Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம்:பகுதி70 (அஸ்வினி நட்சத்திரம்)

அடிப்படை ஜோதிடம்:பகுதி70 (அஸ்வினி நட்சத்திரம்)

அடிப்படை ஜோதிடம் :பகுதி70

அஸ்வினி 2ம் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்

அஸ்வினி 2-ம் பாதத்தில் சூரியன் நின்றால்

அஸ்வினி 2ம் பாதத்தில் சூரியன் இருப்பது அவ்வளவு நல்லதல்ல,ஆயுள் கூட குறைவாக இருக்கலாம்( எட்டாமிடம் ,சனி இவற்றையும் பொருத்தது).8 வயது வரை பாலாரிஷ்டம் உண்டு.வறுமை மேலிடலாம், சந்திரனுடன் இணைந்தால் அதிக கெட்ட பலனாகும். சூரியனையும் அல்லது சந்திரனையும் செவ்வாய் பார்த்தால் மட்டுமே சுப பலன் உண்டு.

அஸ்வினி 2-ம் பாதத்தில் சந்திரன் நின்றால்

அதிக காரம் கொண்ட உணவை விரும்புபவன்,மது பிரியன்.பெண்களால் சிக்கல்கள் ஏற்படலாம்.வறுமை மிகும்.சுயநலவாதி.அதிக பேராசை உண்டு

செவ்வாய், ராகு இந்த சந்திரனை ஏழாம் பார்வையாக பார்த்தால், இந்த இரண்டாம் பாதம் பெண்ணுக்கு வைதவ்யம் ஏற்படலாம்

இந்த இரண்டாம் பாத சந்திரனை சுக்கிரன் பார்த்தால் பாக்கியம் உண்டு. இவனுக்கு நல்ல ஆண் குழந்தையும் ,நல்ல மண வாழ்க்கையும் உண்டு

இதே 2ம் பாதம் சந்திரனை சனி பார்த்தால் இவன் பொறுமைகாரனாகவும் , சோக வாழ்க்கை உள்ளவனும் ஆவான்.

அஸ்வினி 2-ம் பாதத்தில் செவ்வாய் நின்றால்

இப்பாதத்தில் செவ்வாய் நின்று அதை சூரியன் பார்த்தால் பெரும் கல்விமான் ஆவான்.பெற்றோர்களை மிகவும் விரும்புவான்.சில சமயம் இவன் வறுமை அடைவான்.குழந்தை அற்றவனாகவும் இருக்கலாம்.

பழிவாங்கும் குணம் உள்ளவன்.நெருப்பு விபத்துக்கள் ஏற்படலாம், மற்றவகை விபத்துக்கள், காய்ச்சல் முதலியவை ஏற்படும்.தலையில் வடு உள்ளவன்.

அடிப்படை ஜோதிடம்

அஸ்வினி 2-ம் பாதத்தில் புதன் நின்றால்

குழந்தைகளால் பாக்கியம் சுகமுண்டு.பல கலைகளிலும் வல்லவனாவான்.பாதி வயதுக்குமேல் துறவியாகலாம்.இந்த புதனை சூரியன் பார்த்தால் புகழ்பெற்ற மருத்துவர் ஆவான்.சிந்தனையும் உயர்பண்பு உள்ளவனாகவும் இருப்பான்

அஸ்வினி 2-ம் பாதத்தில் குரு நின்றால்

கவர்ச்சியான தோற்றம், குணம் கொண்டவன். புத்திசாலி, நேர்மையானவன், எழுத்தாளர்,ஆசிரியருமாவான்.

பிறர் இவனிடம் அன்பு மதிப்பு மரியாதை கொள்வார்கள், ஆனால் எப்பொழுதும் கடனாளியாக இருப்பான்.

அஸ்வினி 2-ம் பாதத்தில் சுக்கிரன் நின்றால்

நல்ல வலுவான உடல் கட்டும், பருமனான உடல் அழகும் பழக இனிமையானவனும் ஆவான்.குடும்பத்தில் அதிக பாசம் உண்டு.அதிஷ்டதாலேயே அதிக செல்வம் படைப்பான்.நாவலாசிரியர், கலைஞன் இவனே.பொறியியல் துறையில் சில சமயம் வல்லவனாவான்.

அஸ்வினி 2-ம் பாதத்தில் சனி நின்றால்

கரிய நிறம் முடி உள்ளவன்.மெலிந்த உடல் உள்ளவன்.காட்டு பொருட்களால் பிழைப்பு ,வியாபாரம், செய்பவன். அதில் கெட்டிக்காரனும் ஆவான்.ஆனால் சில சமயம் பொது அறிவு குறைவாக இருக்கும்.இதனால் பணம் முடைகளில் சிக்கிக் கொள்வான்.

முற்போக்குவாதி,முன்கோபி சிலசமயம் சமூக விரோத செயல்களில் ஈடுபாடு உண்டு.

அஸ்வினி 2-ம் பாதத்தில் ராகு நின்றால்

மத சம்பந்தமானவற்றில் பற்றுள்ளவன்.அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்கள் உண்டு.வறுமையும் கையேந்தும் குணமும் உண்டு.அடிக்கடி எண்ணங்கள் திட்டங்களை மாற்றுபவன்.சில சமயம் மூளை பாதிப்பு நோய் உண்டு.

அஸ்வினி 2-ம் பாதத்தில் கேது நின்றால்

சமூகத்தில் பெரும்பாலும் கீழ்மட்டத்தில் இருப்பவன்.பொதுமக்களுடன் நல்லுணர்வு உண்டு.பெண்களிடம் அதிக மோகம் பற்று உண்டு.

கால சக்கர தசை வருடம்
மகர சனி 4 வருடம்
கும்ப சனி தசை 4 வருடம்
மீன குரு தசை 10 வருடம்
விருச்சிக செவ்வாய் தசை 7வருடம்
துலாம் சுக்கிர தசை 16 வருடம்
கன்னி புதன் தசை 9 வருடம்
சிம்ம சூரிய தசை 5 வருடம்
கடக சந்திரன் தசை 21 வருடம்
மிதுன புதன் தசை 9 வருடம்
பரம ஆயுள் 85 வயதாகும்
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!