உங்கள் கஷ்டங்கள் தீர்க்கும் இஷ்டதெய்வம்
போட்டிகள் நிறைந்த இந்த உலகில் ஒருவர் வாழ்வில் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ்வதற்கு அறிவு மனோ பலம் பண பலம் ஆயுள் பலமும் துணைபுரிகின்றன இத்தனை சிறப்பாக கிடைக்க வேண்டுமெனில் ஒருவருக்கு பூர்வ புண்ணிய பலமும், இஷ்ட தெய்வத்தின் அருளும் அவசியமாக அமைய வேண்டும்.
ஒருவரின் கஷ்டங்களை தீர்க்கும் இஷ்டதெய்வத்தை தெரிந்து கொள்வதற்கும் அதன் பலத்தை கூட்டி கொள்வதற்கும் நமது ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.
ஜாதகத்தில் அவருடைய பூர்வ புண்ணிய பலத்தை அறிந்து கொள்வதற்கும் அவரின் இஷ்ட தெய்வத்தை தெரிந்து கொள்வதற்கும் 5ம் இடத்தையும் 5ம் அதிபதியின் பலத்தையும் காண வேண்டும்
நமது ஜோதிட சாஸ்திரத்தை உருவாக்கிய ஜோதிட ஞானிகள் நவக்கிரகங்களுக்கு உரிய அதி தேவதைகளை நமக்கு அடையாளம் காட்டி சென்றுள்ளனர்.
சராசரி மனிதர்களின் சங்கடங்கள் தீரவும், தோல்விகளை தொடர்ந்து சந்திக்கும் மனிதர்கள் வெற்றிகளை பெறவும் மன கவலைகள் தீர்ந்து மகிழ்வுடன் வாழவும் அதி தேவதைகளின் அருளும், ஆசீர்வாதமும் வேண்டும் என்பது மகான்களின் மகத்தான நோக்கமாக இருக்க வேண்டும். வேறு என்னவாக இருக்க முடியும்.
இனி நவ கிரகங்களின் அதிதேவதை யார் என்று பார்ப்போம்
- சூரியனுக்கு -சிவன்
- சந்திரனுக்கு-பார்வதி
- செவ்வாய்க்கு-சுப்பிரமணியர்
- புதனுக்கு-மகாவிஷ்ணு
- குருவுக்கு-தக்ஷிணாமூர்த்தி
- சுக்கிரனுக்கு-லட்சுமி
- சனிக்கு-சாஸ்தா, ஆஞ்சநேயர்
- ராகுவுக்கு-காளி
- கேதுவுக்கு-விநாயகர்
ஒவ்வொரு லக்னத்திற்கும் உரிய இஷ்ட தெய்வம் யார் என்று பார்ப்போம்
மேஷம்
மேஷ லக்னத்துக்கு 5-ம் அதிபதி சூரியன் இவர் 5ம் இடத்தில் ஆட்சி பெற்றாலும், லக்னத்தில் பலம் பெற்றாலும் 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் சிவபெருமானை இஷ்ட தெய்வமாக வணங்கி வரலாம்.அதனால் வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும் ,பெருகும்
ரிஷபம்
ரிஷப லக்கினத்திற்கு 5-ம் அதிபதி புதன் இவர் ஐந்தாமிடத்தில் ஆட்சி உச்சம் பெற்றாலும், 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும், மகா விஷ்ணுவை வணங்கி வரலாம். அதனால் தொழிலில் மேன்மையும், சிறப்பும் வந்து சேரும்
மிதுனம்
மிதுன லக்கினத்திற்கு 5-ம் அதிபதி சுக்கிர பகவான். இவர் 5ல் ஆட்சி பெற்றாலும், 10ல் உச்சம் பெற்றாலும், 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் மகாலட்சுமியை இஷ்ட தெய்வமாக பூஜிக்கலாம். அதனால் அறிவில் தெளிவும், செயலில் உறுதியும், நிலைப்படும்.
கடகம்
கடக லக்னத்திற்கு 5ஆம் அதிபதி செவ்வாய் பகவான். இவர் ஐந்தில் ஆட்சி பெற்றாலும், ஏழில் உச்சம் பெற்றாலும், 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் சுப்பிரமணியரை இஷ்ட தெய்வமாக பூஜிக்கலாம். அதனால் ஞானம்,புகழ்,செல்வம், கந்தன் அருள் பெருகும்.
சிம்மம்
சிம்ம லக்னத்திற்கு 5-ம் அதிபதி குருபகவான். இவர் ஐந்தில் ஆட்சி பெற்றாலும், 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் தட்சிணாமூர்த்தியை இஷ்ட தெய்வமாக பூஜித்து வரலாம். அதனால் வாழ்வில் பொருளாதார மேன்மை, நினைத்ததை நிறைவேற்றும் தன்மை இரண்டும் வலிமை பெறும்.
கன்னி
கன்னி லக்னத்திற்கு 5-ம் அதிபதி சனி பகவான்.இவர் 5ல் ஆட்சி பெற்றாலும், 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் சாஸ்தாவை இஷ்ட தெய்வமாக பூஜித்து வரலாம். அதனால் மன உறுதி, மனத்தெளிவு, வெற்றி மனப்பான்மை உண்டாகும்.
துலாம்
துலாம் லக்கினத்திற்கும் 5-ம் அதிபதி சனி பகவான் ஆக வருகிறார் இவர் ஐந்தில் ஆட்சி பெற்றாலும், நாளில் நின்றாலும்ஸ் லக்னத்தில் உச்சம் பெற்றாலும், 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் ஆஞ்சநேயரை இஷ்ட தெய்வமாக பூஜித்து வரலாம். அதனால் ஆன்மபலம், ஆற்றல், மனோ சக்தி பெருகும், எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.
விருச்சிகம்
விருச்சிக லக்னத்திற்கு 5-ம் அதிபதி குருபகவான் இவர் ஐந்தில் ஆட்சி பெற்றாலும், 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் தட்சிணாமூர்த்தியை இஷ்ட தெய்வமாக பூஜித்து வரலாம். அதனால் சாதுக்கள் தரிசனம், சித்தர்கள் வழிபாடு, கிடைப்பதுடன் வாழ்வில் பல நன்மைகள் உண்டாகும்.
தனுசு
தனுசு லக்னத்திற்கு 5-ம்அதிபதி செவ்வாய் பகவான். இவர் 5ல்ஆட்சி பெற்றாலும், இரண்டில் உச்சம் பெற்று 5ஐ பார்த்தாலும் கந்தவேளை இஷ்ட தெய்வமாக பூஜிக்கலாம். அதனால் இவரின் வார்த்தைகள் மந்திரமாகும், வாழ்க்கை தவமாகும், நினைத்தது நிறைவேறும் ,செல்வம், புகழ்ஸ் ஞானம் பெருகும்.
மகரம்
மகர லக்னத்திற்கு 5-ம் அதிபதி சுக்கிர பகவான் இவர் 5ல் ஆட்சி பெற்றாலும், 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் மகாலட்சுமியை இஷ்ட தெய்வமாக பூஜிக்கலாம். அதனால் தன விருத்தியும் ,செல்வ செழிப்பும் பெருகும்.
கும்பம்
கும்ப லக்னத்திற்கு 5-ம் அதிபதி புதன் பகவான். இவர் 5ல் ஆட்சி பெற்றாலும்,5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் மகாவிஷ்ணுவை இஷ்ட தெய்வமாக பூஜித்து வரலாம். அதனால் நுணுக்கமான அறிவு, சமயோஜித புத்தியும், பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் பெருகும்.
மீனம்
மீன லக்னத்திற்கு 5-ம் அதிபதி சந்திர பகவான். இவர் ஐந்தில் ஆட்சி பெற்றாலும், 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும் பார்வதியை இஷ்ட தெய்வமாக பூஜிக்கலாம்.அதனால் உடல் வலிவு, மனத்தெளிவுஸ் தொழில் மேன்மை உண்டாகும்