12 லக்னத்தினருக்கும் திருமண தடை நீக்கும் பரிகாரங்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

திருமண தடை நீக்கும் பரிகாரங்கள்

ஒரு மனிதனை முழுமையடைய செய்வது திருமண பந்தம். வாழ்நாளில் பெரும் பகுதியை மனிதன் வாழ்க்கைத் துணையுடன் தான் கழிக்கிறான். நல்ல வாழ்க்கை துணையே ஒருவருக்கு வரப் பிரசாதம். ஆணோ-பெண்ணோ வாழ்க்கைத் துணையே வாழ்நாளில் அச்சாணி. இத்தகைய திருமண பந்தம் சிலருக்கு பல்வேறு விதமான காரணங்களால் தடைபடுகிறது.

மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் சுப அசுப நிகழ்வுகளை மூன்று விதமான காரணிகளே தீர்மானம் செய்கின்றன. அவை

1.லக்ன ரீதியான காரணி

2.தசா ரீதியான காரணி

3.கோச்சார ரீதியான காரணி

இந்த மூன்று விதமான நிலைகளிலும் பெரிய பாதிப்பில்லாத போது வாழ்க்கைச் சக்கரம் இயல்பாக சுழலும். இதில் சில குறைபாடுகள் இருந்தால் அவற்றை களைய பரிகாரம் அவசியமாகிறது.

திருமணம் தொடர்பான பாவங்களான 1,2,5,7,8,12ம் இடங்களுடன் சம்பந்தம் பெறும் கிரகங்களுக்கு ஏற்ப திருமண பந்தம் அமைகிறது என்றாலும், 2-ம் இடமான குடும்பஸ்தானத்தையும், 7-ம் இடமான களத்திர ஸ்தானத்தையும் வலுப்படுத்தும் போது எளிதாக திருமண தடை அகலும்.

திருமண தடை

இனி 12 லக்னங்களுக்கும் திருமண தடை நீங்கும் பரிகாரங்களை பார்ப்போம்

மேஷ லக்னம்

மேஷ லக்னத்திற்கு 2 மற்றும் 7-ம் அதிபதி சுக்கிரன் என்பதால் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாள் வழிபாடு செய்வது சிறப்பு. தொடர்ந்து 27 வெள்ளிக்கிழமைகள் பசுவுக்கு உணவு தந்து பூஜிக்க வேண்டும்.

ரிஷப லக்னம்

ரிஷப லக்னத்திற்கு 2-ம் அதிபதி புதன், ஏழாம் அதிபதி செவ்வாய் என்பதால் ஒரு செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் பழனி மலை சென்று முருகனை வழிபட வேண்டும். தொடர்ந்து 27 புதன்கிழமைகள் பறவைகளுக்கு உணவிட வேண்டும்.

மிதுன லக்னம்

மிதுன லக்னத்திற்கு 2-ம் அதிபதி சந்திரன், ஏழாம் அதிபதி குரு என்பதால் ஒரு வியாழக்கிழமை குரு ஓரையில் சீரடி சாய்பாபா அல்லது ஸ்ரீ ராகவேந்திரரை வழிபட வேண்டும். 27 திங்கள்கிழமைகள் சிவபுராணம் படிக்க வேண்டும்.

திருமண தடை

கடக லக்னம்

கடக லக்கினத்திற்கு 2-ம் அதிபதி சூரியன், ஏழாம் அதிபதி சனி என்பதால் 9 சனிக்கிழமையில் சனி ஓரையில் முன்னோர் வழிபாடு தவறாமல் செய்ய வேண்டும். 27 வாரம் பசுவுக்கு கோதுமை மற்றும் நாட்டு சர்க்கரையை கலந்து உணவு கொடுப்பது நல்லது.

சிம்ம லக்னம்

சிம்ம லக்னத்திற்கு 2-ம் அதிபதி புதன், ஏழாம் அதிபதி சனி என்பதால் காரிய சித்தி உண்டாகும் வரை சனிக்கிழமைகளில் திருநள்ளாறு பச்சை பதிகம் படிக்க வேண்டும். பிரதோஷ நாட்களில் பச்சை பயிறு சுண்டல் படைத்து சிவனையும் நந்திகேஸ்வரரையும் வழிபட வேண்டும்.

கன்னி லக்னம்

கன்னி லக்னத்திற்கு2-ம் அதிபதி சுக்கிரன், ஏழாம் அதிபதி குரு எனவே வியாழக்கிழமை குரு ஓரையில் விரும்பிய சித்தர்கள் ஜீவசமாதியில் 16 நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஒன்பது வெள்ளிக்கிழமை மூன்று சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் தானம் வழங்கி ஆசி பெற வேண்டும்.

திருமண தடை

துலாம் லக்னம்

துலாம் லக்னத்திற்கு 2 மற்றும் ஏழாம் அதிபதி செவ்வாய் செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் செவ்வரளி சாற்றி 27 வாரம் முருகனை வழிபட வேண்டும். 9செவ்வாய்க்கிழமைகள் துவரம் பருப்பு சாம்பார் சாதம் செய்து அன்னதானம் வழங்க வேண்டும்.

விருச்சிக லக்னம்

விருச்சக லக்னத்திற்கு 2-ம் அதிபதி குரு, ஏழாம் அதிபதி சுக்கிரன் வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீரங்கம் சென்று தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பிரதோஷ நாட்களில் கொண்டைக்கடலை சுண்டல் படைத்து சிவனையும் நந்தியையும் வழிபட வேண்டும்.

தனுசு லக்னம்

தனுசு லக்னத்திற்கு2-ம் அதிபதி சனி, ஏழாம் அதிபதி புதன் 27 புதன்கிழமைகள் மகாவிஷ்ணுவுக்கு துளசி மாலை அணிவித்து வழிபட வேண்டும். சனிக்கிழமைகளில் வயது முதிர்ந்தவர்களுக்கு தண்ணீருடன் உணவு தானம் வழங்க வேண்டும். தலா இரண்டு நபருக்கு 27 வாரங்கள் கொடுக்க வேண்டும்.

மகர லக்னம்

மகர லக்னத்திற்கு 2-ம் அதிபதி சனி, ஏழாம் அதிபதி சந்திரன் என்பதால் ஒரு திங்கட்கிழமை திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை வழிபட வேண்டும். பிரதோஷ காலத்தில் கரும்பு சாறு அபிஷேகம் செய்து ஈஸ்வரனையும்நந்தியையும் வழிபட வேண்டும்.

திருமண தடை

கும்ப லக்னம்

கும்ப லக்னத்திற்கு 2-ம் அதிபதி குரு, ஏழாம் அதிபதி சந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஒருமுறையேனும் சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டும். வியாழக்கிழமையில் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்திற்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.

மீன லக்னம்

மீன லக்னத்திற்கு 2-ம் அதிபதி செவ்வாய், ஏழாம் அதிபதி புதன் 27 புதன்கிழமைகள் சக்கரத்தாழ்வாரை துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். காரிய சித்தி உண்டாகும் வரை செவ்வாய்க்கிழமை கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.

Leave a Comment

error: Content is protected !!