வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன்
வரலாறு:
மதுரை மாநகரில் மீனாட்சியம்மன் ஆலயத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் மிகப்பெரிய தெப்பக்குளத்தை கொண்டுள்ளது.
சிறப்பு :
அன்னை மாரியம்மன் மதுரையின் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறாரள். இக்கோவிலில் வழங்கப்படும் தீர்த்தம் அம்மை நோய், கண்பார்வையில் ஏற்படும் சிக்கல்களுக்கு மருந்தாக விளங்குகிறது. உடல் நலம் குன்றி இருக்கும் பக்தர்களின் குடும்பத்தினர் இப்புனித நீரை வீட்டிற்கு எடுத்துச் சென்று அவர்களுக்கு கொடுத்து குணம் அடையச் செய்வார். மதுரையில் மற்ற கோவில்களில் எந்த பண்டிகையும் தொடங்குவதற்கு முன் இத்திருத்தலத்தில் மாரியம்மனுக்கு முதல் பூஜை செய்து விட்டு அவளது உத்தரவை பெறுவது வழக்கம். பங்குனி மாதத்தில் இவ்வாலயத்தின் வருட விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பரிகாரம்:
தோல்வியாதியினால் பாதிப்பு உற்றோர் அம்மனை வேண்டி நோய் குணமடைந்த பிறகு உப்பு மற்றும் மிளகை காணிக்கையாக வழங்குவர். அம்மனின் அருளைப் பெற பக்தர்கள் எலுமிச்சை விளக்குகளை ஏற்றுவர். தைப்பூசத்தின் போது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சியம்மன் ஆலயத்தில் இருக்கும் அனைத்து தெய்வங்களும் வண்ணமயமான கோலத்தில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் வந்து இறங்குவது மதுரை மக்களின் கண்களுக்கு படைக்கப்படும் அற்புத விருந்தாகும். பக்தர்கள் இங்கு வந்து வழிபட சகல சம்பத்துகளையும் பெறலாம் என்பது ஐதீகம்.
வழித்தடம்:
மதுரை மாநகரில் மீனாட்சியம்மன் ஆலயத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது மதுரைமாநகரின் பல பகுதிகளில் இருந்தும் இவ்வாலயம் வந்து செல்ல அரசு பேருந்து, ஷேர் ஆட்டோ முதலிய வசதிகள் உள்ளன. இரு சக்கர வாகனங்களிலும் வந்து செல்லலாம்.