ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : மீனம்
ராகு கேது பெயர்ச்சி நாள் -2025
வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
எளிமையை விரும்பும் மீனராசி அன்பர்களே! நீங்கள் நல்ல வலிமையான உடலும், எடுப்பான மூக்கும் கொண்டவர். இருமல், நரம்பு வியாதிகள் உடையவர். மனத்தளர்ச்சி அடிக்கடி ஏற்படும். நிறைய கோவில் குளங்களில் அலைந்து தெய்வத்தை வணங்குவீர்கள். பிறருடைய காரியத்தில் தலையிட மாட்டீர்கள். சுயநலவாதி, சோம்பேறித்தனம் சிறிது இருக்கும். மனைவியை அதிகம் நேசிப்பவர். ஒரு சிலர் கடல்தாண்டி வெளிநாடு செல்லும் வாய்ப்புண்டு.
இதுவரை உங்களுக்கு இராகுபகவான் உங்களது ஜென்ம ராசியிலும், கேது பகவான் உங்கள் இராசிக்கு ஏழாமிடமென்னும் களத்திர ஸ்தானத்திலும் அமர்ந்திருந்தார்கள். கேது பகவான் ஏழாமிடத்தில் அமர்ந்து சில பிரச்சனைகள் உருவாக்கினார். கணவன் – மனைவி உறவில் அடிக்கடி உரசல் ஏற்படுத்தினார். மனைவி அல்லது கணவரின் உடல்நிலையில் பாதிப்பைத் தந்தார். சிலரை குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ வைத்தார். நண்பர்கள் உங்களுக்கு எதிரிகளாக மாறினார்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. தொழிலும் சுமாராகவே நடந்தது. உத்தியோகத்திலும் சக ஊழியர்களின் ஆதரவு
இல்லாமல் இருந்தது. உங்களால் பயன் அடைந்தவர்களே, உங்களுக்கு கெடுதல் செய்தார்கள்.
இனிமேல் உங்களது பிரச்சனைகள் குறையப் போகின்றன. கேது பகவானால்உங்களது புதிய திட்டங்கள் செயல் வடிவம் பெறும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். தொழிலில் நிலவி வந்த போட்டி, பொறாமை நீங்கும், இலாபத்தை நல்ல முறையில் செலவழிப்பீர்கள் அல்லது புதியதொரு கட்டிடம், மனை, வாகனம், உபரியாக இன்னொரு தொழில் தடைபட்டிருந்த சுபகாரியம் நடைபெறும். திருமணம் வயதிலிருந்த ஆண். பெண்களுக்குத் திருமண பேச்சு, கைகூடி வரும். போட்டி எதிர்ப்புகள் இருந்தாலும் இறுதி வெற்றி உங்களுக்கே கோர்ட் கேஸ் பிரச்சனைகள் சுமூகத் தீர்வை அடையும். ஒரு சிலருக்குத் தலைவலி, கண்ணாடி போடுதல், பொடுகு, கெட்ட கனவுகள் போன்றவை அடிக்கடி ஏற்படும். சுபச்செலவுகள் அதிகம் உண்டாகும். கடன் தீரும். சிலருக்கு குழந்தைப் பாக்கியம் ஏற்படும். கடன் வாங்கி, சுபகாரியம் நடைபெறும். ஆனால் சனிப்பெயர்ச்சியும், குருப்பெயர்ச்சியும் கெடுதல் அதிகமிருப்பதால், வாகனத்தில் கவனம் மற்றும் அனைத்துக் காரியங்களிலும் கவனமாக நடந்துக் கொள்ளுங்கள்.
வியாபாரிகள்:
வியாபாரத்தில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கி, தொழில் சிறப்படையும். புதிய கூட்டாளிகள் முதலுடன் வந்து சேர்வார்கள். தொழிலில் இருந்த போட்டி, பொறாமை நீங்கி இலாபம் நிறையக் கிடைக்கும். சிலருக்கு ஆபீஸை அல்லது பேக்டரியை இடமாற்றம் செய்ய வேண்டி வரலாம். அரசாங்க தொந்தரவு ஏற்பட்டாலும் பாதிப்பு இராது. இலாபத்தை நல்ல முறையில் செலவழிப்பீர்கள். குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பாதிப்பு அதிகம் இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள் :
நீங்கள் விரும்பிய இடமாற்றம் உத்தரவு கிடைக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். ஆனால், ஆபிஸில் உங்கள் கௌரவம் உயரும். லோன் போட்டு வீடு, வாசல், நகை வாங்குவீர்கள். பழைய வாகனத்தில் அதிக செலவு ஏற்படும். அதை விற்றுவிட்டு கடன் வாங்கிப் புதிய வாகனம் வாங்குவீர்கள். சரியான நேரத்தில் சாப்பாடு, தூக்கமில்லாமல் உழைப்பீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். குரு. சனிப்பெயர்ச்சியில் கவனம் தேவை.
பெண்கள்:
கணவருடனும், குடும்பத்தாருடனும் உறவு நல்ல முறையில் அமையும். சந்தோஷமான சூழ்நிலை வீட்டில் நிலவும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். பணம் அதிகம் செலவழியும். ஆனால் குடும்பத்தாரின் மகிழ்ச்சிக்காகப் பணவிரயத்தைப் பற்றி கவலைப் பட மாட்டீர்கள். கணவர் உங்களுக்குப் பிடித்தமானதைச் செய்வார்.
நிறைய ஆடை ஆபரண யோகம் ஏற்படும். தனிக்குடித்தனம் செல்லவும் வாய்ப்பு ஏற்படும். உடலில் பெரிய நோய் இல்லாவிட்டாலும் தலைவலி போன்றவை உங்களைக் கஷ்டப்படுத்தும். குரு, சனிப்பெயர்ச்சியில் பாதிப்பு நிறைய உண்டு. எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்ளவும். மாணவர்கள்:
கல்வியில் ஊக்கம் ஏற்படும். ஆசிரியர்களிடம் நல்லபெயர் எடுப்பீர்கள். ஒரு சிலர் ஹாஸ்பிடலில் தங்கிப் படிக்க வாய்ப்பு உண்டாகும். நல்ல முறையில் படித்துப் பாஸ் ஆவீர்கள். சில நேரங்களில் மறதியும், உடல் சோர்வும் உங்களை ஆட்கொள்ளும். சிலருக்கு Campus Interview மூலம் வேலை கிடைக்கும். குரு. சனிப்பெயர்ச்சியினால், கல்வி தடங்கலாக வாய்ப்புண்டு, கவனம் தேவை.
கலைஞர்கள்:
நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்கும். நிறையப் பணமும் கிடைக்கும். கிடைத்தப் பணத்தை தவறான வழியில் செலவழிப்பீர்கள். வெளியூர் வாய்ப்புகள் நிறைய ஏற்படும். சில தவறுகளைத் திருத்திக் கொண்டால் மிக நல்ல காலமாக அமையும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும்யோகம் கிடைக்கும். பேரும், புகழும் உண்டாகும். குரு, சனிப்பெயர்ச்சியானல் பாதிப்பு, நிறைய உண்டாகும், கவனம் தேவை.
அரசியல்வாதிகள்:
ஓரளவுக்கு உங்களுக்கு நல்ல காலம் தான். பட்டம், பதவி தேடி வரும். ஆனால் விரும்பிய படி உங்கள் மனம் போனப்படி செயலாற்ற முடியாமல், முட்டுக்கட்டைகளும் நீடிக்கும். அதிக உழைப்பு காலந்தவறிய சாப்பாடு, தூக்கம் இவை ஏற்படும். சொந்தப் பணத்தை அதிகமாகச் செலவழிப்பீர்கள். குரு. சனிப்பெயர்ச்சியினால், வீண் அலைச்சல், பதவியிழப்பு நேரிடலாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
விவசாயிகள்:
ஓரளவு பிரச்சனைகள் தீரும். வருமானம் அதிகரிக்கும். விளைச்சல் பெருகும். கால்நடை, வாகனம் செழிக்கும் ஒரு சில விரயங்களும் ஏற்படத் தான் செய்யும். குரு. சனிப்பெயர்ச்சி, உங்களைக் கடன் படவைக்கும் கவனம் தேவை.
பரிகாரம்:
கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் என்னும் ஊருக்குச் சென்று, இராகு பகவானுக்குப் பால் அபிஷேகம் செய்ய உத்தமம்.
ஞாயிறு தோறும் மாலையில் இராகு காலத்தில் அருகிலுள்ள அம்பாள் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட நல்லது. குருப்பெயர்ச்சியின் போது குருபகவானுக்கும், சனிப்பெயர்ச்சியின் போது. சனிபகவானுக்கும் ப்ரீதி செய்ய உத்தமம்.