லக்கினத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

லக்கினத்தில் சனி

லக்னத்தில் சனி இருந்தால்

சோம்பல் குணம் உள்ளவன்.ஞாபக மறதி,வாழ்வில்துக்கம் வரும்.காமம் , இச்சை அதிகமுள்ளவன்.அடிக்கடி ஏதாவது ஒரு வியாதியால் பாதிப்பு.தடித்த சரீரம்.பிடிவாத குணம் உடையவன்.இத்தகையவருக்கு சுக்கிர பார்வை கிடைத்தால் , விதவைக்கு கணவனாகவும் அல்லது அவர்களது தொடர்போ ஏற்படும்.

உலக அனுபவமும் , நல்ல கல்வியும் அமையும்.இளம் வயதில் நோயாளி ஆகவும் , தெளிவாகப் பேச முடியாதவன் ஆகவும் , காமத்தால் துன்பமுறுபவனாகவும் அதே சமயம் அரசியல்வாதியாகவும் இருப்பான்.

கடகம் , துலாம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் இவை லக்கினமாகி அதில் சனி இருக்கப் பிறந்தவன் நல்ல அழகுள்ளவன்.நல்ல சுக போகங்களை அனுபவிப்பான். இவருடன் ராகு , கேது , சேர்க்கை பெற்றால் ஊனம் அடைவான்.மாமனார் வழியும் அப்படியே , அபகரித்து உண்டு மோசடி செய்வார்கள்.

லக்கினத்தில் சனி

கெட்ட ஆதிபத்யம் பெற்று பலமோடு இருப்பின் , விஷத்தால் பயம் , வஞ்சனையும் சோர பயமும் ஏற்படும் .நெருப்பு வகையால் பீடை , இடம் விட்டு இடம் மாறுதல் , சிறை பயம் , ஊனம் , மூலம், நாசிகளில் துர்கந்தம் போன்ற நோய் தொல்லைகளின் பீடிப்பு.மாமனார் வகையில் அபகீர்த்தி இவைகள் ஏற்படும்.இவருடன் வேறு கிரகம் சேர்ந்து இருப்பின் இச்சனி பகவான் பாதிப்பை தரார்.

சனி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்னம் சந்திரன் , தசா புத்தி அந்தர நாதன் இருப்பின் சொல்லப் பட்ட சுப பலன்கள் மாறி எதிரிடையான பலன்கள் நடக்கும் . தீய பலன்கள் செயல் படாது.

சனி நின்ற நட்சத்திரத்தின் சாதக நட்சத்திரத்தில் லக்னம் , சந்திரன் , தசா புக்தி அந்த நாதன் இருப்பின் சுப பலன்கள் பலப்பட்டு சிறப்பு தரும் .தீய பலன்கள் பலப்படும்.சொல்லப்பட்ட பலன்கள் சனி தசா புத்தி அந்தர காலங் களில் நடைமுறைக்கு வரும் .

Leave a Comment

error: Content is protected !!