துவாதச பாவங்களில் சூரியன் நின்ற பலன்
2ம் இடத்தில் சூரியன் நின்ற பலன்:
- சூரியன் இரண்டாம் இடத்தில் நின்றால் அந்த ஜாதகருக்கு நேத்திர ரோகமுண்டாகும்.
- கன்று, காலி நஷ்டம் ஏற்படும்.
- கடுமையான வார்த்தைகளை உச்சரிப்பவனாகவும், முகரோகமுடையவனாகவும் இருப்பான்.
- குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிரியவனாகவும் இருப்பான்.
- பொருள் விரையமுண்டு; பொருளுண்டு. சூரியன் நிலையை அறிந்து சரியான பலன்களை கூற வேண்டும்.
- கதிரவன் என்று அழைக்கப்படுகின்ற சூரியன் இரண்டாம் இடத்தில் இருந்தால் தீயபலன்கள் உண்டாகும். காரணம் அது ஒரு பாவக்கோள். ஆனால் அது ஆட்சி உச்சமாக இருந்தால் மேற்கூறியதற்கு மாறாக நல்ல சுப பலன்கள் உண்டாகும்.
- பகை, நீசமாக இருந்தால் மேற்படி கூறிய கெட்ட பலன்களே உண்டாகும்.
3ம் இடத்தில் சூரியன் நின்ற பலன்:
Also Read
- சூரியன் 3-ம் இடத்தில் நிற்க பாலகனுக்கு தீர்க்காயுள் உண்டு.
- அதே சமயம் சகோதர பீடை, ஜாதகர்க்கும், மைந்தனுக்கும் பீடையுண்டாகும். அதுபோக, அந்த ஜாதகர் கடுமொழி பேசுபவராகவும், வீராதி வீரனாகவும் இருப்பார்.
- லக்ன பலன்களைப் பார்த்து சரியான பலன்களை கூற வேண்டும்.
- சூரியனது வலிமை அறிந்து சுப பாவ பலன்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.
- அதாவது சுபமாக இருந்தால் சகோதரர் விருத்தி என்றும், அசுபமாக இருந்தால் சகோதர பீடை என்றும் கூற வேண்டும்.
சூரியன் 4ம் பாவத்தில் நின்ற பலன்:
- சூரியன் சுக ஸ்தானமாகிய நான்காமிடத்தில் ஏற, அந்த ஜாதகர் புத்தி மந்தமாகவும், ஜன விரோதியாகவும் இருப்பான்.
- பந்துகளை பகைத்து வாழ்பவனாகவும், வீண் மனஸ்தாபம் கொண்டவனாகவும், மாதர் பீடையுள்ளவனாகவும் இருப்பான்.
- மேலும் அரச சேவை செய்ய கூடியவனாகவும், டம்பம் அடிப்பவனாகவும் இருக்கக் கூடும்.
- சூரியனது வலிமையை அறிந்து சரியான பலன்களை கூற வேண்டும்.
சூரியன் 5ம் பாவத்தில் நின்ற பலன்:
- சூரியன் ஐந்தாம் இடத்தில் நிற்க ஜாதகனுக்கு தீர்க்கமான புத்தியும், நல்ல ஞானமும் உண்டாகும்.
- மேலும் வெகு காமியாகவும், சௌபாக்கியம் நிறைந்தவனாகவும், அதிக கோபமுள்ளவனாகவும், தூல தேகமுள்ளவனாகவும் இருப்பான்.
- நாடாளும் மன்னர் பகை உண்டு.
- மாந்திரீகமும் செய்வான்.
- இது போக பிதுர் தோஷம், புத்திர தோஷம், தேச சஞ்சாரம் போன்ற அசுப பலன்களும் உண்டாகும்.
- சூரியன் மற்றும் மற்ற கிரகங்களின் வலிமை அறிந்து சரியான பலன்களைக் கூற வேண்டும்.
சூரியன் ஆறாம் பாவத்தில் நின்ற பலன்:
Also Read
- சூரியன் ஆறாம் பாவத்தில் நிற்க அனேக மைந்தர் உண்டு.
- வெகு காமியாகவும், ஞானம் உள்ளவனாகவும், ஜன வசீகராகவும் இருப்பான்.
- மேலும் அரசு சேவை செய்பவனாகவும், ‘ஜன விரோதி’ எனவும் கூறலாம். அதுபோக மிகவும் சமர்த்தான கடன் வியாபாரம் செய்வான்.

சூரியன் 7ம் இடத்தில் நின்ற பலன்:
- சூரியன் எழில் நிற்க எல்லா ஜனங்களும் பார்க்கும்படியாக தந்திரம் செய்வான்.
- பெண்ணாசை பிடித்தவன்.
- வேசியுடன் கலந்து இருப்பான்.
சூரியன் 8ல் நின்ற பலன்:
- சூரியன் எட்டில் நிற்க சூரிய திசையில் ஜாதகருக்கு ஆயுள் முடியும்.
- கையில் காசு உள்ளவன் போல் டம்பம் அடிப்பவன்.
- தன நஷ்டம், அக்னி பயம், சோர புத்தி, கண் நோய் முதலியவற்றால் அவதியுருவான்.
- சூரியன் மற்ற கிரகங்களின் வலிமை அறிந்து தோஷ நிவாரண பலன்களைக் கூற வேண்டும்.
சூரியன் 9ம் இடத்தில் நின்ற பலன்:
- சூரியன் 9 ஆம் இடத்தில் இருக்க ஜாதகருக்கு பிதுர் நஷ்டம் உண்டாகும்.
- மேலும் வேதநூல் அறிந்தவர்களை தூஷிப்பவன்.
- குரு துரோகி. ஈவு இரக்கம் இல்லாதவன்.
சூரியன் 10ம் இடத்தில் நின்ற பலன்:
Also Read
- சூரியன் பத்தாம் இடத்தில் இருக்க ஜாதகனுக்கு பலவித வித்தைகள் உண்டாகும்.
- மேலும் சிவபக்தி, தர்ம சிந்தனை உள்ளவர்.
- சிவிகை யோகம், குதிரைகளும் உண்டு.
சூரியன் 11ம் இடத்தில் நின்ற பலன்:
- சூரியன் 11ம் இடத்தில் நிற்க பாலகனுக்கு அரசால் லாபம் உண்டு.
- காரியங்களை எளிதில் முடிக்க கூடிய திறமையை உள்ளவன்.
- அனேக செல்வங்களைத் தேடி வைப்பான்.
சூரியன் 12ல் நின்ற பலன்:
- சூரியன் 12 ஆம் இடத்தில் இருக்க ஜாதகருக்கு பொருள் விரயமும், நஷ்டமும் உண்டாகும்.
- பிதுர் நஷ்டம் ஏற்படும்.
குறிப்பு :
சூரியன் ஒரு தீய கோள் என்பதால் அது 3, 6, 10, 11 ஆம் வீடுகளில் இருந்தால் சுப பலன்களையும், மற்ற இடங்களில் இருந்தால் அசுப பலன்களையும் அள்ளி வழங்கும் என்று புலிப்பாணி கூறுகிறார். ஆனால் சூரியன் ஆட்சி, உச்சம் பெற்று எந்த வீடுகளில் இருந்தாலும் சுப பலன்கள் ஏற்படும்.பகை நீசமாக இருந்தால் அசுப பலன் உண்டாகும் என்றும் அறிய வேண்டும்.











