மேஷம்
இவர்களுக்கு சஷ்டி திதி அனுகூலம் தரும். இவர்கள் அமாவாசை மற்றும் பிரதமை திதிகளை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே இந்த இரண்டு திதிகளையும் எவரும் சுப காரியங்களுக்கு பயன்படுத்துவது இல்லை.
ரிஷபம்
வளர்பிறை சதுர்த்தசி அதிர்ஷ்டம் தரும். இந்த திதியில் இவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தசமி திதியை தவிர்க்கலாம்.
மிதுனம்
பஞ்சமியும் சப்தமியும் அனுகூலம் செய்யும். தொழில் தொடங்குவது, புது சொத்துக்கள் வாங்குவது, சுபகாரியங்களுக்கு ஆரம்பப் பணிகளை செய்வது என இந்த நாளில் செயல்பட்டால் நற்பலன்கள் கிடைக்கும். அஷ்டமி ,நவமியை தவிர்க்கலாம்.
கடகம்
முன்னேற்றத்திற்கு அச்சாரமான முயற்சிகளை கடக ராசியினர் சதுர்த்தி திதிநாளில் தொடங்கினால் வெற்றி நிச்சயம். இவர்கள் துவாதசி திதியை தவிர்க்கலாம்.
சிம்மம்
ராஜா ஆளுமை மிக்க இந்த ராசியினர் குடும்பம், தொழில், உத்தியோகம் சார்ந்து எவ்வித புது முயற்சிகளாக இருந்தாலும் சப்தமி திதி நாளில் தொடங்கினால் பன்மடங்காக பலன் கிடைக்கும். இவர்கள் திரியோதசி, சதுர்த்தசி திதி நாட்களை தவிர்க்கலாம்.
கன்னி
இவர்களுக்கு திருதியை அனுகூல பலன்களையும், அதிர்ஷ்ட யோகங்களையும் தரும். சஷ்டி மற்றும் சதுர்த்தசி திதி நாட்களில் புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும்.
துலாம்
பயணம் முதல் பிசினஸ் வரையிலும் இவர்கள் பஞ்சமியை தேர்ந்தெடுத்து காரியம் ஆற்றினால் நன்மைகள் வந்து சேரும். அஷ்டமி, நவமியை தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
தசமியும் , ஏகாதசியும் அதிர்ஷ்டம் தரும். செய்தொழிலில் புதிய நடவடிக்கைகள், குடும்ப காரியங்கள் முதலானவற்றுக்கு இந்த இரண்டு திதிகளும் சிறப்பு சேர்க்கும். சதுர்த்தி, சஷ்டியை இவர்கள் தவிர்ப்பது நலம்.
தனுசு
இவர்களுக்கு அனுகூலமான திதிகள் திருதியை மற்றும் சதுர்த்தி. துவாதசி மற்றும் திரயோதசி திதி நாள்களை தவிர்க்கவும்.
மகரம்
இந்த ராசிக்காரர்களுக்கு சப்தமியும், பஞ்சமியும் நன்மை அளிக்கும். இந்த நாட்களில் சுபகாரியங்களுக்கு அச்சாரம் இடலாம். நவமி மற்றும் தசமியை தவிர்க்கலாம்.
கும்பம்
திருதியையும், சதுர்த்தியும் சிறப்பான பலன்களை தரும். அஷ்டமி நவமியை வழக்கம் போன்று தவிர்த்து விடலாம்.
மீனம்
இந்த ராசி அன்பர்கள் பஞ்சமி மற்றும் சஷ்டி திதி நாட்களில் தொடங்கும் காரியங்கள் அனுகூல பலன்களை அள்ளி வழங்கும். பிரதமை மற்றும் ஏகாதசி திதி நாட்களை இவர்கள் தவிர்த்து விடலாம்.