மாவூற்று வேலப்பர் கோவில்
இயற்கை எழில் கொண்ட அழகான பசுமையான இடத்தில் சுயம்புமூர்த்தியாக வீற்றிருக்கும் முருகப் பெருமான் கோவிலில் ஒரு ஆச்சரியமான தகவல் உள்ளது.அந்த கோவில் தேனி மாவட்டம்(Theni Murugan Temple) தெப்பம்பட்டி யில் இருக்கும் அருள்மிகு “மாவூற்று வேலப்பர் கோவில்“. இந்த இறைவன் வேலப்பர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் இக்கோவிலில் 500 ஆண்டு பழமையானதாகும்.
வற்றாத நீரூற்று:
இந்த ஆலயம் மலைகள் நிறைந்த பகுதியில் காணப்படுகிறது தற்போது வேலப்பர் குடிகொண்டிருக்கும் பகுதி முழுமையும் ஆதியில் மருதம் மற்றும் மாமரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது.இக்கோவிலின் தல விருச்சமாக மாமரம் இருக்கிறது. கோவிலுக்கு தெற்கே உள்ள இந்த மாமரத்தின் அடியில் வற்றாத நீரூற்று எப்போதும் பொங்கி வழிந்த படி இருக்கிறது.
“இத்தலவிநாயகர் மாவூற்று விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார் “
மாமரத்தின் அடியிலிருந்து வரும் ஊற்று காரணமாகவே இந்த இறைவன் மாவூற்று வேலப்பர் என்றும் இந்த தீர்த்தம் ‘மாவூற்று தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த தீர்த்ததில் நீராடி இறைவனை வேண்டினால் தீராத நோய்களும் ,மன குறைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை…