Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம்:பகுதி34-7ம் வீட்டு கிரக பலன்கள்(மகரிஷி பராசரர்)

அடிப்படை ஜோதிடம்:பகுதி34-7ம் வீட்டு கிரக பலன்கள்(மகரிஷி பராசரர்)

7ம் வீட்டு கிரக பலன்கள்(மகரிஷி பராசரர்)

7-ம் வீட்டு கிரக பலன்கள் : ஏழாம் இடத்து அதிபதி(7th house in astrology) தனது சொந்த வீட்டிலோ, உச்சத்திலோ இருப்பின் தனது மனைவி மூலமாக சந்தோஷமான வாழ்க்கையை நடத்துவார்

ஏழாம் இடத்து அதிபதி 6,8,12-ல் இருப்பின் அந்த ஜாதகர் மனைவி நோய்வாய்ப்பட்டவர். சொந்த வீட்டில் அல்லது உச்ச வீட்டில் உள்ள கிரகங்களுக்கு இது பொருந்தாது.

ஏழாமிடத்தில்(7th house in astrology) சுக்கிரனுடன் பாவ கிரகங்கள் எங்கு இருந்தாலும் மனைவியை இழப்பார்.

ஏழாம் இடத்து அதிபதி பலமாக இருந்து அல்லது சுபர்களுடன் சேர்ந்து இருந்து சுபர்களால் பார்க்கப்பட்டால் அந்த ஜாதகர் பணக்காரராகவும், சந்தோஷமான வராகவும், அதிர்ஷ்டசாலியாகவும் விளங்குவார்.

ஏழாம் இடத்து(7th house in astrology) அதிபதி பலமிழந்து எதிரி வீட்டில் இருப்பின் அவருக்கு நோய்வாய்ப்பட்ட மனைவி அல்லது பல மனைவிகள் இருப்பர்.

ஏழாம் இடத்து அதிபதி சனி வீட்டில் இருப்பினும் சுக்கிரன் சுபர் பார்த்தாலும் பல மனைவிகள் இருப்பார்கள்.

7-ல் சூரியன்-நீச்ச பெண்களுடன் தொடர்பு.

7-ல் சந்திரன் -அந்தந்த ராசிகளின் தன்மைக்கு ஏற்ப அந்தந்த குண பெண்களுடன் காம லீலை செய்வார்.

7-ல் செவ்வாய் ,சனி-பிறர் மனைவியை நோக்குபவர்/ நோக்கு பவள்.

7-ல் புதன்-தாழ்ந்த பெண்கள் தொடர்பு.

7-ல் குரு கர்ப்பம்தரித்த பிறர் மனைவியுடன் உறவு.

7-ல் சனி-கேது-ராகு-கீழ்நிலை பெண்கள் தொடர்பு

விளக்கம்:மேலே கூறியபடி இருப்பின் அப்படியே பலன் கூறக்கூடாது அந்தந்த ஜாதகத்தில் உள்ள மற்ற கிரக அமைப்புகளை அனுசரித்தே பலன் கூறவேண்டும்

7-ல்செவ்வாய்-அழகிய மார்பு உள்ள பெண்கள்.

7-ல் சனி நோயுள்ள கடினமான மார்பகம் கொண்ட பெண்கள்.

7-ல் சுக்கிரன் குண்டான அதே சமயம் அழகான மார்பகம்.

தேய்பிறை சந்திரன் ஐந்திலும் 7 மற்றும் 12-ல் பாவர்கள் இருந்தால் அந்த ஜாதகர் மனைவியின் கட்டுப்பாட்டில் இருப்பார்.

7- ல் செவ்வாய்/ சனி -விலைமாதர் தொடர்பு, பிறர் மனைவி நோக்குதல்.

7-ம் வீட்டு கிரக பலன்கள்

செவ்வாயின் நவாம்சத்தில் சுக்கிரன் இருப்பின் செவ்வாயுடன் சேர்ந்து இருந்தாலோ, பார்வை இருந்தாலோ அந்த ஜாதகர் தன் மனைவியின் மர்ம ஸ்தானத்தில் முத்தமிடுவார்.

சனியின் நவாம்சத்தில் சுக்கிரன் இருப்பின் சனியுடன் சேர்ந்து இருந்தாலும் பார்வை இருந்தாலும் அந்த ஜாதகர் தன் மனைவியின் மர்ம ஸ்தானத்தில் முத்தமிடுவார்

ஏழாம் இடத்து அதிபதி உச்சம் பெற்று ஏழாமிடத்தில் பலம் பெற்ற லக்னாதிபதியும் இருப்பின் அத்துடன் சுப கிரகமும் சேர்ந்திடில் நல்ல குணமுள்ள மனைவியும் புத்ர பெளத்ர என்று சந்தோஷமாக இருப்பார்

ஏழாம் இடத்தில்(7th house in astrology)  அல்லது ஏழாம் இடத்து அதிபதி பாவ கிரகங்கள் சேர்க்கை பெற்று பலம் குறைந்தும் இருப்பின் அந்த ஜாதகரின் மனைவி கெட்ட குணம் உள்ளவர்.

விளக்கம்:

ஏழாம் இடத்து அதிபதி பாவகிரகம் ஆக இருந்து, ஏழாம் இடத்தில் பாவ கிரகம் இருக்க, ஏழாமிடத்தில் பலம் குறைந்து, ஏழாம் இடத்து அதிபதியும் பலம் குறைந்து காணப்படில் அந்த ஜாதகரின் மனைவி கெட்ட குணம் மற்றும் கெட்ட செய்கையில் ஈடுபடுவார்

இரண்டாமிடத்து அதிபதி பலம் குறைந்து 6, 8 ,12-ல் இருந்தாலும் அல்லது ஏழாம் இடமே பலமின்றி காணப்படில், அந்த ஜாதகர் தன் மனைவியை இழப்பார்

ஏழாம் இடத்தில் தேய்பிறை சந்திரன் நிற்க, ஏழாம் இடத்து அதிபதி 12-ல் மறைய சுக்கிரன் பலமின்றி இருப்பின் அந்த ஜாதகருக்கு தாம்பத்திய உறவு மிக குறைவாகும்.

ஏழாமிடத்தில் தேய்பிறைச் சந்திரன் நிற்க, ஏழாம் இடத்து அதிபதி 12-ல் மறைய, சுக்கிரன் பலமின்றி இருப்பின், ஏழாமிடம் பலம் குன்றி நவாம்சத்தில் ஏழாமிடம் அல்லது ஏழாம் இடத்து அதிபதி அலி கிரகமாக இருப்பின் அந்த ஜாதகர் இரண்டு மனைவிகள் உள்ளவர்.

செவ்வாய் சுக்கிரன் ஏழில் இருப்பினும் அல்லது சனி ஏழில் இருக்க லக்னாதிபதி எட்டில் இருந்தால் அந்த ஜாதகருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர்.

சுக்ரன் இரட்டைப்படை ராசியில் இருந்து அந்த ஏழாம் அதிபதி உச்சமாக பலமாக இருந்தால் அந்த ஜாதகர் பல மனைவிகள் உள்ளவர்.

ஏழாம் இடத்து(7th house in astrology)  அதிபதி சுப கிரக வீட்டில் அமர்ந்து, சுக்கிரன் சொந்த வீட்டிலோ அல்லது உச்சமானாலோ அந்த ஜாதகருக்கு இளம் வயதில் திருமணம் நடக்கும்.

சூரியன் 7-ல் இருக்க ஏழாம் அதிபதி சுக்கிரனுடன் இருப்பின் இளம்வயதில் திருமணம்.

சுக்கிரன் இரண்டில் நிற்க ஏழாம் அதிபதி 11-ல் நின்றிட அந்த ஜாதகருக்கு இளம் வயதில் திருமணம் நடைபெறும். 

சுக்ரன் கேந்திரத்தில் நிற்க லக்னாதிபதி மகரம் , கும்பத்தில் இருப்பின் இளம் வயதில் திருமணம் நடைபெறும் .

சுக்ரன் கேந்திரத்தில் நிற்க சனி சுக்கிரனுக்கு ஏழில் நிற்க அவருக்கு இளம் வயதில் திருமணம் நடைபெறும்.

சந்திரனுக்கு ஏழில் சுக்கிரன் சுக்கிரனுக்கு ஏழில் சனி இருப்பின் அந்த ஜாதகருக்கு இளம்வயதில் திருமணம் நடைபெறும்.

லக்னாதிபதி பத்திலும் இரண்டாம் அதிபதி 11-லும் இருப்பினும் அந்த ஜாதகருக்கு இளம் வயதில் திருமணம் நடைபெறும்.

இரண்டு மற்றும் 11ம் அதிபதிகள் பரிவர்த்தனை ஆயின் இளம்வயதில் திருமணம் நடைபெறும்.

சுக்கிரன் எட்டாம் இடத்திற்கு ஏழில் நிற்பின், லக்னத்திற்கு 2-ல் இருப்பின், இரண்டாம் அதிபதி செவ்வாயுடன் இருப்பின் 22 வயது முதல் 27 வயதில் திருமணம் நடைபெறும்.

ஏழாம் அதிபதி 12-ல் மறைய லக்ன அதிபதி நவாம்சத்தில் எழில் இருப்பின் 23வயது முதல் 26 வயதுக்குள் திருமணம் நடைபெறும்.

ஐந்தில் சுக்கிரன், ராகு 5 அல்லது 9-ல் இருந்தால் 31 வயது முதல் 33 வயதில் திருமணம் நடைபெறும்.

லக்னத்தில் சுக்கிரன்  நின்றிட ஏழாம் அதிபதி 3-ல் இருந்தால் அந்த ஜாதகருக்கு 27 வயது முதல் 30 வயதிற்குள் திருமணம் நடக்கலாம்.

ஏழாம் இடத்து அதிபதி பலம் இல்லாமல் இருந்து சுக்கிரனுடன் சேர்ந்து எட்டில் இருந்தால் அந்த ஜாதகர் மனைவி 18 வயது அல்லது 33 வயதில் உயிர் விடுவார்.

ராகு 2-லும் செவ்வாய் 7-லும் இருப்பின் அந்த ஜாதகரின் மனைவி திருமணமாகி மூன்று நாட்களில் சர்ப்பம் தீண்டி மரணம் அடைவார்.

சுக்ரன் எட்டிலும் எட்டாம் அதிபதி சனி வீடாக அமைந்திடில்,  மனைவியின் மரணம் ஜாதகரின் 19 அல்லது 21 வயதில் நிகழும்

லக்னாதிபதி நீச்சம் ராசியிலிருந்து இரண்டாம் அதிபதி எட்டில் இருப்பின் ஜாதகரின் மனைவி இளம் வயதில் மரணம் அடைவார்

சுக்கிரனுக்கு மூன்றில் சந்திரனும், எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு 5-ல் நிற்க 19 வயதில் ஒரு திருமணமும் 22 வயதில் அடுத்த திருமணமும் 33 வயதில் மூன்றாவது திருமணமும் நடக்கும்.

செவ்வாய் ராகு மற்றும் சனி 6, 7, 8-ல் வரிசையாக நின்றிட அந்த ஜாதகரின் மனைவி நீண்ட நாள் உயிரோடு இருக்கமாட்டார்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!