குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026- கும்பம்
குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்
சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.
ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.
கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
கும்ப ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 4மிடத்தில் அமர்ந்த குருபகவான் உங்களுக்கு வீண் அலைச்சல், வீண்பழி, தாய்க்குப் பீடை தன்னு அசௌகரியம், வீடு, நிலம் போன்றவற்றால் பிரச்சனைகள் அடகு வைத்த விற்பனை செய்தல், சிறுவாகன விபத்து அல்லது வாகனத்தில் செலவுகள், கால்நடைகள் சேதம், செய்வினை, சூழ்ச்சியில் மாட்டிக் கொள்ளுதல், சுபகாரியத்தடங்கல் லடைகள் சந்தித்தீர்கள்.
அதுமட்டுமல்லாமல். சனிபகான் ஏழரை சனியாக மிகவும் கஷ்டப்படுத்தி வந்தார். இதற்கெல்லாம் பரிகாரமாக, உங்களது நோய் தீர்க்கும் மருந்தாக குருபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடமாகிய மிதுன ராசிக்கு செல்லப் போகின்றார்.
குரு பார்வை

மேலும் உங்கள் ராசியையே பார்வையிடப் போவதால், குரு பார்க்க கோடி நன்மை என்பது போல, உங்களது ஏழரைச் சனியின் பாதிப்பும் நீங்கப் போகின்றது. உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமாகிய ஒன்பதாமிடத்தையும், லாபஸ்தானமாகிய 11மிடத்தையும், உங்கள் ராசியையும் குரு பகவான் பார்வையிடப் போகின்றார். உங்கள் வாழ்வில் இந்த குருப்பெயர்ச்சியானது வசந்தத்தை ஏற்படுத்தப் போகின்றது.
குருபகவான் உங்களுக்கு நிறைய நன்மைகளை அள்ளித் தரப்போகின்றார். பற்பல வசதிகள் ஏற்படும். எதிர்பாராத பல நல்ல விஷயங்கள் நடைபெறத் துவங்கும். பழைய தொழில் அபிவிருத்தியாகும். அதற்குண்டான பண உதவி, ஒத்தாசை முதலியவை கிடைக்கும். லோன் கிடைக்கும். ஒரு சிலர் புதிய தொழிலை ஆரம்பிப்பீர்கள். நீண்ட நாட்களாக வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். உத்யோகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். பதவி, உயர்வு, சம்பள உயர்வு, விரும்பிய இடமாற்றல் உத்தரவு கிடைக்கப் பெறுவீர்கள். சனிப்பெயர்ச்சிக்கு பிறகு, நன்மைகள் அதிகம் ஏற்படும். குருபகவான் ராஜயோகம் பெற்று மிகுந்த யோகங்களை தருவார். மனைவி, பிள்ளைகள் வழியில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.
தொழிலில் லாபத்தை இப்போது தான் கண்ணால் பார்ப்பீர்கள். நீண்ட நாட்களாகத் தள்ளிப் போயிருந்த திருமணம், சடங்கு போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புத்திரபாக்கியம் ஒரு சிலருக்கு ஏற்படும். கணவன், மனைவி பிரச்சனைகள் நீங்கும்.
உடல் உபாதைகள் நீங்கி, மனதில் மகிழ்ச்சி ஏற்படும், வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கிவிடும். கோர்ட்டு, கேஸ் பிரச்சனைகள் சாதகமாக முடியும். தெய்வ வழிபாடு, தீர்த்த யாத்திரை செல்வீர்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சியானது கும்ப ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். குரு வக்ர கதியில் கடகத்தில் இருக்கும் 72 நாட்கள் பலன்கள் சுமாராக இருக்கும்.
வியாபாரிகள் : பழைய தொழிலில் இருந்த முடக்கம் நீங்கி, தொழில் புதுப்பொலிவுடன் நடக்க ஆரம்பிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து லாபம் கணிசமாக வரும். பழைய சரக்குகள் மளமளவென்று விற்பனையாகும். தொழில் நவீன உத்திகளைப் புகுத்துவீர்கள். எதிர்பார்த்த பேங்க் லோன் போன்றவை கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய தொழில் வாய்ப்புகள் அமையும் குருபகவான் தனது 7ம் பார்வையால் உங்கள் ராசிக்கு இலாப ஸ்தானத்தைப் பார்ப்பதால் லாபம் நிறைய வரும். புதிய மிஷின், கட்டடம் வாங்குவீர்கள். பலவிதமான வசதிக உண்டாகும்.
உத்யோகஸ்தர்கள் : உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் நல்ல மதிப்பு தருவார்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்றவை கிடைத்து சந்தோஷப்படுவீர்கள். ஆபிஸில் நீங்கள் கேட்ட லோன் உடனே கிடைக்கும். தம். சகஊழியர்கள் மதிப்பு தருவார்கள். நீண்ட நாட்களாக வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும்.
பெண்கள் : கணவர் உங்கள் மீது பாசமாக நடந்து கொள்வார். நீங்கள் விரும்பியதையெல்லாம் வாங்கித் தருவார். மாமியார், நாத்தனார் உறவு திருப்திகரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் நல்ல மதிப்பை அடைவீர்கள். நீண்டநாள் வியாதி குணமாகும். புத்திரபாக்கியம் கைகூடும். நூதனமான ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம், புதுவீடு, மனை, வாகனம் வாங்கும் யோகமும், வீட்டுக்குத் தேவையான ஆடம்பரச் சாமான்கள் வாங்கும் யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள். பொன், பொருள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை.
மாணவர்கள் : நல்ல முறையில் படிப்பீர்கள். பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுப்பீர்கள். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைத்து, உயர்கல்வி அடைவீர்கள்.
கலைஞர்கள்: வெளிநாடு செல்லும் பாக்கியம் உண்டாகும். வருமானம் உயர ஆரம்பிக்கும் வாய்ப்புகள் தேடி வரும். உங்களது திறமை பளிச்சிடும். பேரும், புகழும் உண்டாகும். உங்கள் பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீச ஆரம்பித்துவிட்டது.
அரசியல்வாதிகள் : உங்களை விட திறமையானவர்களை விட உங்களுக்குக் கட்சியில் செல்வாக்கு பெருகும். பதவிகள் தேடிவரும். வருமானமும் உயரும். உங்களைச் சுற்றியே அரசியல் நடக்குமளவுக்கு பெருமை பெறுவீர்கள். எதிர்காலத்தில் மிகவும் சிறப்படைவீர்கள்.
விவசாயிகள் : கால்நடை வாகனம் விருத்தியாகும். விளைச்சல் நல்ல முறையில் இருக்கும்.அதிகமாகக் கிடைக்கும். நிலபுலன் வாங்குவீர்கள்.
பரிகாரம் : சனிக்கிழமை தோறும் சனிபகவானையும், ஸ்ரீலெஷ்மி நரசிம்மரையும் பூஜித்து வரவும். வசதியில்லாதவர்கள் வியாழன் தோறும் சிவன் கோவிலில் தக்ஷிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுங்கள். வசதியுள்ளவர்கள்,
பொன், புஷ்பராகம், கொண்டைக்கடலை, மஞ்சள் வஸ்திரம் போன்றவற்றை உத்தமமான அந்தணர்களுக்குத் தானம் செய்யுங்கள். ஒருமுறை ஆலங்குடி சென்று வாருங்கள் உத்தமம்….