கன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

கன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்

  • இவர்கள் திருமணம் ஏதோ ஒரு நிபந்தனையின் பேரில் அல்லது முக்கிய ஒரு காரணத்தால் நடப்பதாகும். தெய்வானு கூலத்தால் நடந்துவிடும். ஏதோ ஒரு கவலைகள் தம்பதிக்குள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
  • கணவன் அல்லது மனைவி ஏதோ ஒரு தெய்வீக துறையில் சக்தி பெறுவார். மனைவிக்கு சங்கீத ஞானம் அல்லது ஆச்சரியமான சில வேலைகளை செய்து காட்டுவார்.
  • திருமணத்திற்கு முன் இருந்த கவலை திருமணத்திற்கு பின் இருக்காது.
  • ஏதோ ஒரு பயந்த நிலையில் விரக்தியான நிலையில் திருமணம் நடக்கும். பின் நல்ல எதிர்காலம் அமையும்.
  • லக்னாதிபதியும் 7-க்குடையவரும் சுக்கிரனும் நீசமோ 6,8-ல் அமைந்தோ அல்லது 7-ல் ராகு,கேது அமைந்தால் சாதாரணமான இடத்திலிருந்து பெண் அமையும்.
  • திருமணத்திற்குப்பின் பெண் குடும்பம் நல்ல நிலைமைக்கு வந்து விடும். கணவனுக்கு சுமாரான யோகம் தரும்.
  • ஆண் அல்லது பெண்ணுக்கு 7-ல் சூரியன், செவ்வாய், ராகு, கேது, மாந்தி சேர்க்கை-பார்வை மண வாழ்க்கையை கேட்கவே வேண்டாம். அனுசரித்து போய் விடுவது உத்தமம்.
  • இல்லையேல் பிரிவினை-விவாகரத்து ஏற்படும்.
  • உடல் பருத்து குண்டான குட்டையான மனைவி வாய்க்கலாம்.
  • அளவான புத்திர பாக்கியம் ஏற்படும்.
  • சிலருக்கு மனைவியால் யோகமும் வரலாம். சிலர் மனைவிக்கு கட்டுப்பட்டு மனைவி சொல்படி நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
  • பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தமான கோளாறு அல்லது கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
  • வாத ,பித்த சம்பந்தபட்டதும் நரம்பு தளர்ச்சி, தோல் சம்பந்தப்பட்டதும் ஆன நோய் தொல்லைகள் வரும்.
கன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்
  • சுக்கிரன்-சனி-குரு சந்திரன் தசா புத்தி அந்தர காலங்களில் வடக்கு-தெற்கு சம்பந்தப்பட்ட திசையில் திருமணம் நடக்கும்.
  • 2 ,5, 7 ,11 -ல் உள்ளவர் பார்த்தவர் தசா புத்தி அபகாரங்களில் திருமணம் நடக்கும்.
  • வரும் மனைவி விகாரத்துடன் கூடியது. கெட்ட புத்திரி-புத்திரர்கள் உள்ளவர். சண்டையிடுவதில் பிரியம்.
  • நல்லொழுக்கம், பிரீதி இவை அற்றவள்.
  • இப்பலன் பாவ கிரக தொடர்பால் ஏற்படக் கூடியதாகும்.
  • திருமண காலத்தில் இவர்களுக்கு பல பிரச்சனைகள் பல வகையான வாக்குவாதங்கள் அல்லது அபிப்பிராய பேதங்கள் ஏற்பட்டு திருமணம் நடக்கும்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு:

  • குரு 3, 6 ,8 ,12-ல் இருந்தால் திருமணத்திற்கு பின் மிக உயர்வான வாழ்க்கையை பெற்று மதிப்புடன் வாழ்வார்.
  • நல்லதொரு வீடு, வண்டி, வாகன வசதிகள் அனைத்தும் ஏற்படும்.
  • ஆனால் வரும் கணவனோ மனைவியோ கோப தன்மையும், பிடிவாத குணமும் கொண்டவர்களாக இருப்பர்.

2 thoughts on “கன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்”

Leave a Comment

error: Content is protected !!