ரிஷபம் மற்றும் துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்
ரிஷப லக்கினம்:
மனைவிக்கே முழு பொறுப்பை விட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் வீண் தகராறுகள் தோன்றும்.
பெரும்பாலும் மனைவிதான் முதலில் இறப்பாள்.
சேவ்வாய் சேர்த்கை-பார்வை பெற்றால் சீதனம் , வரதட்சணை அதிகம் கேட்கலாம் அல்லது மனைவியால் ஆதாயம் ஏற்படலாம்.. ஏற்படும்.
வீட்டில் சிறு சிறு சண்டைகள் அடிக்கடி தோன்றி மறையும்.
செவ்வாய் , பாவர் சேர்க்கை- பார்வை பெற்றால் பிரிவினை ஏற்படும்.
செவ்வாயை குரு-சுக்கிரன் சேர்ந்தால்-பார்த்தால். மனைவி நல்ல தைரியசாலி. கடின உழைப்பை மேற் கொள்வாள். எதையும் உடனே கிரகித்துக் கொள்ளும் திறன் பெற்றவர். கொஞ்சம் தான் என்ற அகம்பாவம் இருக்கும்.
சில நேரங்களில் உரத்த குரலில் பேசி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரியக் கூடதவையை தெரிய வைத்து விடுவாள்.
2,5,7,11-ல் உள்ளவர் பார்த்தால் தசா புத்தி அபகார காலத்தில் திருமணம் நடக்கும்.
புதன் ,செவ்வாய், குரு,தசா புத்தி அபகாரங்களில் மேற்கு-கிழக்கு திசையிலிருந்து வரும் ஜாதகத்திற்கு திருமணம் அமையும்.
வரும் மனைவி நல்ல குணம் -தன்மை இராது..
துலாம் லக்கினம்:
கணவனை மிஞ்சி சில காரியங்களில் இறங்குவார்கள்.
சிறிய விஷயமானாலும் பெரிய குற்றமாக எண்ணுவாள் .
சில சமயம் யோசனை இன்றி ஏதாவது செய்து விட்டு முழிப்பாள் .
தானே எல்லாவற்றிற்கும் அதிகாரி என்ற பெருந்தன்மையான குணம் ஏற்படும் .
மனைவிக்கு அடிக்கடி உடல் உபாதை ஏற்படும் .
அருகாமையில் கிழக்கு – தெற்கு திசையில் 6 உடன் பிறப்புக்கள் உள்ள இடத்தில் திருமணம் நடக்கும் .
மனைவிக்கு கண்டாதி தோஷம் ஏற்படும் .
செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால் பாதிக்காது .
அநேகருக்கு இரு மனைவி அல்லது வேறு தொடர்பு ஏற்படும்.
முதல் மனைவி இறப்பாள்.
செவ்வாய் – சனி – சூரியன் திசாபுத்தி அந்தர காலங்களில் திருமணம் நடக்கும் .
2,5,7,11 ல் உள்ளவர்-பார்த்தவர் தசாபுத்தி அபகாரங்களில் விவாஹம் நடக்கும் .
வரும் மனைவி குரூரமாகவும் , சபல சுபாவ முள்ளவளாகவும் , பாபத்தில் பற்று உள்ளவளாகவும் , கெட்ட ஜனங்களால் புகழ் பெற்றவளாகவும் , பணத்தில் பிரியமுள்ளவளாகவும் பிறரிடம் யாசிக்கும் சுபாவம் உள்ளவளாகவும் இருப்பாள் .
இந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு வரும் கணவன் அல்லது மனைவி வீண் ஆடம்பரங்களுக்கு தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடியவர்களாகவும், இயைந்து விருந்தினர்களுக்கு உபசரித்து உபசரித்து கடன் சுமையை கமப்பவர்களாகவும், பிறரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகக் கூடியவர்களாகவும், ஒருவர் மீது ஒருவர் சந்தேகத்தோடு தனது காலத்தை கடத்து பவர்களாகவும், கணவன் அல்லது மனைவி மீது வீண்பழி அபவாதங்கள் ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகும். இவை எல்லாம் நிலைத்து நிற்காது
இவர்களின் திருமணத்திற்கு பின் திடீரென சில உயர்வுகள் ஏற்பட்டு சில காலம் இருந்து பின் படிப்படியாக தகுதிகள் குறைந்து விரக்தியான சூழ்நிலையை தோற்று விக்கும் . பின் மீண்டும் உயர்வான நிலைகள் படிப்படியாக கிட்டும் .
இல்லற ஈடுபாடு , உடல் இச்சைகள் , சுகங்களை இவர்கள் முழுமையாக பெற முடியாத நிலையில் யாரோ ஒருவருக்கு மனக்குறை – குற்றம் , உடல் குற்றம் ஏற்பட்டு தடைப் படுத்திவிடும் .
இவர்கள் வாழ்க்கையில் இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று உல்லாச சல்லாபங்களை அடைய முடியாதபடி சூழ்நிலைகள் உருவாகும் .
Nalla oru katdurai
தங்கள் கருத்துகளுக்கு நன்றி