லக்னம் நின்ற நட்சத்திர ரகசியங்கள்
ஒரு ஜாதகத்தை எடுத்ததும் ஜாதக பலத்தை தெரிந்து கொள்ள லக்னத்தைப் பார்ப்பர் லக்னாதிபதிபலம் பெற்று உள்ளதா என்பதை அறிய முதலில் லக்னாதிபதி நின்ற இடம், லக்னாதிபதி நின்ற அதிபதியின் நிலையை கவனிப்பார்.
லக்னாதிபதி நின்ற இடம்
லக்னாதிபதி 1,4, 10 கேந்திரம், 5,9 திரிகோணத்தில் இருக்கிறது என்றால் உயர்தர யோகம் தரும் எனவும், 2,7 ,11-ல் இருந்தால் யோகம் தரும் எனவும், 3, 6 ,8 ,12ல் இருந்தால் நஷ்டத்தையும் கஷ்டத்தையும் அதிகம் சந்திக்கும் நபராக இருப்பார் எனவும் சொல்வர். மேலும் லக்னாதிபதிக்கு சுபர் கிரக பார்வை இருந்தால் சிறப்பென பொதுப்படையாக பலன் பார்க்கும் வழக்கம் உண்டு.
லக்னாதிபதி நின்ற அதிபதி
லக்கினாதிபதி நின்றஅதிபதி 4, 5, 9, 10-க்குரியவராக இருந்தால் ஜாதகர்கள் நல்லவராகவும் மிக யோகமானவராகவும் இருப்பார். 2,7,9-க்குரியவராக இருந்தால் மாரகாதிபதியாக இருந்தாலும் சிறப்பையே தரும்.லக்னாதிபதி தனது நட்சத்திர சாரம் பெற்றால் வாழ்க்கை முன்னேற்றமாக இருக்கும் .லக்னாதிபதி சந்திரன் லக்னத்திலேயே ஆட்சி பெற்றால் திடமாக இருப்பர். சிம்ம லக்னாதிபதி சூரியன் லக்னத்திலேயே இருந்தால் ஆதிக்கம் மிக்கவர்.
லக்னாதிபதியுடன் 3, 6 ,8, 12-க்கு உடையவர்கள் இருந்தால்சுற்றியிருப்பவர்களின் பேச்சை கேட்காதவர்களாக இருப்பார்கள். லக்னாதிபதி மேஷம் துலாம் லக்னத்திற்கு 1,8-க்குடையவராகவும், ரிஷபம் விருச்சிக லக்னத்திற்கு 1,6-குடையவராகவும், கும்ப லக்னத்திற்கு 1,12 -க்குடையவராகவும் இருந்தால் ,சுபகிரக வலு இல்லை என்றால் இரண்டு ஆதிபத்தியத்தால் தடைகள், சோதனைகள் ஏற்படும். லக்னாதிபதி பாவகிரகமாக இருந்து லக்னத்தில் பலம் பெற்றால் மனைவியுடன் கருத்து வேறுபாடு தோன்றும்.
பாவகிரகங்கள் லக்னாதிபதியுடன் இணைந்தாலோ, பார்த்தாலோ, 3, 6, 8, 12ம் அதிபதிகள் தொடர்பு ஏற்பட்டாலோ பலவித தொல்லைகளையே தரும்.
மேலும் நுணுக்கமாக அறிய லக்னாதிபதி நின்ற நட்சத்திர அதிபதி 1, 2 ,4, 5 ,7 ,9 ,10, 11-க்குரியவராக இருந்தால் சிறப்பானது. 3, 6 ,8, 12ஆகிய நட்சத்திர சாரம் பெற்றால் நன்மை தராது. அதாவது மூன்றாம் அதிபதி என்றால் தயக்கமும், 6,8-ம் அதிபதியாக இருந்தால் நோய், எதிரி,கடனாலும், அடிக்கடி பாதிக்கப்படுவார். 12ம் அதிபதியாக இருந்தால் அதிக விரயத்துடன் இருப்பார் என முடிவுக்கு வந்துவிடலாம்.
ஆனால் மேற்கண்டபடி லக்னம் லக்னாதிபதி பலன் சிலருக்கு நடப்பதில்லை. அதனால் குழப்பம் ஏற்படுகிறது .சிலருக்கு லக்னாதிபதி நன்றாக இருந்து சுப கிரக பார்வை பெற்று அதற்குரிய தசை நடக்கும்போது நற்பலன்கள் பெறாமல் அதிக துன்பத்தை அடைகிறார்கள். அந்த நேரத்தில் நடக்கும் சனி ,குருவின் கோச்சாரப் பலன் சரியில்லை என சமாதானப்படுத்த முயன்றாலும், நல்ல கோட்சார பலன் வந்தும் தசையில் நற்பலன்கள் கிடைக்காமல் குழப்பத்தை தந்துவிடுகிறது .
ஆதலால் காரணங்களை அடிப்படையாக ஜோதிடத்தில் தேடிக் கண்டறிய முடியாமல் எதையாவது சொல்லி முடிக்கவேண்டி உன்னுடைய “முன்ஜென்ம கர்ம” என முடிவு சொல்லிவிடுகிறார்கள். துருவித்துருவி கேட்டால் யாராவது செய்வினை செய்து இருப்பார்கள் கிரகத்தையும் தெய்வத்தையும் கட்டிவிட்டார்கள் ஆதலால் குருவருள், திருவருள் கிடைக்காமல் போய்விட்டது என ஜோதிட பலனை தவிர்த்து மாந்திரீக உலகத்திற்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள்.
உண்மையில் லக்னாதிபதி பலம் பெறுவதை பார்க்கும் பலர் லக்னம் ஜாதகத்தில் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறது என்பதை கவனிக்க தவறிவிடுகின்றனர். லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி ஜாதகத்தில் எந்த நிலையில் பலம் பெற்றுள்ளது. லக்னாதிபதிக்கு நட்பாக உள்ளதா, ஜாதகத்தில் எந்த ஆதிபத்தியம் பெற்று உள்ளது என நுணுக்கமாக பார்த்த பின்பே ஜாதகரின் பலம் பலவீனத்தை கணக்கிட்டு பலன் சொல்ல வேண்டும்
லக்னாதிபதிக்கு பகை பெற்ற நட்சத்திரத்தில் லக்னம் நின்றால் லக்னாதிபதி பலம் பெற்றாலும் முழு நன்மை ,மேன்மை கிடைக்காமல் போய் விடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆதலால் லக்னம் எந்த நட்சத்திரத்தில் நிற்கிறது என்பதை அறிந்து பலத்தை தெரிந்து கொள்வதே துல்லியமான பலனைப் பெற வழிவகுக்கும்.
லக்ன புள்ளி சனி சாரம்(பூசம்-4ம் பாதம்)பெற்று லக்னாதிபதி சுய சாரம் (ஹஸ்தம்-4ம் பாதம்)பெற்று 3ம் இடத்தில் செவ்வாய் சாரம் பெற்ற குருவுடன் அமர்ந்து தனசுவில்லுள்ள சனி கேதுவின் சாரம் பெற்று தனது 10ம் பார்வையாக கன்னியை பார்த்தால் பலன் பாதமாக இருக்குமல்லவா. வவிளக்கம் வேண்டும்.
லக்ன புள்ளி சனி சாரம் (பூசம் 4ம் பாதம்)பெற்று லக்னாதிபதி சுய சாரம் (ஹஸ்தம்-4ம் பாதம்)பெற்று 3ம் இடத்தில் செவ்வாய் சாரம் பெற்ற குருவுடன் அமர்ந்து தனுசிலுள்ள சனி கேது சாரம் பெற்று தனது 10ம் பார்வையால் கன்னியைப் பார்த்தால் பலன் எவ்வாறு இருக்கும்.