27 நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய பைரவர் ஆலயங்கள்
பிறந்த நட்சத்திரம் | வணங்கவேண்டிய பைரவர் /இருக்கும் இடம் |
அசுபதி | பேரூர் ஞானபைரவர்(கோயம்புத்தூர் அருகில்) |
பரணி | பெரிச்சி கோவில் நவபாஷாணபைரவர்(காரைக்குடி அருகில்) |
கார்த்திகை | அண்ணாமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் |
ரோகிணி | திருக்கண்டியூர் வடுகபைரவர்(அட்டவீரட்டானங்களில் ஒரு வீரட்டானம் இது) |
மிருகசீரிடம் | க்ஷேத்திரபாலபுரம்(கும்பகோணம் டூ மாயவரம்/மயிலாடுதுறை) |
திருவாதிரை | திருவண்டார்கோவில்(பாண்டிச்சேரி) |
புனர்பூசம் | சாதுசுவாமிகள் மடாலயம்,விஜயபைரவர்,பழனி ரோப்கார் மையம் எதிரே. |
பூசம் | ஸ்ரீவாஞ்சியம் யோகபைரவர் |
ஆயில்யம் | காளஹஸ்தி பாதாளபைரவர் |
மகம் | வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலய பைரவர் |
பூரம் | பட்டீஸ்வர பைரவர் |
உத்திரம் | சேரன்மஹாதேவி அம்மநாதர்+ஆவுடையம்மன்கோவில் ஜடாமண்டலபைரவர் |
அஸ்தம் | திருப்பத்தூர் யோகபைரவர் |
சித்திரை | தர்மபுரி கோட்டை கல்யாணகாமாட்சி அம்பிகை உடனுறை அருள்நிறை மல்லிகார்ஜீன சுவாமி கோவிலில் அமைந்திருக்கும் பைரவர் |
சுவாதி | பொற்பனைக்கோட்டை(திருவரங்குளம்) பைரவர்,புதுக்கோட்டை அருகே |
விசாகம் | திருமயம் கோட்டை பைரவர் |
அனுஷம் | ஆடுதுறை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் |
கேட்டை | சூரக்குடி கதாயுதபைரவர்(காரைக்குடி அருகே பள்ளத்தூர்) |
மூலம் | சீர்காழி சட்டநாத ஆகாசபைரவர் |
பூராடம் | அவிநாசி காலபைரவர் |
உத்திராடம் | கரூர் பசுபதீஸ்வரர் கோவில் பைரவர் |
திருவோணம் | வைரவன்பட்டி மார்த்தாண்டபைரவர் |
அவிட்டம் | சீர்காழி அஷ்டபைரவர் |
சதயம் | சங்கரன்கோவில் சர்ப்ப பைரவர் |
பூரட்டாதி | (திருச்செங்கோடு)கொக்கராயன்பேட்டை ஸ்ரீபிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்திருக்கும் பைரவர் |
உத்திரட்டாதி | (கும்பகோணம்)சேங்கனூர் வெண்கல ஓசை உடைய பைரவர் |
ரேவதி | தாத்தையங்கார்பேட்டை ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலய பஞ்சமுகபைரவர் |
12 ராசிகளில் சனி பகவான் இருப்பதால் உண்டாகக்கூடிய பொதுப்பலன்கள்
கால பைரவர் மந்திரம்
சிவபகவானின் அவதாரங்களில் பைரவர் அவதாரமும் ஒன்று சனிபகவானின் குரு பைரவர் மூர்த்தியாகும். ஸ்ரீ பைரவர் அவதாரமும் 64 வகைகள் உண்டு பைரவரின் திருவுருத்தில் பண்ணிரண்டு இராசிகளும் அடக்கம்.
தலையில் மேஷஇராசியும், வாய் ரிஷப இராசியும், கைகளில் மிதுன இராசியும், மார்பில் கடக இராசியும், வயற்றில் சிம்மம் இராசியும், இடையில் கன்னி இராசியும், புட்டத்தில் துலாம் இராசியும், பிறப்பு உறுப்பில் விருச்சிக இராசியும், தொடையில் தனுசு இராசியும், முனங்களில் மகர இராசியும், காலில் கீழ்பகுதி கும்ப இராசியும், காலின் அடியில் மீன இராசியும் அமைந்துள்ளன.
ஸ்ரீ நவ பைரவர் மூர்த்தியின் பெயர்கள்:
- அசிதாங்க பைரவர்.
- ருரு பைரவர்.
- சண்டை பைரவர்.
- குரோதன பைரவர்.
- உன்மத்த பைரவர்.
- கபாலபைரவர்.
- பிஷ்ண பைரவர்.
- சம்ஹார பைரவர்.
- சொர்ணாகர்ஷண பைரவர்.
ஆகிய பைரவ மூர்த்திகள். ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியில் மாலையில் சூரியபகவான் மறைவு நேரத்தில் பைரவர் தரிசனம் செய்து வழிபடவும்.
சிவந்த ஜடையும் பரிசுத்தமான உடலும் சிவந்த தேஜஸும் சூலம் கபாலம் உடுக்கை முதலியவற்றை தரித்து உலகத்தை ரக்ஷிப்பவரும் நிர்வாணமாகவும் நாயினை வாஹனமாகவும் கொண்டு முக்கண்ணனாக ஆனந்த வடிவினனாக பூத பிரேதநாதனாக க்ஷேத்திரங்கள் க்ஷிப்பவராக உள்ள பைரவரை நமஸ்கரிக்கிறேன்.
12ராசிகளுக்கும்27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்
பைரவர்மூலமந்தரம் ;
ஓம் ஹ்ரீம் வம் வடுகாய அபதுத்தாரனாய
குரு குரு வடுகாய ஹ்ரீம்||
ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்: ஹ்ரைம்
ஹ்ரெளம், க்ஷம், க்ஷேத்ரபாலாய நம:
பைரவர் காயத்ரீ;
சுவாந த்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்||
ஒம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே க்ஷேத்ரபாலாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்||
நிசாசராய வித்மஹே சுவைஹய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்||
பைரவர்க்கு தேய்பிறைஅஷ்டமி விரதம் சிறந்து ஓவ்வொரு அஷட்மிக்கும் ஓவ்வொரு பெயர் உண்டு .
அஷ்டமியை பஞ்சங்கம் இல்லாமல் கண்டறியும் முறை பெளர்ணமி மற்றும் அமாவசை திதி அடுத்து 8 வது திதி ஆகும்.
தேய்பிறை அஷ்டமி என்பது பெளர்ணமி கழித்து 8வது நாள் தேய்பிறை அஷ்டமி.
தேய்பிறை அஷ்டமியை தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்
ஏனெனில் மார்கழி மாதம் வானுலகில் பிரம்ம மூக்ஷர்த்த காலம் .
ஓதிமலைமுருகன் கோவில் – ஐந்து முகங்களும் எட்டு கரங்களும் கொண்ட அற்புத முருகர்
வ.எண் | தமிழ் மாதம் /அஷ்டமி | அஷ்டமியின் சிறப்பு பெயர் |
1 | மார்கழி தேய்பிறை அஷ்டமி | சங்கராஷ்டமி |
2 | தை தேய்பிறை அஷ்டமி | தேவ தேவாஷ்டமி |
3 | மாசி தேய்பிறை அஷ்டமி | மகோஸ்வராஷ்டமி |
4 | பங்குனி தேய்பிறை அஷ்டமி | திரியம் பகாஷ்டமி |
5 | , சித்திரை தேய்பிறை அஷ்டமி | ஸ்நாதனாஷ்டமி |
6 | வைகாசி தேய்பிறை அஷ்டமி | சதாசிவாஷ்டமி |
7 | ஆனி தேய்பிறை அஷ்டமி | பகவதாஷ்டமி |
8 | ஆடி தேய்பிறை அஷ்டமி | நீலகண்டாஷ்டமி |
9 | ஆவணி தேய்பிறை அஷ்டமி | ஸ்தானுஷ்டமி |
10 | புரட்டாசி தேய்பிறை அஷ்டமி | ஜம்புகாஷ்டமி |
11 | ஐப்பசி தேய்பிறை அஷ்டமி | ஈசானசிவாஷ்டமி |
12 | கார்த்திகை தேய்பிறை அஷ்டமி | ருத்ராஷ்டமி |