லக்னாதிபதி 12பாவங்களில் நின்ற பலன்கள்-தொடர்ச்சி
லக்னாதிபதி ஏழாம் இடத்தில்இருந்தால்
- லக்னாதிபதி 7-ல் நிற்க ஜாதகரால் வாழ்க்கை துணைக்கு அதிர்ஷ்டம், ஆதாயம் உண்டு
- நண்பர்கள் புடைசூழ வாழக் கூடியவர்
- சொந்தங்களை விட நண்பர்கள், துணைவரால் நன்மை அடைவார்
- திடீர் புகழ் ,பணம் பெறுவார்
- மக்களால் விரும்பப்படும் தலைவராவார் ,கலாரசிகர்
- செய்ய நினைப்பதை சரியாக செய்யக்கூடியவர்
- தன் சந்தோஷத்தை மட்டுமே பூர்த்தி செய்ய விரும்பும் சுயநலவாதி
- யாரைப்பற்றியும் கவலைப்படாமல் நினைத்ததை முடிப்பார்
- தன் மனதிற்கு சரியான பட்டதை துணிந்து செய்வார்
- யாரை எப்படி எந்த நேரத்தில் வேலை வாங்க வேண்டும் என அறிந்து தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் மிக்கவர்
- இவர் உதவி கேட்டால் பிறர் தட்டாமல் செய்து கொடுப்பர் ,முகராசிகாரர்
- துணைவர் அமைவதை பொறுத்து வாழ்க்கை மாறும், காரியவாதி
- பாவ கிரக பார்வை சேர்க்கை பார்வை இருந்தால் சுயநலத்தை காட்டிக்கொடுத்துவிடும்
- நெருங்கியவர் விலகி விடுவார், தானே தன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்வார்
- துரோகம் செய்யும் எண்ணத்தால் நல்லவர்களைப் பகைத்துக் விலக்கி வைக்கப்படுவார்
- மனம் நொந்து வாழ நேரும்
- சுயநலத்தால் வாழ்க்கையை இழப்பார் 6 ,8, 12ஆம் அதிபதிகள் தசையில் நோயால் கடனால், எதிரிகளால் விரையம் ஏற்படும்
- ஆயுள் பங்கம் உண்டு ,சனி பார்வை பக்கவாத நோய் தரும்
லக்னாதிபதி எட்டில் நின்றால்!
- லக்கினாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் இருந்தால் உடல் ரீதியான பாதிப்பு, உடல் பலவீனம் கொண்டவர்
- ஆயுள் பலம் இருந்தாலும், நல்ல எண்ணம், நல்ல புத்தி இல்லாதவர்
- இல்லாத ஒன்றை இருப்பதாக தேட கூடியவர்
- ஏமாந்தவர் கிடைத்தால் அவரை வைத்து காலம் தள்ளுவார்
- அவமானம் அடிக்கடி நிகழும்
- பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் அனைத்தையும் தன் தவறான நடவடிக்கையால் இழந்துவிடுவார்
- பலம் பெற்ற சுபகிரக பார்வை சேர்க்கை இருந்தால் ஓரளவு நேர்மையும் நன்மையும் பெறுவார்
- பூர்வ புண்ணியம் 5ஆம் இடம் சிறப்பாக அமைந்தால் சொற்ப லாபம்பெறுவார்
- யாரும் கனிகாதவற்றை கணிக்கும் ஆற்றல் வித்தியாசமான- நுணுக்கமான கலை ஆய்வு கொண்டவர்
- விபரீத ராஜ யோகம் இருந்தால் அமானுஷ்ய சக்தி பெற்றவராக இருப்பார்
- பாவ கிரக பலம் பெற்று சம்பந்தம் பெற்றால் குறைந்த ஆயுள் காலம் வாழ்ந்து, கொலை, கொள்ளைகளில் துணிந்து இறங்க கூடிய கொடூரமான வராக இருப்பார்
- புத்திர தோஷத்தால் மனம் வெறுப்பார், நினைத்த வாழ்க்கை வாழாமல் போவார் ,அரசாங்க தண்டனை கிட்டும் ,குடும்பம் நடத்த சிரமப்படுபவராக வாழ நேரிடும்.
லக்னாதிபதி ஒன்பதில் நின்றால்!
- ஒன்பதாம் வீட்டில் லக்கினாதிபதி நின்றால் தந்தைக்கு பிடித்தவர் ஆகவும் தந்தையால் யோகம் பெற கூடியவராகவும் இருப்பார்
- பெரியவர்களிடத்தில் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்
- நேர்மை நியாயத்தில் நம்பிக்கை கொண்டு அதன்படி நடக்கக் கூடியவர் பாராட்டுப் பெற கூடியவர்
- தர்மம் செய்வதில் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கும் ,இல்லாத ,இயலாதவர்களுக்கும் தரவே எண்ணுவார்
- தெய்வ நம்பிக்கை கொண்டவர்
- லக்னாதிபதி சுப பலம் பெற்றால் வள்ளலாக இருப்பார்
- சகல ஞானமும் கிடைக்கும்
- லக்னாதிபதியை பாவ கிரக பார்வை சேர்க்கை பெற்றால் கஞ்சன், எதற்கெடுத்தாலும் குறை கூறுவார்
- பிறரை குழப்பி விட்டு தன் வாழ்க்கையை கவனமாக வைத்துக் கொள்வார்
- கெடுக்கும் எண்ணத்தை வெளிக்காட்டாமல் கெடுப்பார்
- நம்பியவரை நட்டாற்றில் விடுவார்
- தன்னைச் சூழ்ந்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை விரும்ப மாட்டார்
- முதுகில் குத்துபவர்கள்
- இவருடன் நெருங்கிப் பழகியவர்களும் விலகுவார்கள்
- குடும்பத்துக்குள்ளேயே தானே முதன்மையாய் வாழ வேண்டுமென நினைப்பவர்
லக்னாதிபதி பத்தில் நின்றால்!
- லக்னாதிபதி பத்தில் நிற்க தன்னுடைய உழைப்பால் உயர்ந்த நிலைக்கு வருவார்
- நல்ல தலைவனாக மக்களால் போற்றப் படுவார்
- எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் தன்னுடைய தனித்திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக செய்யக்கூடியவர்
- குடும்ப பொறுப்பு மிக்கவர் அனைவரையும் அனுசரித்துப் போகக் கூடியவர்
- தெய்வத்தை முறையாக வழிபடக்கூடியவர்
- யாரையும் நம்பி வாழாத சுயம்புவாக இருப்பார்
- பலருக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுவார்
- அன்பு, கருணை, இரக்கத்தால் புண்ணிய காரியங்கள் செய்வார்
- கல்வி ,ஆன்மீக காரியங்களுக்கு உதவக்கூடியவர்
- இடைவிடாமல் உழைத்து நினைத்ததை முடிப்பவர்
- உழைப்பிற்கேற்ற பலன் கிடைத்து வீடு, வாகனம், நிலபுலன் கிடைத்து நிம்மதியான மனநிறைவான வாழ்க்கையை அடைவார்
- தொழிலில் பக்தி, தொழில் வெற்றி மிக்கவர்
- பாவ கிரக பார்வை இணைவு பெற்றால் சோம்பேறியாக மாற்றி செய்தொழிலில் பாதிப்பைத் தரும்
- நடுத்தரமான வாழ்க்கையும், சுமாரான வருமானமும் கிடைக்கும்
- மனதிருப்தி கொண்டவர்
- பலம் பெற்ற பாவ கிரக பாதிப்பு இருந்தால் சட்டத்திற்கு புறம்பான தொழில், வெளிநாட்டு மத தொடர்புடைய தொழில் செய்வார்
- எப்படியும் வாழலாம் என்னும் எண்ணம் இருக்கும்
- எதிலும் முழு ஈடுபாடு காட்டுவார்
லக்னாதிபதி பதினொன்றில் நின்றால்!
- லாபஸ்தானத்தில் லக்னாதிபதி இருந்தால் அதிர்ஷ்டம் மிக்கவர்
- வாழ்க்கையில் நினைத்தது நடக்கும்
- எல்லா விஷயங்களிலும் நன்மை தானாக தேடி வரும்
- கெட்டது தானாக விலகி விடும், நல்ல மதிப்பு மரியாதை கிடைக்கும்
- மக்கள் வசியம் மிக்கவர் ,நல்ல பழக்க வழக்கத்தால் பெரியவர்களின் அன்புக்குரியவராகவும் ஆசி பெற்றவராகவும் திகழ்வார்
- தீய பழக்க வழக்கத்தை பற்றி தெரிந்து கொள்வதை விட மூத்தவர் சொன்னாலே புரிந்துகொண்டு தவறு செய்யமாட்டார்
- ஜாதகரின் மூத்த சகோதரருக்கு உதவி கரமாகவும் யோகத்தை தரும் உடன்பிறப்பாகவும் உறுதுணையாகவும் இருப்பார்
- மூத்த சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் புகழும் ,லாபமும் கிடைக்கும்
- ஏமாற்றாத எண்ணத்தால் உயர்நிலை பெறுவார்
- பெண்களால் விரும்பப்படுவார் சிலருக்கு இளைய தாரத்தால் நன்மை கிடைக்கும்
- இளையதாரத்தின் மீது பற்றும் பாசமும் கொண்டவராக இருப்பார்
- இவரால் இளைய தாரம் பயனடைவர்
- பாவ கிரக பார்வை பெற்றால் பெண்களால் அவமானத்தையும், வீண் பழியையும் சுமக்க நேரும் ,
- பிறருக்காக பொறுப்பேற்று நஷ்டம் அடைவார்
- மூத்த சகோதரர்களால் ஏமாற்றப்படுவார்
- கூட்டுத்தொழில் நஷ்டத்தைத் தரும்
- கவனமின்றி இருந்தால் மாரகத்தை தந்துவிடும்
- அதிர்ஷ்டமே துருதஷ்டமாக மாறிவிடும்
லக்னாதிபதி பன்னிரெண்டில் நின்றால்!
- விரய ஸ்தானத்தில் லக்கினாதிபதி நின்றால் உழைப்பிற்கேற்ற ஊதியமும், தகுதிக்கேற்ற பதவியோ, திறமைக்கேற்ற முன்னேற்றமோ, ஆசைகேற்ற வளர்ச்சியும் இன்றி அவதிப்படுவார்
- கிடைத்ததை சேமிக்க தெரியாதவர் ஆகவும் பேராசை ஆடம்பர வீண் செலவுகள் செய்யக் கூடியவராகவும் இருப்பார்
- சொந்த ஊரை விட்டு வெளியூர் வாசம் சிறப்பு தரும்
- சொத்துக்கள் வைத்துக்கொண்டால் விரையம் ஏற்படும் என்பதால் வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் பெயரில் வைக்க வேண்டும்
- பாவ கிரகங்கள் பலமும் தீய தசையும் நடந்தால் தகுதிக்கேற்ற வேலை செய்யமாட்டார்கள்
- கீழான தொழில் ,சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையில் ஈடுபடுவார்
- முயற்சி என்ற பெயரில் காலவிரயம் செய்வார்
- அவசர புத்தி என்பதால் எடுத்தோம் கவிழ்த்தோம் என சிந்திப்பார்
- எடுத்த வேலையை முடிக்காமல் திணறுவார்
- விலக முடியாத விஷயங்களில் மாட்டிக்கொண்டு தடுமாறுவார்
- சொத்துக்களை வீண் விவகாரங்களில் முடங்கி அவதிப்படுவார்
- லக்னாதிபதி விரயத்தில் இருந்தால் வாழ்நாளில் அடிக்கடி அதிக விரயத்தை சந்திக்க நேரும்
லக்னாதிபதி பலம்
லக்னாதிபதி ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம், வர்க்கோத்தமம், லக்னாதிபதி தன் வீட்டைப் பார்த்தல் ,நட்பு கிரக சாரம் பெறுதல், கேந்திர திரிகோணாதிபதி சாரம் பெறுதல் , லக்னாதிபதி நின்ற அதிபதியின் பலம் என பல்வேறு நிலைகளை கணக்கிட வேண்டும். மேலும் லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி நல்ல நிலையில் பலம் பெற்றால் ஜாதகர் சிறப்பான வாழ்க்கையை பெற முடியும்.