Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம் -பகுதி -48-6-ம் வீட்டு அதிபதி நின்ற பலன்கள்

அடிப்படை ஜோதிடம் -பகுதி -48-6-ம் வீட்டு அதிபதி நின்ற பலன்கள்

6-ம் வீட்டு அதிபதி நின்ற பலன்கள்

 6-ம் வீட்டு அதிபதி லக்னத்தில் இருந்தால் ஜாதகர் நோயாளியாகவும், புகழ் பெற்றவராகவும், சொந்தக்காரர்களுக்கு விரோதியாகவும், செல்வந்தராகவும், மரியாதைக்குரியவராகவும்  வெற்றி அல்லது துணிந்து காரியங்களைச் செய்தல் நல்ல குணம் உடையவர்களாக இருப்பார்கள்

6-ம் வீட்டு அதிபதி(6th house in astrology) 2ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் துணிந்து காரியங்களில் ஈடுபட்டு ,போட்டியாளர்களிடம் கலந்து புகழ் பெறுவார். வெளிநாடுகளில் வசிப்பவர். சொந்த இடங்களின் மூலம்  மகிழ்ச்சியும் , திறமையான பேச்சாளராகவும், சொந்த வேலைகளில் மட்டுமே அதிகம் விருப்பம் உள்ளவராகவும் இருப்பர்

6-ம் வீட்டு அதிபதி மூன்றாம் வீட்டில் இருந்தால் ஜாதகன் கோபக்காரராகவும் , தைரியத்தை பறிகொடுத்தவராகவும் , உடன் பிறந்தவர்களிடம் விரோதிகளாகவும், பணிவு மற்றும்  நன்னடத்தை இல்லாத வேலைக்காரர்களை பெற்றிருப்பார்

6-ம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு தாயின் பாசம் மகிழ்ச்சி கிடைக்காது. நுண்ணறிவு உடையவர், பொறாமை உடையவர்,கோள் சொல்பவர் , சலன  புத்தியும் மாறுபட்ட மனதும், செல்வமும் பெற்று இருப்பார்.

6-ம் வீட்டு அதிபதி 5 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் ஏற்றத்தாழ்வு உடைய  நிதி வசதியும், மகனிடமும், நண்பர்களிடமும் பகைக்கு உள்ளாகுதல்  அன்புடனும், சுயநலத்துடனும் , மகிழ்ச்சியாகவும் இருப்பார்

6-ம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு அதிகமான பகையாளிகள்,மற்றவர்களிடம் நட்புடன் பழகும், சாதாரண திறமைகளுடன் ,செல்வத்துடனும், மகிழ்ச்சியாகவும் இருப்பர்

 6-ம் வீட்டு அதிபதி(6th house in astrology) ஏழாம் வீட்டில் இருந்தால் ஜாதகன் கல்யாணம்  போன்ற நிகழ்ச்சியினால் அவருடைய மகிழ்ச்சி குறையும். அவர் கீர்த்தி ,நல்லொழுக்கம் , மரியாதை, துணிவுடன் செயல்படுதல் , செல்வத்துடன் இருப்பார்

6-ம் வீட்டு அதிபதி

6-ம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் இருந்தால் ஜாதகன் நோயாளியாகவும், விரோதியானவராகவும், அடுத்தவர்கள் சொத்தை விரும்புபவராகவும், அடுத்தவர்களின் மனைவிகளை விரும்புதலும்,தரமற்றவராகவும் ,பரிசுத்தம் இல்லாமலும் இருப்பார்கள்

  6-ம் வீட்டு அதிபதி(6th house in astrology) ஒன்பதாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் மரம் அல்லது கற்கள், பாஷானம்  போன்ற தொழிலில் இருப்பார்கள் . தொழில் அதிர்ஷ்டம் ஏறி இறங்கும்

6-ம் வீட்டு அதிபதி பத்தாம் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு அருகில் உள்ள மக்கள் மத்தியில் நன்கு தெரிந்தவராகவும் , தந்தையாரிடம் நல்ல உறவு இருக்காது, மரியாதையும் இருக்கமாட்டா. மேலும் வெளிநாட்டில் இருப்பதில் மகிழ்ச்சி அடைவார். அவர் பரிசு பெற்ற பேச்சாளராக இருப்பார்.

6-ம் வீட்டு அதிபதி 11 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் தன்னுடைய எதிரிகளின் மூலம் சொத்துக்கள் பெறுவார், நல்ல ஒழுக்கம் உடையவர். துணிகரமான செயல்களை  செய்பவர் , எதையும் பறிகொடுத்தவர் போலும், சந்ததிகள் மூலம் மகிழ்ச்சி பறிபோய் இருக்கும்.

6-ம் வீட்டு அதிபதி 12 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் எப்பொழுதும் களங்கம் செய்வதிலும், கற்றறிந்த மக்களிடம் பகை கொண்டவராகவும் ,உயிருள்ள ஜந்துக்களை கொடுமைபடுத்துபவராகவும்  இருப்பார்

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!