இறந்தபின் உயிரின் நிலை-கருடபுராணம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

இறந்தபின் உயிரின் நிலை-கருடபுராணம்

பட்சி ராஜனான கருடன் , ஸ்ரீமத் நாராயணனை நோக்கிக் கேட்டான் : ‘

குணாநிதியே ! ஒரு மனிதன் இறந்தவுடன் அவன் என்னவாகிறான் , அவன் எமலோகத்திற்குச் செல்வது எங்ஙனம் ? அவன் சென்றடையும் எமதர்மனின் இருப்பிடம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி எனக்கு விளக்கிக் கூற வேண்டும் ! ‘

வசுதேவனான ஸ்ரீமந் நாராயணன் கருடனின் கேள்விக்குக் கீழ்க்கண்டவாறு பதிலுரைத்தார் :

கருடா ! ஒரு மனிதன் இறந்த பிறகு சென்றடையும் எமலோகத்தைப் பற்றி சுருக்கமாகக் கூறுகிறேன் , கேள் !

எமலோகத்தை உள்ளடக்கியதாக பதினாறு உலகங்கள் உண்டு . அவை அனைத்துமே மிகவும் பரந்து விரிந்தவை . பூமிக்கும் எமலோகத்திற்கும் இடையே எண்பதாயிரம் காத தூரம் உள்ளது .

கருடா ! ஒரு மனிதன் இப்பூவுலகில் வாழ்ந்து , நன்மை மற்றும் தீமைகளை அனுபவித்த பிறகு , அவன் செய்த வினைகளுக்கு ஏற்ப மரண நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

ஒருவன் நோயில் விழுவது அவனது பூர்வ வினைகளின் பலன்தான்.மரணமும் அவன் செய்த பாவ , புண்ணியங்களுக்கு ஏற்பவே நிகழ்கிறது.ஒவ்வொரு மனிதனுக்கும் , அவன் செய்த கர்மங்களின் பலாபலன்களுக்கு ஏற்பவே மரணம் நிகழுவும் செய்கிறது.

கருடபுராணம்

ஒருவன் மரணம் அடைந்துவிட்டால் , அவனது இறந்த உடலுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று இப்போது கூறுகிறேன்.

  • மரித்தவன் உடலை பசுஞ்சாணம் மெழுகி தூய்மைப் படுத்தப்பட்ட இடத்திலேயே கிடத்த வேண்டும்.
  • மரித்தவன் உடலைச் சுற்றி எள்ளையும், தர்ப்பைப் புல்லையும் தூவி வைக்க வேண்டும்.
  • துளசி இலைகளையும் சாளக்கிராமத்தையும் அவன் உடல் அருகில் வைக்க வேண்டும்.
  • சாமசூக்தத்தை அந்த உடல் அருகே யாரேனும் அமர்ந்து பாராயணம் செய்ய வேண்டும்.
  • சிறிதளவேனும் தங்கத்தை இறந்த உடலின் மீது வைக்க வேண்டும்.
  • வாய் , நாசித் துவாரங்கள் , கண்கள் , காதுகளில் சிறிதளவு தங்கத்தை வைக்க வேண்டும்.துளசி இலைகளை மரித்தவனின் இரு கைகளிலும் கழுத்திலும் வைக்க வேண்டும்.
  • மரித்தவன் உடலை இரு துணிகளால் போர்த்த வேண்டும்.குங்குமப்பூ மற்றும் பச்சரிசியைப் போட்டு வைக்க வேண்டும் .
  • பூக்களால் அந்த உடலை அலங்கரித்து , வீட்டின் பின்வாசல் வழியாக மரித்தவனின் மகன் , உறவினர்கள் தோள்களில் சுமந்து தகனம் செய்யும் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
  • தகனம் செய்யும் இடத்தில் மரித்தவனின் தலை வடக்கு திசைநோக்கி இருக்கும்படி கிடத்த வேண்டும்.
  • இறந்தவனின் புத்திரன் கிழக்கு நோக்கி அமர வேண்டும். தகனம் செய்யும்போது , தகன இடம் அண்மையில் வேறுஉடல் ஏதும் தகனம் செய்யப்படாத இடமாக இருக்க வேண்டும்.
  • சிதையானது சந்தனம், துளசி, பலாச மரமாக இருத்தல் வேண்டும். இவை அனைத்தும் மரித்தவன் உடலை தகனம் செய்வதற்கு முன்பான சடங்காக கூறினேன்..

தொடரும்….

Leave a Comment

error: Content is protected !!