ஜாதகத்தில் செவ்வாய் – பலமும் – பலவீனமும்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

ஜாதகத்தில் செவ்வாய் – பலமும் – பலவீனமும்

ஜாதகத்தில் செவ்வாய்  நிலையை கொண்டு ஒருவரது உடல் நலம் அவர் தைரியமானவரா அவருக்கு ஏதாவது விபத்து நிகழுமா போன்ற விவரங்களை கூறி விடலாம். செவ்வாய் பூமிகாரகன், சகோதரர்களுக்கிடையேயான  உறவையும் குறிக்கும்.
 செவ்வாய் லக்னத்தில் இருந்தால்
  • அந்த ஜாதகர் பூமி ,வாகனத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வார், நண்பர்கள் பலர் அமைவர்,சிலர் பெரிய பதவிகளில் இருப்பார்கள் ,பலர் ராணுவத்தில் பணியாற்றுவார்கள், பலசாலியாக இருப்பார்கள் ,
  • செவ்வாய் பலவீனமாக அல்லது பாப கிரகத்துடன் இருந்தால் அல்லது பார்க்கப்பட்டால் அவரது வாழ்க்கையில் பல சிக்கல்கள் நேரும் மேலும் பலருக்கு அடிக்கடி விபத்துகள் நிகழும் திருமண வாழ்க்கையிலும் பிரச்சனை ஏற்படும் சிலருக்கு மறுமணம் செய்ய வேண்டிய சூழல் அமையும்
  • சிலர் உரிய நேரத்தில் உணவு அருந்த மாட்டார்கள் தலைவலி மூட்டுவலி உண்டாகும்
லக்னத்திற்கு 2-ல்  செவ்வாய் இருந்தால்
  • அந்த ஜாதகருக்கு பலவிதமான சந்தோஷங்களும் கிடைக்கும், அதிகமாக உணவு அருந்துவார் ,அதனால் வயிற்றில் கோளாறு ஏற்படும்
  • செவ்வாய் பாப கிரகத்துடன் இருந்தால் அல்லது பார்க்கப்பட்டால் அவரது குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும் சிலருக்கு மறுமணம் செய்யும் நிலை உண்டாகும்
  • செவ்வாய் பலவீனமாக இருந்தால் ஜாதகர் சரியாக சாப்பிட மாட்டார் வேலைக்காக அலைந்து கொண்டிருப்பார் சிலர் மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்க நினைப்பார்கள்
  • சிலருக்கு பித்தம், தோல் நோய் ஏற்படும்
செவ்வாய் 3-ல் இருந்தால்
  • அந்த ஜாதகர் அதிக தைரியம் கொண்டவராக இருப்பார், நன்கு உணவு உண்பார் .
  •  செவ்வாய் ராகு, சனியால் பார்க்கப் பட்டால் அவருக்கு சகோதரர்களுடன்  உறவு சரியாக இருக்காது, சிலருக்கு டைபாய்டு காய்ச்சல் வரும் ,சிலரது உடல் மிகவும் பருமனாக இருக்கும்
செவ்வாய் 4-ல் இருந்தால் 
  • அந்த ஜாதகரின் குடும்ப வாழ்க்கையில் பல தொல்லைகள் ஏற்படும்
  •  பலருக்கு திருமணத்தடை உண்டாகும், நிறைய பேசுவார்கள்
  • ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 4-ல் செவ்வாய் இருந்தால் அவர் எப்போதும் சண்டையிடுவார், கணவன் மனைவிக்கிடையே உறவு நன்றாக இருக்காது.
  •  அவர் நன்கு சாப்பிடுவார், தூங்குவார், பிறருக்கு தொல்லைகள் தருவார்.
செவ்வாய் 5-ம் பாவத்தில் இருந்தால் 
  • செவ்வாய் ஐந்தாம் பாவத்தில் இருந்து அந்த செவ்வாயை பாவ கிரகம் பார்த்தால் அவருக்கு வயிற்றில் நோய் ஏற்படும்
  • குழந்தை பிறப்பதில் பிரச்சனை உண்டாகும் ,பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வராது, கர்ப்பப்பையில் பிரச்சனை, ரத்தக் குறைவு இருக்கும்
  •  உடலில் கால்சியம் குறைவாக இருக்கும்
  • செவ்வாய்
 6-ல் செவ்வாய் இருந்தால்
  •  அந்த ஜாதகர் அதிகமாக கோபப்படுவார்
  • செவ்வாய் சனியின் பார்வை இருந்து ஜாதகருக்கு தசா காலங்கள் சரியில்லாமல் இருக்கும் பொழுது யாரோ சூனியம் செய்து விட்டதாக உணர்வார்
  • அவர் மிளகாய் உப்பு வறுத்த பொருட்களை அதிகமாக உண்பார்கள் அதனால் ரத்தக்கொதிப்பு உண்டாகும்
7-ல் செவ்வாய் இருந்தால் 
  • ஜாதகருக்கு குடும்ப வாழ்வில் பல பிரச்சனைகள் ஏற்படும்
  • செவ்வாயின் ஏழாம் பார்வை லக்கனத்திற்கு இருப்பதால் ஜாதகர் ருசியாக  உண்பார் கோபம் அதிகமாக வரும் இரண்டாம் பாவத்திற்கும் பார்வை இருப்பதால் தேவையற்றதை பேசுவார் அதிகம் உண்பார் அவரது காலில், வயிற்றில், பிரச்சனைகள் ஏற்படும்
8-ல் செவ்வாய் இருந்தால் 
  • சிலருக்கு ரத்த சம்பந்தமான நோய் இருக்கும்
  • சிலருக்கு அடிக்கடி விபத்து நிகழும்
  • செவ்வாய் சனியால் பார்க்கப் பட்டால் தீய தசா புத்திகளில் சிலருக்கு உயிருக்கே ஆபத்து உண்டாகும்
  • செவ்வாய் ராகுவுடன் இருந்தால் சிலருக்கு மறுமணம் நடக்கும் எட்டில் உள்ள செவ்வாய் இரண்டாம் பாவத்தையும் ,மூன்றாம் பாவத்தையும் பார்க்கும். சிலர் வீண் பேச்சால் பகைவர்களை உருவாக்கிக் கொள்வார்கள்.
9-ல் செவ்வாய் இருந்தால் 
  • அந்த ஜாதகர் யாரையும் மதிக்க மாட்டார்
  • தந்தையுடன் உறவு சரியாக இருக்காது
  • உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இருக்காது
  • அந்த செவ்வாய் சனி ராகுவுடன் இருந்தால் அவர் தன் பூர்வீக சொத்தை அழித்து விடுவார்
  • வீணாக சுற்றிக் கொண்டிருப்பார் ,மரியாதை குறைவான நபர்களுடன் பழகுவார், சரியாக உணவு உண்ண மாட்டார்.
10-ல் செவ்வாய் இருந்தால் 
  • அந்த ஜாதகர் புகழுடன் இருப்பார் குடும்பத்தின் குத்துவிளக்காக விளங்குவார் ,கடுமையாக உழைப்பார்
  • சந்திரனுடன் செவ்வாய் இருந்தால் பெரிய அரசியல்வாதியாக திகழ்வார்,
  • நிறைய நிலங்கள் இருக்கும்
  • குருவுடன் செவ்வாய் இருந்தால் சிலர் பிறரை ஏமாற்றுபவர்கள், சொத்துக்களை அபகரிக்க முயல்வார்கள்

செவ்வாய்

11-ல் செவ்வாய் இருந்தால் 
  • அந்த ஜாதகர் பணக்காரராக இருப்பார்
  • செவ்வாய் சனி மற்றும் ராகு உடன் இருந்தால் வயிற்றில் பிரச்சினை ஏற்படும்
12-ல் செவ்வாய் இருந்தால்
  • அந்த ஜாதகர் கோப குணம் கொண்டவராக இருப்பார்
  • செவ்வாய் சனியுடன் இருந்தால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது
  • செவ்வாய் குருவுடன் இருந்தாலோ அல்லது குருவால் பார்க்கப்பட்டால் அவர்கள் புகழுடன் விளங்குவார்கள்
 பரிகாரங்கள் 
  • வறுத்தஉணவுப்பொருட்களைஅதிகம்உண்ணகூடாது
  • செவ்வாய்க்கிழமைகளில் அசைவ உணவை தவிர்க்க வேண்டும்
  •   குலதெய்வ வழிபாடு அவசியம்.
  • தினமும் இரவில் தூங்குவதற்கு முன் சிறிது வெல்லம் சாப்பிட வேண்டும்
  •   செவ்வாய்க்கிழமை அன்று ஆஞ்சநேயரை நான்கு முறை சுற்றி வந்து வணங்க வேண்டும்
  • வெல்லம் வாழைப்பழம் ,பூந்தி ஆகியவற்றை அவருக்கு பிரசாதமாகப் படைத்து பின்னர் அவற்றை பிறருக்கு தந்து தானும் உண்ண வேண்டும்
  •  சகோதரர்களுடன் இணக்கமாக பழக வேண்டும்
  • படுக்கை அறையில் சிவப்பு வண்ணத்தை தவிர்க்கவும்
  • வீட்டில் தென்கிழக்கில் நீர் பிடித்து வைப்பது கூடாது

Leave a Comment

error: Content is protected !!