செப்டம்பர் மாத ராசி பலன்கள் -2024(மேஷம் முதல் மீனம் வரை)

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

செப்டம்பர் மாத ராசி பலன்கள்

செப்டம்பர் மாத ராசி பலன்கள் – 2024

மேஷம்

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய அமைப்பு, சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகம் ஏற்படும்.

செப்டம்பர் மாத ராசி பலன்கள்

சிறப்பான பணவரவுகளால் உங்கள் வாழ்க்கை தரம் உயரும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் நல்ல நிர்வாகத்திறனுடன் கௌரவமாகப் பணியாற்றமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும் வெளிதொடர்புகள் மூலம் நல்ல வாய்ப்புகள் கிட்டும்.

பரிகாரம் : துர்க்கை அம்மனை வழிபடவும்.

ரிஷபம்

ஜென்ம ராசியில் குரு, 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப்போகும்.வெளிதொடர்புகள் மூலம் அனுகூலம் உண்டாகும்.

பணவரவுகள் தக்க நேரத்தில் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் :விநாயகரையும் பைரவரையும் வழிபடவும்.

மிதுனம்

உங்கள் ராசிக்கு 4, 5-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் வீண்செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி மற்றும் ஊதிய உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும்.

செப்டம்பர் மாத ராசி பலன்கள்

பரிகாரம் : விநாயகரையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.

கடகம்

உங்கள் ராசிக்கு குரு 11-ல், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும்.

உடல்நிலை ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்ற மானநிலை இருக்கும். பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிட்டும் உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படமுடியும்.

செப்டம்பர் மாத ராசி பலன்கள்

பரிகாரம் : முருகரையும், மகாவிஷ்ணுவையும் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சிம்மம்

ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை குறைத்துகொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. 2-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எளிதில் எதிர்கொண்டு வெற்றியையும் லாபத்தினையும் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிக்காது.

அசையும்- அசையா சொத்துகள்வழியில் சுப செலவுகள் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் சற்று கவனம்தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் இருந்தாலும் நல்லவாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை பெறுவார்கள்.

செப்டம்பர் மாத ராசி பலன்கள்

பரிகாரம் : துர்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.

கன்னி

குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், செவ்வாய் 10-ல் இருப்பதாலும் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ராகு 7ல் இருப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.

மாத முற்பாதியில் சூரியன் 12-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்லவும். ஆரோக்கியரீதியாக தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும், சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர் தொடர்புகள் மூலம் ஒரு நல்ல செய்தி கிடைக்கும்.

செப்டம்பர் மாத ராசி பலன்கள்

பரிகாரம் : சிவ வழிபாடு செய்வது நல்லது.

துலாம்

உங்கள் ராசிக்கு 10,11-ல் புதன், மாத முற்பாதியில் லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை பெற்று இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். குரு 8-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது.

தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும், எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவீர்கள். வேலை நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

செப்டம்பர் மாத ராசி பலன்கள்

பரிகாரம் : தட்சிணாமூரத்திக்கு தீபம் ஏற்றுவது நல்லது.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு 7-ல் குரு, 11-ல் சுக்கிரன், கேது. 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீண்ட நாட்களாக உள்ள தடங்கல்கள் எல்லாம் விலகி ஒரு வளமான பலன்களை பெறுவீர்கள். தாராள் தனவரவுகள் உண்டாகும். சிலருக்கு பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒருமுடிவுக்கு வரும்.

கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும், தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

செப்டம்பர் மாத ராசி பலன்கள்

பரிகாரம் :அஷ்ட லட்சுமி வழிபாடு செய்வது நல்லது.

தனுசு

உங்கள் ராசிக்கு 9, 10-ல் சூரியன், 10, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நெருங்கியவரின் உதவியால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமானநிலை இருந்தாலும், செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குரு 6-ல் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது நல்லது.

தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி, பொறாமைகளை சமாளித்து முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். வெளியூர்மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வெளிநபர்களிடம் முக்கிய விஷயங்களை பேசாமல் இருப்பது நல்லது.

செப்டம்பர் மாத ராசி பலன்கள்

பரிகாரம் : தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

மகரம்

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 5-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். மாத முற்பாதியில் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. தொழில் வியாபாரரீதியாக உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். சனி 2-ல் இருப்பதால் கணவன் மனைவியிடையே விட்டுகொடுத்து செல்வது நல்லது.

கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

செப்டம்பர் மாத ராசி பலன்கள்

பரிகாரம் : அஷ்டலட்சுமி வழிபாடு, சனிபகவானுக்கு விரதம் இருப்பது உத்தமம்.

கும்பம்

ஜென்ம ராசியில் சனி, 2-ல் ராகு. 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முடிந்தவரை பேச்சில் பொறுமையை கடைப்பிடிப்பது, மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமைகளல் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும்.

செப்டம்பர் மாத ராசி பலன்கள்

பரிகாரம் : சிவனையும், விநாயகரையும் வழிபடவும்.

மீனம்

ஜென்ம ராசியில் ராகு 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால், தேவையற்ற அலைச்சல், நிம்மதிக்குறைவு ஏற்படும் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். முன்கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது.

நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ,ஒருசில் அனுக்கூல பயன்களை அடையமுடியும். கொடுக்கல் வாங்களில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு வாபம்கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேளைப்பளு அதிகரிக்கும்.

செப்டம்பர் மாத ராசி பலன்கள்

பரிகாரம் : முருக வழிபாடு செய்வது நல்லது.

Related Post

Leave a Comment

error: Content is protected !!