8-ம் பாவாதிபதி நின்ற பலன்கள்-பராசரர்
8-ம் பாவாதிபதி (8th House in Astrology) லக்னத்தில் இருந்தால் ஜாதகர் வெளிப்படையான சந்தோஷம் இல்லாதவராகவும், காயங்களில் துன்பப்பட்டவராக இருப்பார். அவர் கடவுள்களிடம், பிராமணர்களிடம் அல்லது மதம் சம்பந்தப்பட்டவர்களிடமும் விரோதியாக இருப்பார்.
8-ம் பாவாதிபதி(8th House in Astrology) இரண்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் உடம்பு பலம் இல்லாதவராகவும், சிறிது செல்வம் பெற்றவராகவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெற முடியாத வராகவும் இருப்பார்.
8-ம் பாவாதிபதி(8th House in Astrology) மூன்றாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் சகோதரத் தன்மை இல்லாமலும், மகிழ்ச்சி இல்லாமலும், சோம்பல் உள்ளவராகவும், வேலையாட்களும், பலம் இல்லாதவராகவும் இருப்பார்
8-ம் பாவாதிபதி நான்காமிடத்தில் இருந்தால் ஜாதகர் தாயிடமிருந்து பிடுங்கிக் கொள்ளுதல், அவருக்கு வீடு நிலம் மகிழ்ச்சியின்மை. சந்தேகமில்லாமல் நண்பர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தல் போன்றவை இருக்கும்.
8-ம் பாவாதிபதி ஐந்தாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் மந்த புத்தி உடையவராகவும்,குறைந்த அளவு குழந்தைகளுடன் ,நீண்ட ஆயுளுடன் செல்வதுடன் வாழ்வார் .
8-ம் பாவாதிபதி(8th House in Astrology) 6ம் இடத்தில் இருந்தால் ஜாதகர் எதிரிகளை வெற்றி கொள்வார், நோயினால் வருத்தபடுவார் .குழந்தை பருவத்தில் பாம்பு,தண்ணீர் இவற்றால் ஆபத்துக்குள்ளாவார் .
8-ம் பாவாதிபதி 7ம் இடத்தில் இருந்தால் ஜாதகர் இரண்டு மனைவிகளை பெறுவார் .8ம் வீட்டு அதிபதியுடன் அசுபர்கள் சேர்ந்து 7ம் இடத்தில இருந்தால்,அங்கு கட்டாயம் ஜாதருடைய வியாபாரம் சரிவை சந்திக்கும் .
8-ம் பாவாதிபதி எட்டாமிடத்தில் இருந்தால் ஜாதகர் நீண்டநாள் வாழ்வார். 8-ம் பாவாதிபதி பலவீனமாக இருந்து எட்டாம் இடத்தில் இருந்தால் ஆயுளானது மத்திமமாகவும், ஜாதகர் திருடனாகவும் தன்மீது கெட்ட பெயர் ,பழி சொல்லிக்கொண்டு, மற்றவர்களையும் குற்றம் சாட்டுதல், பழி போடுதல் போன்ற குணங்கள் இருக்கும்.
8-ம் பாவாதிபதி(8th House in Astrology) ஒன்பதாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் மதத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்தல், நாத்திகம் பேசுதல்,துஷ்ட மனைவியை பெறுதல் மேலும் அடுத்தவர்களின் சொத்தை/ செல்வத்தை திருடுதல் போன்ற குணங்கள் இருக்கும்.
8-ம் பாவாதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் ஜாதகருக்கு பெற்றோரின் அன்பு கிடைக்காது. கோள் சொல்லுதல், ஜீவன ஆதாரத்தை பறிகொடுத்தல் முதலியவை இருக்கும். 8ம் அதிபதி சுபருடன் சேர்ந்தோ அல்லது சுபரின் பார்வை பெற்று இருப்பின் இந்த கெட்ட குணங்கள் ஏற்படாது
8-ம் பாவாதிபதி 11-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் சிறுவனாக இருக்கும் பொழுது செல்வம் இல்லாத நிலையும், கஷ்டமும்பட்டவர் பின்னர் மகிழ்ச்சி அடைவார்.8-ம் பாவாதிபதி சுபருடன் சேர்ந்து பதினோராம் இடத்தில் கட்டாயம் இருந்தால் ஜாதகர் நீண்ட நாள் வாழ்வார்.
8-ம் பாவாதிபதி பன்னிரண்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் கெட்டசெயல்களுக்கு செலவிடுவார். மேலும் அவர் வாழ்நாளும் குறைந்துவிடும்.8-ம் பாவாதிபதி அசுபருடன் சேர்ந்து 12ம் இடத்தில இருந்தால் மேற்கூறிய பலனை அதிகப்படுத்தும் .