அடிப்படை ஜோதிடம் -பகுதி19-வக்கிரம் பெற்ற கிரகங்களின் பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

வக்கிரம் பெற்ற கிரகங்களின் பலன்கள்

பல  ஜோதிட நூல்கள் படித்தாலும் வக்கிரமான கிரகங்களின் பலன்களை பற்றி அதிகமாக குறிப்புகள்  இல்லை என்றே கூற வேண்டும் .

நான் அறிந்த சில பொதுவான பலன்கள்  உங்களுக்குகாக ..

உச்ச வக்கிரம்-நீச பலன் 

நீச வக்கிரம் -உச்ச பலன் 

பாவ கிரகங்கள் வக்கிரம் பெற்றால் வீண் அலைச்சல் ,துக்கத்தை தரும் 

சுப கிரகங்கள்  குரு-புதன் -சுக்கிரன் ,பாவ கிரகங்கள் சனி-செவ்வாய் ஜனன காலத்தில் வக்கிரம் பெற்றவர்கள் இளமையில் துன்பத்தில் வளந்தாலும் ,பிற்காலத்தில் எதோ ஒரு வகையில் புகழ் பெறுகின்றனர்.

♦ஒரு ஜாதகத்தில் 3அல்லது அதற்கும் மேலான கிரகங்கள் வக்கிரமாக இருந்தால் ,கீழ் நிலையில் இருந்தும் உயர்நிலையை அடைந்து நீங்கா புகழும் எதிர்பாராத மறைவும் அடைகின்றனர் 

♦வக்கிரமான பாவர்கள் சுப பலன் தந்தாலும் கடைசியில் பலனற்ற நிலையை தருகிறது 

♦வக்கிரமான சுப கிரகங்கள் துவக்கத்தில் சோதனையை தந்தாலும் ,பின் நிலையான உன்னத வாழ்வை தருகிறது.

சனி வக்கிரம் -ஆன்மிகத்திற்கும் ,அரசு செல்வாக்கு 

பதன் வக்கிரம் -நுண்ணிய அறிவு ,கபட வேடதாரி 

மேஷம் ,கடகம் ,விருச்சிகம் ,சிம்மம் -லக்னங்களுக்கு வக்கிர சனி சுப  பலனை தருகிறார் 

 மிதுனம் ,கன்னி ,ரிஷபம் ,துலாம் ,மகரம் -லக்னங்களுக்கு வக்கிர குரு சுப பலனை தருகிறார் 

பொதுவாக  மேஷம் ,ரிஷபம் ,கடகம் ,சிம்மம் ,கன்னி ,விருச்சிகம் தனுசு,மகரம் மீனம் ,இராசிகளில் வக்கிரம் பெற்ற  கிரகங்கள் இருக்க பெற்றவர்கள்  புகழோடு தன கர்மாவை முடித்து கொள்கிறார்கள்.

வக்கிர குரு -கடவுள் நம்பிக்கை இல்லாதவன் ,குரு துரோகி ,மதத்தின் பெயரால் ஏமாற்றுபவன் .

வக்கிர சனி /செவ்வாய் -ஆன்மீகவாதி ,அரசியலில் ஈடுபாடு ,கடின உழைப்பு.

வக்கிர புதன் -நல்ல கல்வி ,புத்திசாலி.

வக்கிர சுக்கிரன் -தவறான வழிகளில் செல்வது ,சுக்கிரனின் காரகத்துவங்களில்  ஈடுபாடு இல்லாமல் போவது .

கிரக ஸ்தான பலம்அங்கு வக்கிரம் பெற்றால்
உச்ச வீடுநீச பலன்
ஆட்சி வீடுநல்ல பலன்
நட்பு வீடுசம பலன்
சம வீடுஆட்சி பலன்
பகை வீடுமூல திரிகோண பலன்
நீச வீடுஉச்ச பலன்
மூல திரிகோண வீடுமிக குறைவான பலன்
குரு வக்கிரம் :லக்கினத்தில் இருந்து 

1-ல் நன்மையை தருவதில்லை 

2-ல் சில சங்கடங்கள் இருந்தாலும் நற்பலனை செய்கிறது 

3-ல் சகோதர உறவு பாதிக்கபடும்/சகோதரமே இருப்பது இல்லை .

4-ல் தாய்க்கு நல்லதல்ல ,உறவினர்களுடன் கருத்து வேறுபாடு 

5-ல் புத்ர பாக்ய தடை ,புத்தி தடுமாற்றம் ஏற்படும் 

6-ல் துன்ப வாழ்க்கை 

7-ல் திருமணத்திற்கு பிறகு நற்பலன் ஏற்படும் 

8-ல் வேற்று மத பெண்ணுடன் திருமணம் ,விதவையின் தொடர்பு ,மறைத்த விஷயங்களை  வெளியே கொண்டு வருவார்கள் 

9-ல் எல்லாவற்றிலும் தோல்வி 

10-ல் தொழிலில் பிரச்னை ஏற்படும் ,ஒரே தொழிலில் இல்லாமல் மாறிக்கொண்டே இருப்பார்கள் 

11-ல் லாபம் இல்லை 

12-இல் உடல்நல பாதிப்பு ,நன்மையில்லை 

புதன்  வக்கிரம் :லக்கினத்தில் இருந்து 

1-ல் புத்திசாலிகளாக செயல்படுவார்கள்  

2-ல் கல்வியில் பிரச்னை ஏற்படும்  

3-ல் இளைய சகோதரர்களுக்கு நனமை கிடைக்கும் 

♦4-ல் பரதேசியாக சஞ்சரம் செய்வார் 

♦5-ல் பேச்சாற்றல் மிக்கவராக இருப்பர் 

♦6-ல் எதிரிகளால் தொல்லை ஏற்படும் 

♦7-ல் இல்லற வாழ்வில் பிரச்னை 

♦8-ல் சிறைவாசம் ,ஆயுளுக்கு பங்கம் ஏற்படும் 

♦9-ல் அனைத்து  பாக்கியங்களையும் இழப்பார்கள் 

♦10-ல் நிரந்தரமான தொழில் /பணி  அமையாது 

♦11-ல் எந்த தொழில் செய்தாலும் லாபம் கிடைக்கும் 

♦12-ல் சிறை தண்டனை கிடைக்கும் 

…வக்கிரம் தொடரும் 

நன்றியுடன்! 

சிவா.சி  

✆9362555266

Leave a Comment

error: Content is protected !!