புதன் அருள் இருந்தால் வியாபாரத்தில் வெற்றி கொடிதான்
ஜாதகத்தில் வியாபார காரகனான புதன் இருக்கும் இடத்துக்கு, தேவகுருவும் தன காரகனுமான வியாழனின் பார்வை பரிபூரணமாக இருந்தால் வியாபாரம் செழித்தோங்கும். தொழிலில் எதிர்பாராத வரவுகளால் எதிர்காலம் சிறக்கும்.
ஜாதகத்தில் புதன் உச்சம் பெற்றிருக்கும் அன்பர் வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் பெறுவர்.
ராசியில் புதன் இருக்கும் வீடு கன்னியாகி நவாம்சத்திலும் கன்னியா ராசியில் புதன் இருப்பார் எனில் அவர் வர்க்கோத்தமம் பெறுவார். இதனாலும் குறிப்பிட்ட ஜாதகர் வியாபாரத் தில் ஈடுபட்டு பன்மடங்கு லாபம் பெற வாய்ப்பு உண்டாகும். இந்த புதன் ராசியில் சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கம் ஆகாமல் இருக்க வேண்டும் என்பது விதி.
தனம் மற்றும் லாபாதிபதிகள் 1,4,7,10அல்லது 5 ,9 ஆகிய இடங்களில் உச்சமாகவோ ஆட்சியாகவோ வலுத்து இருக்க ,புதன் பலமும் கூடியிருக்குமானால் குறிப்பிட்ட ஜாதகருக்கு வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் கிடைக்கும் .
அஷ்டவர்க்கப்படி புதாஷ்டவர்க்கத்தில் புதன் இருக்கும் இடத்தில் அதிக பரல்கள் இருக்குமென்றால் புதன் வலுத்திருகிக்கிறார் என சொல்லலாம் இப்படி அதிக பரல்கள் பெற்றிருக்கும் குறிப்பிட்ட ஜாதகருக்கு வியாபார ரீதியாக அதிக லாபத்தை தருவார் .
புதனுக்கு மிதுனமும் கன்னியும் பலம் மிகுந்த வீடுகள் ஆகும். ஏதேனும் ஒன்றில் புதன் இருக்க, புதனுக்கு சுபகிரக சேர்க்கையோ பார்வையோ ஏற்படும்போது, ஜாதகருக்கு வியாபார நுணுக்கங்கள் தெரியவரும். அதன்மூலம் வியாபாரத்தில் கொடி கட்டி பறப்பார்.
தொழில் ஸ்தானம் என்பது 10ஆம் இடமாகும் லக்னத்திற்கோ, சந்திர ராசிக்கோ ,சூரிய ராசிக்கோ 10ல் புதன் இருந்தால் மனதில் வியாபார சிந்தனை உருவாகும் 10ல் புதன் வலுப்பெற்று இருந்தால் வியாபாரமும் பிடித்த தொழிலாக அமையும். அதன் மூலம் அதிக லாபம் பெற முடியும்.
இப்படியான கணிப்பில் லக்னத்துக்கு முதலிடம் தரப்பட வேண்டும் அடுத்தது சந்திர ராசி அதன் பிறகு சூரிய ராசி லக்னம் வலுதிருந்தாள்லக்னப்படி பார்ப்பது சிறப்பாகும். ஜாதகத்தில் லக்னத்தை விட சந்திரன் லக்னம் அதிக பலம் பெற்றிருக்கும் அப்போது சந்திர லக்கினத்தை வைத்து பார்க்க வேண்டும்
தராசு என்ற துலா லக்னத்தில் பிறந்து பாக்கியாதிபதி புதன் லக்கினத்தில் அல்லது 10ல் பலம் பெற்று இருந்தால் குறிப்பிட்ட ஜாதகர் வியாபாரத்தில் ஈடுபட்டு அதிக லாபம் பெறுவான். தான் பெற்ற லாபத்தை அறபணிகளுக்காகவும் செலவிடுவார். காரணம் இங்கு பாக்யாதிபதியே விரயாதிபதியாகவும் ஆகிறார்.
தனுசு லக்னத்தில் பிறந்து தொழில் ஸ்தானாதிபதியான புதன் பத்தில் இருந்து லக்னாதிபதி குரு பார்வை பெற்றால் வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் பெற வாய்ப்பு உண்டாகும்
கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னாதிபதியான புதன் பகவானே தொழில் ஸ்தானாதிபதி ஆவார் அவர் நீச நிலை, பாப கிரக சேர்க்கை பெறாமல் கன்னி அல்லது மிதுனத்தில் இருந்தால் குறிப்பிட்ட ஜாதகர் வியாபாரத் தில் திறம்பட ஈடுபட்டு அதிக லாபம் பெறுவான்.
2 அல்லது 11 அதிபதியுடன் புதன் கூடி தன காரகனான குரு பகவான் வலுத்து புதனை பார்க்கும் நிலை அமையுமானால் ஜாதகர் வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவார்கள்.
பதன் 5ல் பலம் பெற்றிருக்க குருவின் தொடர்பும், 10ம் வீட்டு அதிபதியின் தொடர்பும் ஏற்படும் ஆனால் அந்த ஜாதகர் பரம்பரையாகச் செய்துவரும் வியாபாரத்தில் ஈடுபட்டு பன்மடங்கு லாபம் பெறுவான்.
குறிப்பாக வியாபார காரகனான புதனுக்கு சுப ஆதிபத்யம் ஏற்பட்டு சுபகிரகங்களின் சேர்க்கை பார்வை பெற்று, தொழில் ஸ்தானத்தோடும்(10ஆம் இடம்)தொழில் ஸ்தானதிபதியோடும்(10ஆம் அதிபதி) தொடர்பு கொண்டு பலம் பெற்று இருந்தால் வியாபாரத்தில் ஈடுபட்டு பன்மடங்கு லாபம் பெற இயற்கையாகவே வாய்ப்பு உண்டாகும்
புதன் பலம் இல்லாதவர்கள் வியாபாரத்தில் ஈடுபடாமல் இருப்பது அவசியம். அப்படி ஈடுபட்டால் நஷ்டம் அடைய நேரிடும். புதன் பலம் உள்ளவர்கள் புதனுக்கு அதிதேவதையான திருமாலை புதன்கிழமை தோறும் வழிபடுவதன் மூலம் வியாபாரத்தில் அதி வேகமாக முன்னேறலாம். அதிக லாபம் பெறலாம்.
எப்போது தொழில் தொடங்கலாம்
கோச்சார குருபலம் உள்ள காலங்களில் தொழில் தொடங்குவது விசேஷமாகும்.
அமிர்தயோகம் உள்ள நாள் விசேஷம் அடுத்தபடியாக சித்த யோகம். மரண யோகம் பிரபலாரிஷ்டயோகமும் நிச்சயம் விலக்கப்பட வேண்டும்.
தொழில் தொடங்கும் நாள் சுபமுகூர்த்த நாளாக அமைவது சிறப்பு. தொழில் ஸ்தா னமும்,தொழில் ஸ்தானதிபதியும் பலமாக உள்ள லக்னத்தை தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட லக்னம் அமையும் பஞ்சக சுத்தம் உள்ள (திதி,லக்னம்,வார, நட்சத்திரம்,துருவம்)நேரத்தில் தொழில் ஆரம்பிப்பது நல்லது.