சூரியன் 7 ல் இருந்தால் தாமதமாக திருமணம் ஏற்படலாம்.
விவாகத் தடை உண்டு. தோஷ பரிகாரம் மூலம் நிவாரணம் பெறலாம்.
மத சம்பந்தமான விஷயங்களில் நம்பிக்கை குறைந்திருத்தல் , சமுகத்தில் வெறுப்பும் , எப்போதும் கம்மாவே சற்றிக் கொண்டிருத்தல் , மனைவி சொல் கேட்டல் , உஷ்ண சம்பந்தப்பட்ட வியாதி உள்ள இளைத்த சரீரம் கொண்ட சற்று முன் கோபம் உடைய மனைவி அமையும் வாய்ப்பு உண்டு.
பெண்களால் பொருள் வரும்.அதிர்ஷ்டம் அடைதல் , மேல் நாட்டுப் பொருட்களில் விருப்பம் அதிகம்.
தனிமையை அதிகம் விரும்புவார்.
சூரியன் இராகுவுடன் சம்பந்தப்பட்டிருந்தால் பெண் சேர்க்கை யினாலும் அபவாதத்தாலும் , மதிப்பும் சொத்தும் அழியக்கூடிய காலம் வரலாம்.
சூரியன் சந்திரன் சேர்க்கை பெற்று இருந்தால் புத்திரர் அற்பம் , செவ்வாய் கூடிடில் வெளி தேச வாசம் , புதன் கூடிடில் காரியத் தடையாகும்.சனி கூடில் பித்ரு தோஷம் , சுக்கிரன் கூடினால் தரித்திரம் , பெண்ணால் துவேசம் உண்டு.
ரகசியமாக பிற பெண்களுடன் சேரல் , தன் மனைவியுடன் அற்ப சுகியாதல் , பொருள் கொடுத்த இடத்தில் துயரம்.சதிபதிகள் நொடிப்பொழுதில் மன வருத்தம் அடைந்து பிரிந்து வாழுதல்.
சூரியன் சத்ரு ஸ்தானத்தில் சனியுடன் கூடியிருந்தால் மனைவிரகசியமாக காமபீடை அடைவாள். இருதாரம் உண்டு.
மனைவி வரும் திசை கிழக்கு . ( இவரைப் பார்த்த சேர்க்கை கிரகத்தைப் பொருத்தது).7 – க்குரிய வர்க்கத் திலும் அமையலாம் .
மனைவி நிறம் – மாநிறம் அல்லது சிவப்பு ( தந்தை வைராக்கிய குணம் , வழியில் வரும் )
மனைவி குணம்:வைராக்கிய குணம்.
மனைவி இருக்கும் தூரம் – தான் இருக்கும் இடத்திலிருந்து 100 மைலுக்குள் ,
கணவனின் தொழில்: அரசு உத்தியோகம் ( அ ) செங்கல் வியாபாரம் அல்லது வியாபாரம் , மருத்துவத் தொழில் அச்சுத் தொழில் – பிரிண்டிங் சம்பந்தப்பட்ட தொழில் , புத்தகம் சம்பந்தப்பட்ட தொழில் , சூரியன் , சுக்கிரன் சேர்க்கை .
மேஷம் – சிம்மத்திலிருந்து 12 – ல் சந்திரன் இருப்பின் மனைவி நாசம் அடைவாள்.
சூரியன் 7 – ல் அழுத்தமான மேல் நோக்கிய அவயம் உள்ள மனைவி அமைவாள்.
சூரியன் , குரு , சனி சேர்க்கை காசநோய் ( டி.பி. ) ஏற்படலாம் .