10ம் வீட்டு கிரக பலன்கள் (10th house in astrology )
10ம் வீட்டு கிரக பலன்கள் : பத்தாம் அதிபதி(10th house in astrology) பலமுள்ளதாக இருந்து உச்சம் பெற்று அல்லது சொந்த ராசியிலும் அல்லது சொந்த நவாம்சம் பெற்றால் அந்த ஜாதகரின் பெற்றோர்களின் மகிழ்ச்சி கடைசிவரை அனுபவிப்பர் புகழ் மற்றும் நல்ல செயல்களும் செய்வார்
- 10-ம்அதிபதி(10th house in astrology) பலம் இல்லாமல் இருந்தால் ஜாதகர் தன்னுடைய வேலைகளில் தடைகளை சந்திக்க நேரும். ராகு திரிகோணம் மற்றும் கேந்திரத்தில் இருந்தால் மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் தியாகம் செய்து மகானாக விளங்குவார். நற்செயல்களாலும் மத ஆசாரங்களிலும் சிறந்து விளங்குவார்.
- பத்தாம் அதிபதி சுபர்களுடன் அனுகூலமான வீடுகளில் இருந்தால் ஒருவர் எப்போதும் நன்மையே அடைவார். அரசாங்க ஆதரவும், வியாபாரத்தில் லாபமும் பெறுவர் இந்த சூழ்நிலை மாறி இருந்தால் எதிரிடையான விளைவுகள் கிடைக்கும்
- 10, 11 இந்த இரண்டு இடங்களில் அசுபர்கள் இடம் பெற்றால் ஜாதகர் கெட்ட செயல்களிலும் சொந்த மக்களை வெறுப்பவராகவும் இருப்பார்.
- எட்டில் ராகு இருக்க பத்தாம் அதிபதி எட்டாம் அதிபதியுடன் இருந்தாலும் பார்த்தாலும் அந்த ஜாதகர் மற்றவர்களை வெறுப்பர். முட்டாளாக இருப்பர்.
- சனி செவ்வாய் மற்றும் பத்தாம் அதிபதி சேர்ந்து ஏழாம் இடத்தில் இருந்து ஏழாம் அதிபதி அசுபர்களுடன் சேர்ந்து இருந்தால் ஜாதகர் சிற்றின்பங்களில் ஈடுபட்டுக்கொண்டும், வயிற்றுக்கு தீனி போட்டுக் கொண்டு இருப்பார்
- பத்தாம் அதிபதி(10th house in astrology) உச்சம் பெற்று குருவின் கூட்டத்திலும், ஒன்பதாம் அதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் கவுரவம், செல்வம், வீரம் அடையப் பெறுவார் ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்வு பெற பதினோராம் அதிபதி பத்தாம் வீட்டிலும் பத்தாம் அதிபதி லக்னத்திலும் பத்தாம் அதிபதி சேர்க்கை பெற்று மீனத்தில் குரு உடன் இருந்தால் ஜாதகர் சந்தேகமில்லாமல் மகுடம் ஆபரணம் பெற்று மகிழ்ச்சி அடைவார்
- ராகு சூரியன் சனி மேலும் செவ்வாய் 11-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் தன்னுடைய வேலைகளை அரைகுறையாக செய்வர்
- குரு மீனத்தில் சுக்கிரன் உடனிருக்க லக்னாதிபதி பலம் பெற்று சந்திரன் உச்சம் பெற்றிருந்தால் அவர் சுற்றி தெரிந்தவராகவும் செல்வந்தராகவும் இருப்பர்
- பத்தாம் அதிபதி(10th house in astrology) பதினொன்றாம் இடத்தில் பதினோராம் அதிபதி லக்னத்தில் சுக்கிரன் பத்தாம் வீட்டிலும் இருந்தால் ஜாதகர் விலைமதிக்க முடியாத உயர்ந்த ரத்தினக் கற்களை பெறுவார்
- பத்தாம் அதிபதி லக்னத்திலும் லக்னாதிபதியுடன் சந்திரன் சேர்ந்து கேந்திர , திரிகோணங்களில் இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு நல்ல செயல்களை செய்வதற்கு விருப்பமுடையவர்
- பத்தாம் அதிபதி உச்சம் பெற்று திரிகோணத்தில் அல்லது கேந்திரத்தில் இருந்து குரு பார்வை பெற்று இருப்பின் ஒருவர் நல்ல செயல்களைச் செய்வார்
- சனி பத்தாம் இடத்தில் நீசமடைந்த கிரகத்துடன் நிற்க, நவாம்ச லக்னத்தில் பத்தாம் அதிபதி அசுபர் களுடன் இருந்தால் ஜாதகன் தீய செயல்களில் ஈடுபடுவர்
- பத்தாம் அதிபதி(10th house in astrology) எட்டாம் இடத்தில் எட்டாம் அதிபதி பத்தாம் இடத்தில் அசுபர்களுடன் இருந்தால் அவர் தீய செயல்களை செய்வார்
- பத்தாம் அதிபதி பலம் இழந்து எட்டில் நிற்க எட்டாம் அதிபதி பத்தாம் இடத்தில் பாவர்களுடன் நிற்பின் அந்த ஜாதகர் ஈடுபடும் காரியங்கள் தடைபடும், வெற்றி பெறமாட்டார்கள்.
- பத்தில் சந்திரன் நின்றிட பத்தாம் அதிபதிக்கு பத்தாம் அதிபதி திரிகோணத்தில் நிற்க லக்னாதிபதி கேந்திரத்தில் நிற்க அந்த ஜாதகர் புகழ் பெற்றவர் ஆவார்
- பதினோராம் அதிபதி பத்தில் நிற்க,பத்தாம் அதிபதி பலமாகவும், குரு பார்வையுடன் இருந்தால் அந்த ஜாதகரும் புகழ் பெற்றவர்களாக திகழ்வார்கள்
- லக்கினத்திலிருந்து ஐந்தாம் இடத்தில் சந்திரன் இருந்திட, பத்தாம் அதிபதி ஒன்பதில் நிற்க, லக்னாதிபதி பத்தில் நிற்க அந்த ஜாதகன் புகழ் பெற்றவர்