பரணி நட்சத்திரம்
| இந்திய பெயர் | பரணி |
| அரபுப் பெயர் | அல்புனடன் |
| கிரேக்க பெயர் | அரிஸ்டிஸ் (அ)முஸ்கேஸ் Ariestis (or)Muscace |
| அதிதேவதை | யமதர்மன் |
| சீன பெயர் | ஓஸு(OSI ) |
| தெய்வம் | ஆதித்யன் |
| பூதம் | பிரிதிவீ -மண் |
| கோத்திரம் | விசுவாமித்திரம் |
| யோனி | யானை |
| பட்சி | காக்கை |
| விருட்சம் | நெல்லி மரம் |
| கணம் | மனித கணம் |
| சூனிய மாதம் | சித்திரை |
| நட்சத்திர ராசி அதிபதி | செவ்வாய் |
| நட்சத்திர அதிபதி | சுக்கிரன் |
| சரீரத்தின் பாகம் | நெற்றி |
உடலமைப்பு:
நடுத்தர உடலமைப்பு.மயிர் அடர்த்தியாக இல்லாவிட்டாலும் சுருண்ட மயிர்.பெரிய உயர்ந்த நெற்றி.அழகான வெண்மையான வரிசை பற்கள்.உயர்ந்த கழுத்து,நண்பகல் பிறப்பானால் உயர்ந்த நெடிய தோற்றம்.தலை முன் நெற்றி அகன்றும் கீழ் உதட்டில் படிப்படியாக குறுகியும் இருக்கும்.அடர்ந்த புருவம், சிவந்த நிறம்.
குணம்:
பரணியில் பிறந்தவனை நல்ல மனசு காரணமாக எல்லோரும் விரும்புவார்கள்.தன் கருத்துகள் பிறரை மதிக்கும் என்ற கவலை சிறிதும் இன்றி வெளியிடுபவர்.சரியோ, தப்போ தன் மனசாட்சிபடியே நடப்பவன்.
கருத்து வேற்றுமைகளால் சில சமயம் எல்லோரையும் எதிர்த்து கொள்ள (அல்லது ) பகைத்துக்கொள்ள வேண்டி வரும்.ஆனால் சுட்டிக் காட்டப்பட்டால் தன் தவற்றை உணர்ந்து மீண்டும் நட்பை மேற்கொள்வார்.
(பரணிக்கு சுக்கிரன் அதிபதி) சுக்கிரன் பெண் கோள்.நயமானவன் ஆதலால் மேற்கண்டவை பெரிதும் பொருந்தாது.மாறாக தன் நடத்தை, அழகு ,உருவ பாதிப்பு இவற்றால் எல்லோரையும் தன்பால் இழுத்துக் கொள்வான்.இவன் பிறரை பாதுகாக்க கூடுமானாலும் இவனை பார்த்துக்கொள்ள வேறு நபர் வேண்டும் என்பதே உண்மையே.
கல்வி வருவாய் மூலம்-தொழில்
இவனுக்கு கல்வி நிறைய உண்டு.இருப்பினும் வாழ்க்கையில் 33 வயதிற்கு மேல் தான் முன்னேற்றம் உண்டாகும்.
வாசனைப் பொருள் வியாபாரம், ஜவுளி நாகரீக அழகுக்கலை சாதனங்கள் வியாபாரம், பெரிய உணவகம் வைத்து நடத்தி முன்னேறல், நுண்கலை, நடிப்பு, திரைப்படத் துறை போன்றவற்றில் நல்ல லாபம் வரும்.
பரணி பிறந்தான் தரணி ஆள்வான் என்ற பழமொழிப்படி இவனுக்கு பெருத்த ராஜயோக வாழ்க்கை அமையும்.
குடும்பம்:
இளம்வயதில் திருமணம்.அன்யோன்ய அதி சுகமான தாம்பத்திய வாழ்க்கை.இவன் மனைவி உணவிலிருந்து அந்த உணர்வு வரை நிரப்பி நன்றாக இவனை சுகமாக வைப்பாள்.
முதல் அல்லது இரண்டாம் பாதத்தில் பிறந்த இருந்தால் தகப்பன் இளமையில் மரணம் ஆகலாம்.
இவன் வீட்டுக்கு வெளியே இருக்க விரும்ப மாட்டான்.குடும்பத்தின் மேல் பாசம் அதிகம்
உடல் நலம்:
சுகபோக உல்லாசன்.ஆகையால் பால்வினை நோய் வரலாம்.நீரழிவு ,உடல்வலி முக்கியமாக காணப்படும்.இவனுக்கு நீர் கண்டம் உண்டுமுன்நெற்றியில் தாக்கப்படலாம்.தொடர்ந்து புகை பிடிக்கும் கெட்ட பழக்கம் உண்டு எனவே இதயநோய் வரலாம்.
பரணி நட்சத்திர பெண்கள்
- பரணி பெண்கள் அமைதியான குணம்,
- அழகிய சுண்டிக்கவரும் நளின தோற்றம்,
- தன் கருத்துப் படியே நடப்பாள் சிறிது வணங்காமுடி.
கல்வி தொழில் :
தன் வாழ்க்கைக்கு தானே தேவையானவற்றை சம்பாதிப்பாள்.நல்ல முதிர்ந்த மறுவற்ற பண்பு.தனக்கு மூத்தவர்கள், பெற்றவர்கள் இவர்களிடம் நல்ல மரியாதை ,பணிவுடன் நடந்து கொள்வாள்.
குடும்ப வாழ்க்கை
23 வயதில் திருமணம்-குடும்பத்தில் இவள் கை ஓங்கியிருக்கும்.
தன் கணவனின் அன்பு, பாசம், அரவணைப்பு எல்லாம் இவளுக்கே உரிமையாகும்.
கணவர் குடும்பத்தினரால்(மாமியார், நாத்தனார்) போன்றவர்களால் பெரிதும் தொல்லைகளுக்காளாகலாம் .
இரண்டாவது பாதத்தில் பிறந்தவலானாள் மாமியார் இறக்க நேரலாம் தன் குடும்பத்தைப் பற்றி அதிகம் பெருமைப்படுவார்.
தான் விரும்பும் ஆண் ஒருவருக்கே அடங்கி போவாள்.தன்னைவிட அந்தஸ்து குறைவான கணவனானால் அவனை அடக்கி ஆட்சி செலுத்துவாள்
ஆரோக்கியம்
- பொதுவாக நன்றாக இருக்கும் அடிக்கடி மாதவிடாய் கோளாறுகள் ஏற்படலாம்.
பரணி நட்சத்திரத்தின் இதர காரகங்கள்:
நோய்கள்: தலையில் அடிப்படல், அதிக சம்போகத்தால் வெக்கை நோய்,(சூட்டினால் ஏற்படுவது),சளி, இருமல், ரத்த நாள குறைபாடு, அடைப்பு, உணவில் ருசியின்மை, அதிக உணர்ச்சி, வேகப் படல் முதலியன.
- இந்த நட்சத்திரம் முதல் பாதத்தில் நோய் கண்டால் மூன்று நாட்களில் தீரும்
- இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் 7 நாட்களில் தீரும்
- மூன்றாம் பாதத்தில் நோய் தோன்றினால் 15 நாட்களில் தீரும்
- நான்காம் பாதத்தில் நோய் தோன்றினால் 15 நாட்களில் தீரும் திராவிட 16வது நாள் மாரகம்(மரணம்) பண்ணும்.
- பரணிக்கு அதிதேவதையே காலனாகிய யமன். ஆகையால் இதில் நோய் கண்டால் தீருவது கடினம் ஆகும்.
நோய் பரிகாரம் :
பரணி நட்சத்திரத்தில் நோய் கண்டால் ஐந்து நாளில் தீராவிடில் எள் சாதம் செய்து நோயாளியின் தலையை சுற்றி ஊருக்கு வெளியே மாடு மந்தை மடக்கும் இடத்திற்கு அப்பால் நாற்சந்தியில் வைத்துவிட்டால் அந்த நோய் நீங்கும் என்பதாம்.
நண்பகலில் இந்த நட்சத்திரத்தில் மேகம் தோன்றினால் 16 தினங்களில் மழை உண்டாகும்.
பங்குனிமாதம் சூனியம்
புதன்கிழமை இதனுடன் சப்தமி சேர்ந்தால் விஷ யோகம
பரணி மட்டும் புதன்கிழமையில் வந்தால் விஷயோகம்
ஞாயிறு சேர்ந்தால் எமகண்ட நாள்
இதன் கடைசி அம்சம் மரண யோகம் அல்லது தின மிருத்யு எனப்படும்.
பரணி நட்சத்திரத்தில் செய்ய தக்கவை:
கத்திரருக்க, மாடு வாங்க, ஆயுதப் பிரயோகம், மூலிகை உபயோகிக்க, மருந்து உண்ண, அடுப்பு வைக்க, தானியம் களஞ்சியத்தில் சேர்க்க, வியாதியஸ்தர் குளித்தல் போன்றவற்றிற்கு நல்லது.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய ஆலயம்:












