அதிசய லிங்கம்
தஞ்சை மவட்டத்திலுள்ள சிவன் கோவிலில் காணப்படும் அதிசயம் என்ன?அப்படி என்ன ஆச்சர்யம் இருக்கிறது? இந்த கோவிலில்!!!
அருள்மிகு திருநீலகுடியில் உள்ள நீலகண்டேஷ்வரர் கோவில் இறைவன் மனோக்கியாநாதர் என்று அழைக்க பாடுகிறார்..பொதுவாக இறைவனுக்கு பால்,நீர், தயிர், இளநீர், சந்தனம் ,விபூதி, மஞ்சள் பொடி என பலவற்றை கொண்டு அபிஷேகம் செய்யபடும் ..இத்தல மூலவருக்கு எண்ணெயால் அபிஷேகம் செய்யும்போது .பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெயை லிங்கத்தின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்..
எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும்,அத்தனையும் சிவலிங்கத்திருக்கு உள்ளேயே உறிஞ்ச பட்டு விடுவது அதிசயமாக உள்ளது …இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிஷேகம் செய்த அடுத்த நாள் லிங்கத்தின் திருமேனியை பார்த்தால் ,கிட்டத்தட்ட ஒரு வருடமாக என்னையே தடவாவது போல் உலர்ந்து காணப்படும் …
அவ்வளவு என்னையும் எங்கு மயமாகிறது ? என இன்னும் தெரியவில்லை.ஈசன் தொண்டையில் இருக்கும் விஷ தன்மையை குறைக்கவே இந்த அபிஷேகம் செய்ய படுகிறது இத்தலத்தின் உள்ளே ஒரு பாலா மரம் உள்ளது .அதை முழு பழமாக எடுத்து செல்ல கூடாதாம் .இறைவனுக்கு படைத்த பிறகே எடுத்து செல்ல வேண்டும். இல்லையெனில் இறைவன் தண்டித்துவிடுவாராம்..
இத்தலத்தின் தல விருட்சம் வில்வமரம் ஆகும்.இந்த மரம் பஞ்ச வில்வமரம் என அழைக்க படுகிறது.ஒரே காம்பில் 5 இலைகள் இருப்பது அதிசயமாகும் …