Homeஅடிப்படை ஜோதிடம்மாந்தி : பிற கிரகங்களுடன் மாந்தி சேர்க்கை ஏற்படும் போது கிடைக்கும் பலன்கள் !

மாந்தி : பிற கிரகங்களுடன் மாந்தி சேர்க்கை ஏற்படும் போது கிடைக்கும் பலன்கள் !

மாந்தி

சூரியன்+மாந்தி:

  • தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர்களால் ஏற்பட்ட சாபத்தை உணர்த்தும்.
  • பூர்வீக சொத்தை அனுபவிக்க முடியாது
  •  தனது குலத்தாரிடமே பகை, கருத்து வேறுபாடு ஏற்படும். 
  • வலது கண் பாதிப்பு இருக்கும்.
  • பிதுர்காரகனாகிய சூரியனுடன் லக்னத்திற்கு 3 மற்றும் 9ம் பாவத்தில் அமர தந்தைக்கு பெரும் கண்டத்தை தருகிறது.

பரிகாரம்:

திலஹோமம் செய்வது நல்ல பலன்தரும்.

சந்திரன்+மாந்தி:

  • தாய் மற்றும் தாய்வழி முன்னோர்கள் இடையே ஏற்பட்ட சாபத்தை உணர்த்தும்.
  • தாய்வழி உறவுகள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும்.
  • மனபயம் மிகுதியாக இருக்கும். 
  • இடது கண் பாதிப்பு இருக்கும். 
  • சந்திரனும் மாந்தியும் இணைந்து லக்னத்திற்கு 4 மற்றும் 10-ஆம் இடங்களில் அமரும்பொழுது ஜாதகரின் தாய்க்கு கஷ்டத்தை தருகின்றன. அவசொல், சுகமின்மை, நிம்மதியின்மை போன்ற அசுப பலன்களையும் கண்டத்தையும் தரும்.

பரிகாரம்: 

அமாவாசை வழிபாடு நல்ல பலன் தரும்

மாந்தி

செவ்வாய்+மாந்தி:

  • உடன் பிறந்தவர்கள் இடையே விரோதம் இருக்கும். 
  • தீராத ரத்த சம்பந்த நோய் தாக்கம்  இருக்கும். 
  • சொத்துக்களால் விருத்தி இருக்காது.
  • வாஸ்து  குற்றமுள்ள வீடு மனை அமையும்.

பரிகாரம்: 

சஷ்டி திதியில் முருகன் வழிபாடு நல்ல பலன் தரும்

புதன்+மாந்தி:

  • தாய்மாமன் ஆதரவு கிடைக்காது. 
  • கன்னிப் பெண் சாபம் இருக்கும்.
  • கல்வியில் தடை ஏற்படும்.
  • புரிந்துகொள்ளும் தன்மை இருக்காது.
  • நம்பிக்கை மோசடியை சந்திக்க நேரும்

பரிகாரம்:

புதன்கிழமை சக்கரத்தாழ்வார் வழிபாடு மாற்றத்தையும் ஏற்றத்தையும் மிகுதிப்படுத்தும்.

குரு+மாந்தி:

  • கருச்சிதைவு ஏற்படும். 
  • கருத்தரிக்கும் தன்மை குறைவாக இருக்கும். 
  • குழந்தைகளுக்கு கண்டம், தோஷம் இருக்கும் 
  • குழந்தைகளால் நிம்மதி குறைவு ஏற்படும்.
  • மனதுக்குப் பிடித்த குழந்தைகள் பிறக்காது. 
  • மனதிற்குப் பிடித்த குழந்தைகள் பிறந்தாலும் மனதிற்கு பிடிக்காத வாழ்க்கையை குழந்தைகள் தேர்ந்தெடுப்பார்கள்.
  • குரு சாபம் தேடி வரும்
  • பண இழப்பு மிகுதியாக இருக்கும்

பரிகாரம்: 

வியாழக்கிழமைகளில் சித்தர் ஜீவசமாதிகளை வழி பட்டால் நற்பலனை அதிகரிக்க முடியும்.

சுக்கிரன்+மாந்தி: 

  • பெண் சாபத்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும். 
  • மனைவியால் கடும் சாபம், கண்டம் ஏற்படும். 
  • ஆடம்பரப் பொருட்கள் எளிதில் கிட்டாது அல்லது விரைவில் பழுதாகிவிடும்.

பரிகாரம்: 

வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்களின் நல்லாசி,பெண் சாபத்திலிருந்து விடுதலை பெற்றுத் தரும்.

மாந்தி

சனி+மாந்தி: 

  • குல தெய்வ குற்றம், சாபத்தை காட்டும்.
  • நிலையான வேலை ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். 
  • தகுதிக்கு தகுந்த வேலை கிடைக்காது
  • அல்லது உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்காது. 
  • உறவுகள் இடையே பிரிவை தரும் பூர்வீகம் தொடர்பான சர்ச்சை,மன பயம் இருந்து கொண்டே இருக்கும். 

பரிகாரம்: 

கால் ஊனமுற்ற முதியோர்களுக்கு செயற்கை உடல் உறுப்பு வாங்க நிதி உதவி செய்ய வேண்டும்.

ராகு+மாந்தி: 

  • விஷ பயம் ஏற்படும். 
  • மானத்தை காக்க போராட நேரும் 

பரிகாரம்: 

சனிக்கிழமைகளில் துர்க்கை, காளி வழிபாடு பயத்தை நீக்கும்

கேது+மாந்தி: 

  • விஷ பயம் இருக்கும் 
  • பிரிவினைகள், வழக்குகள், தண்டனை கிடைக்கும். 

பரிகாரம்: 

ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலனை அதிகரிக்கும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!