அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள் மற்றும் தொழில், வணங்க வேண்டிய தெய்வம், செய்ய வேண்டிய பரிகாரம் பற்றிய விரிவான தகவல்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

அஸ்வினி நட்சத்திரம்

அஸ்வினி நட்சத்திரம்(Ashwini nakshatra) 

அசுபதி நட்சத்திர பொதுவான குணங்கள்

இதனை அசுவினி என்றும் கூறுவர். அஸ்வீனம் மாதம் தாக்கம் உள்ளதால் இந்தப் பெயர் வந்தது. குதிரையின் வடிவமுள்ள இந்த நட்சத்திரம் முதல் நட்சத்திரம்.

கேது-செவ்வாயுடன் சம்பந்தப்பட்டு மின்னியல், வேதியல், மருத்துவ தொழிலுக்கு வழிகாட்டும். சீனா, மங்கோலிய நாட்டை குறிக்கும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கவிஞர்களாக இருப்பர். பாடல் புனைவதிலும், பாடுவதிலும், தடகள போட்டிகளிலும் கலந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவராய் இருப்பர். இவர்கள் காலி மனை வைத்திருந்தால் அரசாங்கம் பறிமுதல் செய்யும் பலிங்கு வீடு கட்டுவர். கவிஞர் கண்ணதாசனின் நட்சத்திரம் இதுவே

செவ்வாய்க்கு உரிய கோபம் மற்றும் பிடிவாத குணம் கொண்டவராக இருப்பார்கள்.சண்டையில் அதிக ஈடுபாடு இருக்கும், அயராது உழைப்பை கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற என்னும் தீவிரமகா இருப்பார்கள்.பெண்களிடம் இனிமையாக பேச கூடியவர்கள்.இவரை அவமதித்தல் மனதில் பழி வாங்கும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.தவறுக்காக மன்னிப்பு கேட்கும் இயல்பு உடையவர்கள்.எந்த காரியத்தையும் தைரியத்யுடன் செய்து முடிப்பார்கள்.தனது தாய், தந்தையர் மீது ஓரளவு பாசம் உடையவராக இருப்பார்கள்.அழகும் முரட்டு சுபாவமும் உடையவராக இருக்க கூடும்.

அஸ்வினி நட்சத்திரம்

அஸ்வினி நட்சத்திரம் பற்றிய விவரங்கள்

நட்சத்திரத்தின் ராசி : மேஷம்

நட்சத்திரத்தின் அதிபதி: கேது

ராசி அதிபதி : செவ்வாய்.

நட்சத்திர நாம எழுத்துக்கள் :(Ch)சு-சோ-சே-ல

கணம் :தேவ கணம்

மிருகம் : ஆண் குதிரை

பக்ஷி :ராசாளி

மரம் :எட்டி

நாடி : தக்ஷிண பார்சுவ நாடி

ரஜ்ஜு : ஏறுபாதம்

இதையும் கொஞ்சம் படிங்க : உங்கள் ஜாதகத்தில் சூரியன் 12 வீடுகளில் நின்ற பலன்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குடும்பம்

கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை சுற்றி எப்பொழுதும் நண்பர்களின் கூட்டம் இருந்து கொண்டேயிருந்தாலும் நல்லவர்களாக தேர்ந்தெடுத்தே பழகுவார்கள். குடும்ப வாழ்வைப் பொறுத்த வரை காதலிக்கும் யோகம் இருந்தாலும் சுக்கிரன் பலமாக இருந்தால் மட்டுமே காதல் திருமணம் அமையும். இல்லையென்றால் பெற்றவர்கள் பார்த்து  செய்யும் வாழ்க்கை துணையையே பெற முடியும்  மனைவி பிள்ளைகளின் மீது அதிக அக்கறையும் பிரியமும் இருக்கும். அவர்களையும் தன்னை போலவே நீதி, நேர்மை தவறாமல் வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவார்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தொழில்

எந்த தொழில் செய்தாலும் அதிக நேர்மையும் கண்ணியமும் இருக்கும். இதனால் உடன் பணிபுரிபவர்களிடமும், மூத்த அதிகாரிகளிடமும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டாலும் திறமைக்கேற்ற உயர்வுகள் கிடைக்கப் பெற்று வெகு சீக்கிரத்தில் உயர் பதவிகளை அடைவார்கள் 24 வயதிலிருந்து 30 வயதுக்குள்ளேயே பூமி மனை வீடு வாகனம் யாவும் வாங்கும் யோகம் கிட்டும். பத்திர பதிவு, வானியல், வங்கி, மருத்துவம், ரசாயனம் மருந்து, மின்சாரம், ரியல் எஸ்டேட், கட்டடம் கட்டுதல் போன்ற துறைகளில் ஈடுபட கூடிய வாய்ப்பு கிட்டும் ஜோதிடம் விஞ்ஞானம் போன்றவற்றிலும் ஈடுபாடு ஏற்படும்.

இதையும் கொஞ்சம் படிங்க : 12 லக்னம் பற்றிய குறிப்புகள் மற்றும் அந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வரும் நோய்கள்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பைல்ஸ், முதுகு தண்டு பிரச்சனை, கணுக்கால் வலி, ஒற்றை தலை வலி, மூளை காய்ச்சல் போன்றவற்றினால் பாதிக்கபடுவார்கள்.

அஸ்வினி நட்சத்திரம்

மகா திசை பலன்கள்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது திசை முதல் திசையாக வரும். கேது திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் கேது திசை நடைபெறும் என்பதை அறியலாம். கேது திசை காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கல்வியில் மந்த நிலையை கொடுக்கும். தாயின் உடல் நிலையும் பாதிப்படையும் சோம்பல் தனம், பிடிவாத குணம் இருக்கும்.

2-வது திசையாக சுக்கிர திசை வரும். சுக்கிர திசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும். சுக்கிரன் கேந்திர திரிகோணங்களில் அமைந்தோ, ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் அமைந்தோ இருந்தால் இத்திசை காலங்கள் மேன்மையான நற்பலன்களையும், சுகவாழ்வு சொகுசு வாழ்வையும் பெற முடியும். வாழ்க்கை தரமும் உயர்வடையும்.

 3-வது திசையாக சூரிய திசை வரும். பொதுவாகவே மூன்றாவது திசை முன்னேற்றத்தை சுமாராகத் தான் தரும் என்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும். தந்தையிடம் மன சஞ்சலங்களையும் பிரச்சனைகளையும் கொடுக்கும், உஷ்ண சம்பந்தபட்ட ஆரோக்கிய பாதிப்பும் ஏற்படும்.

சந்திர திசை 4-து திசையாக வரும் சந்திர திசை காலங்கள் 10 வருடங்களாகும். சந்திரன் கேதுவின் நட்சத்திரத்தில் அமைந்து திசை நடைபெறும் இக்காலங்களிலும் மனக்குழப்பங்கள், தாயிடம் கருத்து வேறுபாடு மனம் அலை பாய கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் வாழ்வில் நல்ல பல முன்னேற்றத்தையும் செல்வ செழிப்பையும் கொடுக்கும்.

5-வது திசையாக வரும் செவ்வாய் திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஐந்தாவது திசையாக வரும் செவ்வாய் திசை மாரக திசை என்பதால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் செவ்வாய் பலமாக அமைந்து சுபர் பார்வையுடனிருந்தால் பொருளாதார மேன்மையையும், பூமி மனை வாங்க கூடிய யோகத்தையும், சுகவாழ்வையும் உண்டாக்கும்.

ராகு திசை 6வது திசையாக வரும் மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும் ராகு திசையில் ராகு சுபர் வீட்டில் சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால் வாழ்வில் பலவிதமான முன்னேற்றங்களையும், செல்வம் செல்வாக்கும் வசதி வாய்ப்புகளையும் பெற முடியும்.

  அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வழி பாட்டு ஸ்தலங்கள்

ஸ்ரீரங்கம்

  • ரங்கநாதர் கோயிலில் குடி கொண்டுள்ள தன்வந்திரியை ஜன்ம நட்சத்திர நாளில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடலாம்.
  • கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரரும். அஸ்வினி நட்சத்திர காரர்களின் பரிகார தெய்வமாக விளங்குகிறார்.
  • திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூரில் சரஸ்வதி கோயிலிலும் வழி பாடு செய்யலாம்.
  • சென்னை திருவற்றியூம் மற்றும் திருவிடை மருதூர் கோயில்களில் உள்ள அஸ்வினி நட்சத்திர லிங்கத்திற்கும் ஜன்ம நட்சத்திர நாளில் பரிகாரம் செய்யலாம்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூற வேண்டிய மந்திரம்

சரஸ்வதி தேவியின் காயத்திரி மந்திரம்

ஓம் வாக் தேவியை ச வித்மஹே

விரிஞ்சி பந்யை ச தீமஹி

தன்னோ வாணீ ப்ரசோதயாத்!

அஸ்வினி நட்சத்திரத்திற்கு பொருத்தமில்லாத நட்சத்திரங்கள்

இதையும் கொஞ்சம் படிங்க : நலம் தரும் நவகிரக மந்திரம்

 அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆயில்யம் மகம் கேட்டை மூலம் ரேவதி போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.

அஸ்வினி நட்சத்திரம்

அஸ்வினி(Ashwini nakshatra) முதல் பாதம் : 

அதிக கோபம் மற்றும் பிடிவாத குணம்.அடிக்கடி சண்டையில் ஈடுபடுவது.சொத்து சேர்கை உண்டாகும்.எடுத்த காரியம் நிறைவேறும்

அஸ்வினி(Ashwini nakshatra) இரண்டாம் பாதம்:

சாந்த குணம் மற்றும்  பொறுமைசாலியக இருப்பார்கள்.மனைவி மீது அதிக அன்பு கொண்டவர்கள்.உயர்ந்த புகழ் மற்றும் கௌரவத்தை அடைவார்கள்

அஸ்வினி(Ashwini nakshatra) மூன்றாம் பாதம்: 

இவர்கள் தைரியசாலியக இருப்பார்கள்.சதுர்யமான பேச்சு திறமை கொண்டவர்கள்.கல்வி மற்றும் நுட்பமான ஆராய்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.வாதம் செய்வதில் வல்லவராக.கற்பனையில் சிறந்தவர்கள்.அன்னை மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

அஸ்வினி(Ashwini nakshatra) நான்காம்  பாதம்: 

பிறரை அடக்கி ஆலக்கூடிய சக்தி கொண்டவர்கள்.முன்கோபம் உடையவர்கள்.தர்ம சிந்தனையும் ,தெய்வ பக்தியும் உடையவர்கள்அரசுடன் தொடர்புடைய துறைகளில் ஈடுபாடு இருக்கும்.

Leave a Comment

error: Content is protected !!