சூரியனும் மற்ற கிரகங்களும்
சூரியனும் மற்ற கிரகங்களும்:
- சூரியனுடன் இணைந்து புதன் சிந்தனை வளத்தை பெருக்குவார் அதனை நிபுண யோகம் என்று பெருமைபட தெரிவிக்கிறது ஜோதிடம். ஆனால் சூரியனுடன் முற்றிலும் ஒன்றினால் (அஸ்தமனம்) விபரீத பலனைத் தந்து துயரத்தை சந்திக்க நேரிடும்.
- சூரியன் குருவுடன் சேரும் பொழுது ஆன்மீக நெறியை தந்தருள்வார்,
- செவ்வாயுடன் சூரியன் இணையும் பொழுது, உலகவியலில் திளைத்து சிறப்பான செயலால் பேரும் ,புகழும் பெற்று திகழலாம் .
- சூரியன் சந்திரனுடன் இணைந்தால் மனத் தெளிவை ஏற்படுத்துவார்,
- சூரியன் சுக்கிரனுடன் இணைந்தால் தாம்பத்தியத்தை இழக்க நேரிடும்,
- சூரியன் சனியுடன் இணைந்தால் தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட நேரிடும், செல்வவளம் பெற்றாலும் செல்லாக்காசாக மாற நேரிடும்.
- சூரியன் ராகுவுடன் சேர்ந்தால் வீண் பழி ,அவப்பெயர்தான் மிஞ்சும், பலவீனமான மேகமும் சில தருணங்களில் சூரியனின் ஒளி பரவாமல் தடுப்பது உண்டு. அதே போல் ஒளிப் பிழம்பான சூரியனை இருள் கிரகம் மறைப்பதும் உண்டு .
- சூரியன் கேதுவுடன் சேர்ந்தால் வசதி இருந்தும் அனுபவ அறிவு இல்லாது போகும், வசதி உலகவியலில் அடங்கும் , சுகம், மனம் சார்ந்த விஷயம். ஒன்றை அழித்து மற்றொன்றை அளி க்க வைப்பார்.
சூரியனின் நிலைகள்
உச்சம் , ஸ்வக்ஷேத்திரம் போன்ற நிலைகளில் சூரியன் இருந்தால் அந்த ஜாதகனை செல்வாக்கு மிகுந்தவனாக மாற்றிவிடுவார். அவனது தனித் தன்மையை அழியாமல் சூரியன் காப்பாற்றுவார்.
நீசம் ,சத்ருஷேத்திரம் ஆகிய நிலைகளில் இருந்தால் விழுந்து விழுந்து வேலை செய்தாலும் தகுதி இருந்தும் சிறப்பிக்க முடியாது போகும். சமூகத்தில் அங்கீகாரம் இருக்காது.
பலம் பொருந்திய குரு புதன் ஆகியோருடன் இணைந்தால் சிந்தனை வளம் பெருகும், தன்னம்பிக்கை பிறக்கும், மக்கள் சேவையுடன் திகழலாம், புகழுடன் வாழலாம் ,ஆன்ம காரகனின் தொடர்பு பலன்ங்களை சுவைக்க துணைபுரியும்.
எந்த இடம்… என்ன பலன்?
ஜாதகப்படி சூரியன் அமைந்திருக்கும் நிலைக்கு தக்க அவர் என்னென்ன பலன்களை தருவார் என்பதை இனி காண்போம்.
முன்னதாக உங்கள் ஜாதகத்தில் அவர் அமர்ந்திருக்கும் இடத்தை அறிந்து கொள்ளுங்கள்ஜாதக கட்டத்தில் “ல” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடமே முதலாவது வீடாகும். அதிலிருந்து அடுத்தடுத்த வீடுகளை கணக்கிடலாம் அதன்படி சூரியன் இருக்கும் இடத்திற்கு ஏற்ப பலன்களை அறிந்து கொள்ளலாம்
- லக்னத்தில் சூரியன்: ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் கேசம் உடையவராக இருப்பார். செயல்படுவதில் வேகம் குறைவாக இருக்கும். கோபம் மிகுந்து இருக்கும். உயரமானவர், மெலிந்த தேகம் மற்றும் சிவந்த கண்களைக் கொண்டவர்.
- 2-ம் வீட்டில் சூரியன்: கல்வி, செல்வம், பணிவு இல்லாதவர். சொந்த வீடு உண்டு. அடிக்கடி இடம்பெயர்வார் . பரம்பரை சொத்துகள் விரயமாக்கு
- வார்.
- 3-ம் வீட்டில் சூரியன்: வீரம், வலிமை, செல்வம், தாராள மனம் உடையவர். உறவினர்களிடம் பகை ஏற்படும். சகோதரர்களால் உதவி கிட்டாது. லட்சுமி கடாட்சம் மிகுந்தவர்.
- 4-ம் வீட்டில் சூரியன்: அரசாங்க வேலை கிடைக்கும், சொந்த வீடு, நிலம் எதுவும் இருக்காது .உறவினர்கள், நண்பர்கள், சுகமான வாழ்வு போன்றவற்றில் பாதிப்புகள் உண்டு. உழைப்பால் முன்னேறுவர் .
- 5-ம் வீட்டில் சூரியன்: புத்திசாலிகளாக இருப்பார்கள். காடுகளில் பயணம் செய்யப் பிடிக்கும். மகிழ்ச்சி .செல்வம் ஆகியவற்றில் திருப்திஇருக்காது.
- 6-ம் வீட்டில் சூரியன்: ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் சூரியன் இருப்பது சிறப்பு. இத்தகைய ஜாதகர் அரசாளும் யோகம் பெற வாய்ப்பு உண்டு. புகழ், நற்குணங்கள், செல்வம், வெற்றி ஆகிய யாவையும் வந்து சேரும்.
- 7-ம் வீட்டில் சூரியன்: இந்த நிலை பாதிப்பானது ஏழில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள் அரசாங்கத்தால் அல்லல்களை சந்திப்பார்கள்.
- 8-ஆம் வீட்டில் சூரியன்: பார்வையில் பாதிப்பு ஏற்படும், நண்பர்களை அரவணைப்பதும் , நட்புக்கு முக்கியத்துவம் அளிப்பதும் நன்று.
- 9-ம் வீட்டில் சூரியன்: உறவுகள் சூழ வாழ்பவர், தெய்வ வழிபாடுகளில் நம்பிக்கையும் அதனால் பலன்கள் அதிகமுண்டு.
- 10-ம் வீட்டில் சூரியன்: இது நல்லதொரு அமைப்பு மழலைச் செல்வம், வாகனங்கள், புகழ், புத்திசாலித்தனம், செல்வம், வலிமை மிக்கவர். நற்பெயர் உடையவர். அரசனுக்குச் சமமான யோகமுண்டு.
- 11-ம் வீட்டில் சூரியன்: செல்வ யோகம் உண்டாகும், துயரத்தை சந்திக்காத வாழ்வு, நீண்ட ஆயுள் உண்டு.
- 12-ஆம் வீட்டில் சூரியன்: பார்வையில் பாதிப்பு உண்டாகும், தந்தையிடம் விரோதம் ஏற்பட வாய்ப்புண்டு. உழைப்பால் செல்வம் சேர்ப்பார்கள்.
சூரிய வழிபாடு:
ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாட்டுக்கு உகந்த நாள். விண்வெளியில் தனது ஓடுபாதை நடுநாயகமாக விளங்க, மற்ற கிரகங்களை தனது கிரணத்தால் செயல்பட வைத்து உலக இயக்கத்தை செம்மைப்படுத்தும் சூரிய தேவனை
“ஸீம் ஸீர்யாய நம” என்று சொல்லி 16 உபசாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சூரியன் உதிப்பதற்கு முன்பே அவரை வணங்குவதும் வழிபடுவதும் சிறப்பு.
சூரிய நமஸ்காரம் 12 முறை செய்ய வேண்டும்
மித்ர-ரவி-சூர்ய-பானு-கக-பூஷ -ஹிரண்யகர்ப-மரீசி-ஆதித்ய-ஸவித்ரு-அர்க்க -பாஸ்கரேப்யோ நம: என்று சொல்லி வணங்கலாம்.
மித்ராய நம
ரவயநம
சூர்யாய நம
பானவே நம
ககாய நம
பூஷணேநம
ஹிரண்யகர்பாய நம
மரீசயே நம
ஆதித்யாய நம
ஸவிதரே நம
அர்க்காய நம
பாஸ்கராய நம
என்று சொல்லி புஷபத்தை கைகளால் அள்ளி ,அவரது திருவுருவத்திற்கு அளிக்க வேண்டும்.
“பானோ பாஸ்கர மார்த்தாண்ட சன்ரச்மே திவாகர ” என்ற செய்யுளை சொல்லி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் !