அடிப்படை ஜோதிடம் -பகுதி-36-9ம் வீட்டு கிரக பலன்கள்-மகரிஷி பராசரர்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

9ம் வீட்டு கிரக பலன்கள்

9ம் வீட்டு கிரக பலன்கள்  : 9-ம் இடத்து அதிபதி ஒன்பதில் பலமாக இருப்பின் அந்த ஜாதகர் அதிர்ஷ்டசாலி அவர்

  • லக்னாதிபதி பலம் உடன் நின்றிட, ஒன்பதாம் அதிபதி கேந்திரத்தில் நிற்க, குரு ஒன்பதில் நிற்பின் அந்த ஜாதகர் அதிர்ஷ்டசாலி ஆவார்
  • ஒன்பதாம் அதிபதி நீச்சம் பெற ஒன்பதாம் இடத்திற்கு 2,4-ல் செவ்வாய் இருப்பின் அந்த ஜாதகரின் தகப்பனார் ஏழையாக இருப்பார்.
  • ஒன்பதாம் அதிபதி பரம நீச்சமாக இருந்து, சுக்ரன் லக்ன கேந்திரங்களில் நிற்க, நவாம்ச லக்னாதிபதி இடமிருந்து ஒன்பதில் குரு நிற்பின் அந்த ஜாதகரின் தகப்பனார் நீண்டநாள் வாழ்வார்
  • ஒன்பதாம் அதிபதி கேந்திரம் ஏற குரு பார்த்திடில் அந்த ஜாதகரின் தகப்பனார் அரசனை போல் வாழ்வார்.
  • ஒன்பதாம் அதிபதி 10இல் நிற்க ,பத்தாம் அதிபதியை சுபர் பார்க்க அந்த ஜாதகரின் தகப்பனார் பணக்காரராக மட்டுமின்றி ,மிகப் பிரபலமான வராகவும் இருப்பார்.
  • ஒன்பதாம் அதிபதி 11ல் நிற்க. சூரியன் பரம உச்சத்தில் நின்றிட அந்த ஜாதகரின் தகப்பனார் பரிசுத்தமானவர், நீதிமான், அரசுக்கு வேண்டியவர்.
  • சூரியன் கேந்திரங்களில் நிற்க, ஒன்பதாம் அதிபதி ஏழாம் இடத்தில் குருவுடன் நின்றாலோ அல்லது 7-ஆம் இடத்தை குரு பார்த்தாலும் அந்த ஜாதகர் தகப்பனாரிடம் மிகுந்த பாசம் உடையவர்
  • ஒன்பதாம் அதிபதி இரண்டில் இருந்தாலும் இரண்டாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் அந்த ஜாதகர் தனது 32 வயதில் அதிர்ஷ்டம் பெறுவார்
  • ஒன்பதாம் இடத்தில் லக்னாதிபதி ஆறாம் அதிபதியுடன் நிற்பின் அந்த ஜாதகரின் தந்தையுடன் சண்டை சச்சரவு எப்பொழுதும் இருக்கும்
 
9ம் வீட்டு கிரக பலன்கள்

 

  • பத்தாம் அதிபதி, மூன்றாம் அதிபதி இந்த அதிபதிகள் பலமின்றி நிற்க ஒன்பதாம் அதிபதியும் பலத்த இழந்தாலோ அல்லது பாவிகள் உடன் நின்றாலும் அந்த ஜாதகர் உணவை பிச்சை எடுத்து உண்பார்
  • பன்னிரண்டாம் அதிபதி லக்னத்தில் நிற்க, ஆறாம் அதிபதி ஐந்தில் நிற்க, எட்டாம் அதிபதி ஒன்பதில் நிற்க, சூரியன் 6 , 8 , 12ஆம் இடங்களில் மறைவு ஸ்தானங்களில் அமர்ந்திட அந்த ஜாதகரின் பிறப்பிற்கு முன்னே தகப்பனார் உயிர் விடுவார்
  • சூரியன் எட்டில் நிற்க எட்டாம் அதிபதி ஒன்பதில் நின்றாலும் அந்த ஜாதகர் பிறந்த ஒரு வருடத்திற்குள் ஜாதகரின் தகப்பனார் உயிர் விடுவார்
  • ஒரு ஜாதகத்தில் பன்னிரண்டாம் அதிபதி ஒன்பதிலும் நவாம்சத்தில் அந்த ஒன்பதாம் அதிபதி நீச்சம் பெற்று இருப்பின் குழந்தையின் தகப்பனார் மூன்று அல்லது பதினாறு வயதில் உயிர் விடுவார்
  • எட்டாம் இடத்து அதிபதி சூரியனுடன் நிற்க லக்னாதிபதி எட்டில் இருப்பின் அந்த குழந்தையின் தகப்பனார் குழந்தையின் ரெண்டு அல்லது 12 வயதில் மரணம் அடைவார்
  • சந்திரனுக்கு ஒன்பதில் சனியும் சூரியனுடன் ராகு சேர்ந்து இருப்பின் ஏழேழு அல்லது பத்தொன்பது வயதில் அவரது தகப்பனார் மரிப்பார்
  • 9 மற்றும் 12ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை ஆனால் அந்த ஜாதகர் தனது 44வது வயதில் தகப்பனாரை இழப்பார்
  • சூரியன் நவாம்சத்தில் சந்திரன் நிற்க லக்ன அதிபதி எட்டில் இருப்பின் அவரது தகப்பனார் இவரது 50 ஆவது வயதில் உயிரிழப்பார்
  • மூன்றாம் இடத்தில் சூரியனும் ஒன்பதில் ராகுவும் நின்றிட அந்த ஜாதகரின் ஆறு அல்லது இருபத்தைந்து வயதில் அவரது தகப்பனாரின் மரண காலம் ஆகும்
  • லக்னத்திற்கு எட்டாம் இடத்திற்கு ஏழில் சனி நிற்க சனிக்கு ஏழில் சூரியன் நின்றால் அந்த ஜாதகரின் தகப்பனாருக்கு இவரது 21, 26 அல்லது 28 வயதில் மரணம் அடைவார்
  • ஒன்பதாம் அதிபதி நீச்சமாக ஒன்பதாம் அதிபதி ஒன்பதில் இருப்பின் அந்த ஜாதகர் தனது 26 அல்லது 30 வயதில் தகப்பனார் இறந்து விடுவார்
  • ஒன்பதாம் அதிபதியுடன் சுக்கிரன் தனது பரம உச்சத்தில் இருக்க சனி மூன்றாமிடத்தில் இருப்பின் அந்த ஜாதகர் ஏராளமான அதிர்ஷ்டங்களை பெறுவார் கடக லக்னத்திற்கு இது பொருந்தும்
  • ஒன்பதில் குரு நிற்க எட்டாம் அதிபதி கேந்திரத்தில் நிற்பின் அவரது 20 வயதில் அதிர்ஷ்டங்களை பெறுவார்
  • புதன் பரம உச்சத்தில் நின்றிட ஒன்பதாம் அதிபதி ஒன்பதில் நிற்பின் 36வது வயதில் ஏராளமான செல்வம் அடைவார்
  • ஒன்பதாம் அதிபதியும் லக்னாதிபதியும் பரிவர்த்தனை ஆயினும் குரு ஏழில் நின்றாலும் அவருக்கு வீடு வாகன யோகங்கள் செல்வங்கள் பெருகும்
  • ராகு லக்னத்திற்கு 9க்கு 9-ல்  நிற்க அதாவது லக்னத்திலிருந்து ஐந்தில் நிற்க ஐந்தாம் அதிபதி எட்டில் நிற்க ஒன்பதாம் அதிபதியும் பலமிழந்து நிற்பின் அவருக்கு அதிர்ஷ்டமே இல்லை என்று கூறுவாயாக
  • லக்னாதிபதி பலம் இழந்து நிற்க ஒன்பதில் சனி சந்திரன் சேர்ந்து இருப்பின் அந்த ஜாதகர் பிச்சை எடுத்து உணவு உண்பார்
    

Leave a Comment

error: Content is protected !!