நீங்கள் பிறந்த கரணமும் அதன் பலன்களும்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

நீங்கள் பிறந்த கரணமும் அதன் பலன்களும்

கரணம் என்பது திதியில் பாதி அளவை குறிப்பதாகும்.6பாகைகள் கொண்டது ஒரு கரணம். இரண்டு கரணங்கள் கொண்டது ஒரு திதியாகும். ஜென்ம ஜாதகத்தில் காரணம் விவரம் குறிப்பிடப்பட்டிருக்கும் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

கரணங்கள் 11.நாம் எந்தக் காரணமோ அதற்கேற்ற இயல்புடன் திகழ்வோம். அதேபோல் காரணம் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பறவை அல்லது மிருகத்தின் இயல்பை ஏற்றிருக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள்..

பவ கரணம்(சிங்கம்):

பவ கரணத்தில் பிறந்தவர் எக்காரியத்திலும் பின் வாங்காத தைரியம் உடையவர். கூர்ந்து ஆராய்ச்சி செய்பவரும், சுகமுடையவரும், நன்னடத்தை உடையவரும், மென்மையான தலைமுடி உடையவரும் ஆவார்.

பாலவ காரணம்( புலி):

சிற்றின்ப பிரியர். நீங்காத செல்வம் உடையவர். தருமம் செய்பவர். உறவுகளைப் பேணி காப்பவர்.

கௌலவ கரணம் (பன்றி):

அரசாங்கப் பணியில் இருப்பார்கள். ஆசாரம் மிக்கவர்; பெற்றோர் மீது பற்றுள்ளவர். நிலபுலன்களைச் சம்பாதிப்பார்கள்.

தைதுலை கரணம் (கழுதை):

சிக்கனம் மிகுந்தவர். தருமத்தில் நாட்டம் இருக்காது. அரசு சார்ந்த பணியில் இருப்பார்.

கரணமும் அதன் பலன்களும்
கரணமும் அதன் பலன்களும்

கரசை கரணம் (யானை):

எதிரிகளை எளிதில் வெல்லக் கூடியவர். எல்லோருக்கும் உதவும் தரும சிந்தனை உடையவர். அரசாங்கம் மூலம் பணவரவு உண்டு.

வணிசை கரணம் (எருது):

சிறந்த கற்பனைவாதி. சுய வட்டத்தில் வாழ்பவர். உலகப் பொது வழகத்தில் வெறுப்பு உடையவர்.

பத்திரை கரணம் (கோழி -சேவல்):

சிக்கன குணம் மிக்கவர். மனசஞ்சலம் மிகுந்திருக்கும்.

பத்திரை கரணம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே தொடவும்

சகுனி கரணம் (காகம்):

மதியுகம் மிக்கவர். செல்வந்தர், தோற்றப் பொலிவும் தைரியமும் மிக்கவர்.

சதுஷ்பாதம் கரணம் (நாய்):

கோபம் மிக்கவர்; வாக்கை காப்பாற்ற இயலாது. சிலர் வறுமையில் வாடவும் வாய்ப்புண்டு.

நாகவ கரணம் (பாம்பு):

உத்தம குணம் கொண்டவர்; சுவையான உணவு உண்பதில் விருப்பம் உள்ளவர்.

கிமிஸ்துக்கினம் கரணம்(புழு):

சகோதரர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். பெற்றோர் மீதும் பற்றுள்ளவர்.வேத சாஸ்திரமும் உலக ஞானமும் மிக்கவர்.

Leave a Comment

error: Content is protected !!