சுமார் 60-க்கும் மேற்பட்ட யோகங்கள் அவரவர் ஜாதக நிலைகளை குறித்து நிர்ணயம் செய்யப்படுகின்றன கூட்டு கிரகங்களால் அமையப்பெற்ற இந்த யோகங்கள் அந்தந்த கிரகத்திற்கு உண்டான தசை நடக்கும்போது நல்ல பலனை தரும் கீழே காண்போம்.
அமாவாசை யோகம்
சூரியனும் சந்திரனும் ஒரே இராசியில் ஒரே நட்சத்திரக் காலில் இருக்கும் போது ஏற்படுவது இந்த அமாவாசை யோகம். அமாவாசை யோகத்தில் பிறந்தவர்கள் திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட பொருளைக் கண்டுபிடிப்பவராக இருப்பர். அனுமார் சீதையைக் கண்டு பிடித்தது போல் கண்டுபிடிப்பார்கள். துப்பறியும் நிபுணர்கள், காவல்துறை மேலதிகாரிகள் இந்த யோகம் உள்ளவர்களாய் இருப்பர்.
ஆனால், அமாவாசையில் பிறந்தவர்கள் திருட்டுக் குணம் படைத்தவர் என்ற தவறான கருத்து நிலவுகிறது. இவ்விதம் பிறந்தவர்கள் கருப்பு நிறத்தில் இருப்பார் என்பதும் தவறு அமாவாசையில் பிறந்தவர்கள் எத்தனையோ பேர் சிவந்த நிறமுடையவராவர். எனவே, அமாவாசையில் பிறந்தால் அஞ்ச வேண்டாம். இது தோஷமல்ல; யோகம் அமாவாசை அசுபதி ரோகிணி, புனர்பூசம், பூரம் சித்திரை அனுஷம், மூலம், திருவோணம் உத்திரட்டாதி நட்சத்திரங்களை ஒட்டியே வரும்.
பூர்ணிமா யோகம்
ஒருவர் பெளர்ணமியன்று பிறந்தால் இந்த யோகம் உண்டாகும். இவர்கள் அனைவராலும் விரும்பப்படுபவர்களாக விளங்குவர். வெளிப்படையான பேச்சு உள்ளவராக இருக்க நேரும். பரணி, கார்த்திகை, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம், ஸ்வாதி, அனுஷம், பூராடம், திருவோணம், அவிட்டம், ரேவதி நட்சத்திரங்களை ஒட்டியே பெளர்ணமி வரும்.
பௌர்ணமி பிறப்பு மற்றும் உத்தராயன மரணம் இரண்டும் புண்ணியமானது. தட்சிணாயன மரணம், அமாவாசை பிறப்பு இரண்டும் மத்திமமானது.