குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-சிம்மம்
மனசாட்சிக்கு கட்டுப்பட்டவராகவும். எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்டவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5. 8-க்கு அதிபதியான குருபகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் வரும் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) சஞ்சாரம் செய்ய உள்ளதால் எந்த ஒரு செயலிலும் நீங்கள் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைய எதிர்நீச்சல் போடவேண்டியது இருக்கும்.
10-ல் சஞ்சரிக்க கூடிய குருபகவான் தனது சிறப்பு பார்வையாக 2, 4, 6 ஆகிய ஸ்தானங்களை பார்க்க உள்ளார். அசையும் அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படும். ஒவ்வொரு விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக இருந்தால்தான் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும்.
தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலை ஆட்கள் சில நெருக்கடிகளை தருவார்கள் என்பதால் ஒருசில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் நிலைமையை சமாளித்து வாடிக்கையாளர்களிடம் நல்லபெயர் எடுக்கமுடியும். நீங்கள் எவ்வளவுதான் சிறப்பாக செயல்பட்டாலும் கூட்டாளிகள் உங்களுக்கு தேவையற்ற இன்னல்களை ஏற்படுத்துவார்கள். ஒருசிலருக்கு கூட்டாளிகள் அவர்களுடைய பங்கை கேட்டு தொந்தரவு செய்வார்கள்.
வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் சக ஊழியர்களுடைய வேலையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். அதிக வேலைப்பளு காரணமாக உடல் அசதி, ஓய்வு நேரம் குறையக்கூடிய நிலை வரும் நாட்களில் ஏற்படலாம். மற்றவர்கள் கூறக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி நீங்கள் ஏமாறாமல் இருப்பது நல்லது. அதிகாரிகளுடைய ஆதரவு சிறப்பாக இருக்கக்கூடிய நேரம் என்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பணி நிமித்தமான விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும்.
ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும், நிழல் கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய கேது உங்கள் ராசிக்கு 2-லும், ராகு 8-லும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து. செல்லவேண்டிய நேரமாகும்.
உற்றார்- உறவினர்களை முடிந்த வரை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. பேச்சால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம் என்பதால் பேச்சை குறைத்துக் கொள்வது உத்தமம். ஒரு சிலருக்கு உண்ணும் உணவே உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடிய நேரம் என்பதால் குறிப்பாக அலர்ஜி தொடர்பான உடல் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களை தவிர்த்து விட்டு உங்களுடைய அன்றாட பணியில் கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது.
குருபகவான் பார்வை
குரு பார்வை : 2ம் இடம் (குடும்பம்,வாக்கு ),4ம் இடம் (தாய் ,வீடு,வாகனம் ),6ம் இடம் (நோய் ,கடன்,வேலை ) |
குருபகவான் வக்ரகதியில் 9-10-2024 முதல் 4-2-2025 வரை
குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தராசுத் தட்டில் இட்ட எடை கல்லைப் போல ஏற்ற – இறக்கமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடந்த கால கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
உங்கள் ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும் சுபகாரிய முயற்சிகள் தற்போது கைகூடி மன மகிழ்ச்சி ஏற்படும். உற்றார் – உறவினர்கள் ஓரளவுக்கு ஒத்துழைப்பாக இருப்பாசிர்கள். செய்யும் தொழில், வியாபாரத்தில் அவ்வளவு சிறப்பான பலனை எதிர்பார்க்கமுடியாது என்றாலும் தேக்கநிலை அடையாமல் சமாளிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் பணிச்சுமை அதிகரிக்கும். எதிலும் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தினால் மட்டுமே நற்பலன்களைப் பெற முடியும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. உடனிருப்பவர்களிடம் பேச்சைக் குறைத்து கொள்வது உத்தமம். மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறமுடியும்.
பரிகாரம்
சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு 10-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருபகவானுக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள்நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது. புஷ்பராக கல் அணிவது நல்லது.
உங்களுக்கு சனி 7-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைகளில் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள சனிபகவானுக்கு அர்ச்சனை செய்வது, கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது நல்லது. கருப்புநிற ஆடை அணிதல், கைக்குட்டை பயன்படுத்துவது நல்லது. எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள்,
குடை, அடுப்பு போன்றவற்றை ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.
உங்கள் ராசிக்கு 2-ல் கேது 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம். ராகுவுக்கு பரிகாரமாக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 1, 2, 3, 9
நிறம்: வெள்ளை, சிவப்பு
கிழமை: ஞாயிறு, திங்கள்
கல்: மாணிக்கம்
திசை: கிழக்கு
தெய்வம்: சிவன்