் அரசு சேவை செய்ய விரும்புவார் சிறுவயதில் மகிழ்ச்சி இல்லாமலும், ஆனால் அரசு சேவையில்  கடைசி வாழ்க்கை இருக்கும்
  •  3-ம் வீட்டு அதிபதி 8ஆம் வீட்டில் இருந்தால், ஜாதகர் திருடனாகவும் ,மற்றவருக்கு சேவை செய்வதும், கடைசியில் அரண்மனை கதவின் வாயிலில் மரணமடைவார்
3ம் வீட்டு அதிபதி நின்ற பலன்கள்

 

  • 3-ம் வீட்டு அதிபதி 9 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு பெற்றோர்களின் ஆனந்தம் கிடைக்காது அல்லது குறைவாக இருக்கும். மனைவியின் மூலமாக அதிர்ஷ்டம், வம்சவிருத்தி போன்ற மற்ற மகிழ்ச்சிகள் கிடைக்கும்
  • 3-ம் வீட்டு அதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் எல்லாவிதமான சந்தோஷங்களையும் பெறுவார். தன் முயற்சியால் சம்பாதித்த சொத்துக்களும் கிடைக்கும். மேலும் துஷ்ட பெண்மணிகளை பராமரிப்பதில் விருப்பமும் இருக்கும்.
  • 3-ம் வீட்டு அதிபதி பதினொன்றாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் எப்போதும் வியாபாரம் செய்து லாபம் ஈட்டுவத்திலும், புத்திசாலியாயும், அறிவு கூர்மையாக இருப்பதாலும், கல்வி கற்க வில்லை என்றாலும் அடுத்தவர்களுக்கு சேவை செய்து வெற்றி அடைவார்கள்
  • 3-ம் வீட்டு அதிபதி 12 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் கெட்ட வழிகளில் செலவு செய்வார். கெட்ட நடத்தையுள்ள தகப்பனாரை பெற்றிருப்பார். பெண்மணி மூலம் அதிஷ்டம் பெறுவார் அது அவருடைய மனைவியாகவும் இருக்கலாம்
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!