நீச-அஸ்தங்க கிரகங்கள் நிகழ்த்தும் நிஜங்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

நீச-அஸ்தங்க கிரகங்கள் நிகழ்த்தும் நிஜங்கள்

ஒவ்வொரு கலையிலும் ஓர் உன்னதம் நிறைந்து கிடக்கிறது.ஓவியம் ஓர் உயர்ந்த கலை.அது சேர்க்க சேர்க்க வருவது.சரியான விகிதத்தில் வண்ணங்களைக் குழைத்துச் சேர்ப்பதில் அழகிய ஓவியம் அகப்படுகிறது.

சிற்பம் மற்றொரு விதமான மகத்தான கலை அது நீக்க நீக்க வருவது. தேவையற்ற பகுதிகளைக் கல்லிலிருந்து நீக்கும் போது அங்கே அழகிய சிற்பம் தோன்றுகிறது .அது நம் கண்களையும் கருத்துக்களையும் கவருக்கின்றது.கைதொழுது வணங்குகிற கடவுளாக வடிவம் எடுக்கிறது . காண்போரை பக்தியுடன் வணங்கச் செய்து குறைகளை நீக்கி அருள்மாரி பொழியும் ஆற்றல் பெறுகிறது.

ஜோதிடம் ஓர் அற்புதமான அரிய கலை . இது கசடற கற்க வருவது.நமது ஜோதிட ஞானிகள் , சித்தர்கள் , தங்கள் தவ பலத்தாலும் , தெய்வ அனுக்கிரகத்தினாலும் உருவாக்கிய ஜோதிட சுருதிகளையும் , சூட்சமங்களையும் கசடற கற்பதாலும் , கற்றபின் அதை நடைமுறையில் கடைபிடிப்பதாலும் ஜோதிடம் மக்கள் மத்தியில் மாபெரும் சக்தியாக விளங்குகிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் ஜோதிடத்தில் பரவி கிடக்கிறது .அது அவரவர் கிரக அமைப்புக்கும் நடைபெறும் திசாபுத்திக்கும் ஏற்ப மாறுபடுகிறது . அன்றாட நிகழ்வுகளில் வேறுபடுகிறது என்பது நிஜத்திலும் நிஜமாகும்.

தவசீலர்களாகிய நமது ஜோதிட ஞானிகள் மானுடம் செழித்து வாழ , வளர – வாரம் , திதி , நட்சத்திரம் , யோகம் , கரணம் , கிரகங்களின் பார்வைகள் , பலங்கள் , பலவீனங்கள் , அசைவுகள் , கிரகணங்கள் , யோகங்கள் , ஓரைகள் போன்றவைகளை வழங்கி வருவது நமக்கு கிடைத்த பொக்கிஷமே !

கிரகங்களின் பலம் , பலவீனம் அறிந்து எந்தச் செயலும் செய்யப்படுவது அவசியம் . ஒரு கிரகம் உச்ச பலம் பெறும் போது அதன் ஆதிபத்திய காரக பலன்களும் தனது காரக பலன்களும் விருத்தி ஏற்படும். ஒரு கிரகம் நீசம் பெறும் போது அதன் ஆதிபத்திய காரக பலன்களும் தனது காரக பலன்களும் நசிந்து விடுகிறது.

ஒரு கிரகம் உச்ச இராசியில் நின்றாலும் உச்ச பாகையில் நிற்கவில்லை என்றால் அது உச்ச பலனை தருவதில்லை . நீச இராசியில்நின்றாலும் நீச்ச பாகையில் நிற்கவில்லையென்றால் அது நீச்ச பலனை தருவதில்லை. இந்த கருத்தை மனதில் நன்கு பதியவைத்துக் கொண்டு பலன்கள் உரைத்தால் வாடிக்கையாளர்களிடம் வெற்றி பெற முடியும்

குறிப்பாக உறவுகளைக் குறிக்கும் ஸ்தானங்களான 3,4,5,7,9,11 ஆகிய இடங்களில் நீச , அஸ்தங்க கிரகங்கள் இருந்து , அந்த வீட்டில் அதிபதி பலவீனம் அடைந்து, சுபர் பார்வை இல்லாமல் இருந்தால் நீச , அஸ்தங்க கிரகங்களின் திசாபுத்தி நடைபெறும் காலம் உடல் நிலை பாதிப்பும் , உயிரிழப்பும் ஏற்படும். அவர்கள் அமர்ந்த ஸ்தானத்துக்குரிய உறவுகளுக்கு கடுமையான உடல் நிலை பாதிப்பும் உயிரிழப்பும் ஏற்படும்.

இந்த கருத்தினை வலியுறுத்தும் பாடல் ஒன்று பழம் பெரும் ஜோதிட நூலான ” காக்கயர் நாடி ” எனும் நூலில் இடம் பெற்றுள்ளது.

பாடல் :

” சேரவேழிடத்திற் செவ்வாய் சேயினங்கிசங்களேனு
மாரவவ்வீடு சேய்வீ டாகினுமலதிலக்ன நேரச்சேயந்த வேழி னீசாத்த மனக்கோணிற்கத்
தூரத்தாள் கணவனில்லாத டொழும் பாபர் சோர்வாற்சாவே”

பாடலின் விளக்கம் : 7 ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தாலும் 7 ஆம் . அங்கிஷாதிபதி செவ்வாயே ஆனாலும் , 7 ஆம் வீடு செவ்வாயின் வீடாக இருந்தாலும் , அல்லது ஜென்மஇலக்கினத்திற்கு 7 இல் நீச , அஸ்தமன மடையப்பெற்ற கிரகம் இருக்க கணவனில்லாதவளாம்.

பாடலின் விதிப்படி கணவனை இழந்த இரண்டு பெண்களின் ஜாதகங்களை இனிக்காண்போம்.

உதாரண ஜாதகம் 1

பிறந்த தேதி பிறந்த நேரம் : 11.5.1976
மாலை 6.20
பிறந்த நட்சத்திரம் : சித்திரை 1 செவ்வாய் திசை இருப்பு : 6-0-25

நீச-அஸ்தங்க கிரகங்கள் நிகழ்த்தும் நிஜங்கள்

ஜாதக விளக்கம் : இந்த ஜாதகி துலாம் இலக்கினம் , கன்னி இராசி , சித்திரை நட்சத்திரத்தில் பிறந்துள்ளார் . கணவனைக் குறிக்கும் ஸ்தானமான 7 ஆம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் நின்று , சூரியனைக் கூடி அஸ்தங்கமடைந்துள்ளார்.மேலும் அம்சத்தில் நீசம் பெற்றுள்ளார் . 2,7 க்குரிய செவ்வாய் கடகத்தில் ஜென்ம சத்துருவைக்கூடி நீச இராசியில் நின்றுள்ளார்.இந்த பெண்ணுக்கு அஸ்தங்கமடைந்த குரு திசையில் , 8 ஆம் அதிபதியான சுக்கிரபுத்தியில் வாகன விபத்து ஏற்பட்டு தனது கணவனை இழக்க நேர்ந்தது.

உதாரண ஜாதகம் 2

பிறந்த தேதி:17.11.1982

பிறந்த நேரம் :  மாலை 6.30

பிறந்த நட்சத்திரம்: கேட்டை 2

புதன் திசை இருப்பு : 9.3.07

நீச-அஸ்தங்க கிரகங்கள் நிகழ்த்தும் நிஜங்கள்

ஜாதக விளக்கம் :
இந்த ஜாதகி ரிஷபம் இலக்கினம் , விருச்சிகம் இராசி , கேட்டை நட்சத்திரத்தில் பிறந்துள்ளார் .ரிஷப இலக்கினத்துக்கு 7 க்கு உரியவரான செவ்வாய் , கேதுவைக் கூடி 8 இல் மறைந்துள்ளார்.அவரை பாதகாதிபதியான சனி பகவான் 3 ஆம் பார்வையாகப் பார்க்கிறார். செவ்வாய்க்கு சுபர்கள் பார்வை இல்லை.

இல்லற வாழ்க்கையைக் குறிக்கும் 7 ஆம் இடத்தில் அஸ்தங்கமடைந்த சுக்கிரன் அமர்ந்து உள்ளார்.அவருடன் நீச சந்திரன் இணைந்துள்ளார்.இவருக்கு களத்திர காரகனான சுக்கிர திசையில் , களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய் புத்தி நடைபெற்றபோது வாகன விபத்தில்  இவருடைய கணவன் மரணமடைந்தார்.

பொதுவாக பெண்கள் ஜாதகத்தல் 7 ஆம் அதிபதி செவ்வாயாக வந்து , 7 ஆம் அதிபதிக்கு சனி , செவ்வாய் தொடர்பு ஏற்பட்டாலும் கணவனுக்கு வாகனங்களால் பாதிப்பு ஏற்படும் என்று அனுபவம் அறிவுறுத்துகிறது.

முக்கியமாக நமது ஜோதிட ஞானிகள் படைத்தளித்த ஜோதிட உணர்ந்துக் கொண்டால் ஒருவரின் ஜாதகத்தில் அமைந்துள்ள சுருதிகளில் புதைந்துள்ள ஜோதிட சூட்சும இரகசியங்களை கிரக அமைப்புக்கு எற்றவாறு சுருதிகளைப் பயன்படுத்தி வெற்றி பெற முடியும் . இதுவே நீச அஸ்தங்க கிரகங்கள் நிகழ்த்தும் நிஜங்களாகின்றன .

Leave a Comment

error: Content is protected !!